என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டையில் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது
    • எம்.பி.க்கள், கலெக்டர் பங்கேற்றனர்

    புதுக்கோட்டை:

    பொதுமக்களின் வாழ்வா தார மேம்பாட்டிற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மூலமாக பல்வேறு திட்டங்கள் வேளாண்மைத்துறை, தொழில்துறை, தாட்கோ, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களின் முழு பயன்பாட்டையும் பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயலாற்றும் வகையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    . மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், எம்பி.க்கள் எம்.எம்.அப்து ல்லா, பொள்ளாச்சி கு.சண்மு கசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் ரேவதி, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்ட மேலாளர் (தாட்கோ) முத்துரெத்தினம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், உதவி பொதுமேலாளர் (நபார்டு) எஸ்.ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.





    • ஆலங்குடியில் இருதரப்பினர் மோதியதில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    • இச்சம்பவம் குறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் ராமையா மகன் சின்னகருப்பன் (வயது40). இவரது வீட்டின் அருகில் ஒரு பப்பாளி மரம் இருந்துள்ளது. அதன் அருகில் கோவிந்தன் மகன் வெற்றிவேல் (44), இவரது மனைவி தனலெட்சுமி (40) ஆகியோர் மாணிக்கம் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் பப்பாளி மரம் வெட்டியதில் இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் வெற்றிவேல் அவதூறாக பேசி கொலை முயற்சி விடுத் ததாகவும், தனலெட்சுமி சின்னகருப்பன் என்பவரை உருட்டு கட்டையால் தாக்கியதில் பலத்த ரத்த காயத்துடன் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சின்னகருப்பனை மீட்டு ஆலங்குடி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இச்சம்பவம் குறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


    • வன்னியப்பிள்ளை வயல் கிராமத்தை மையமாக வைத்து பகுதிநேர அங்காடி- கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது

    அறந்தாங்கி:

    குடியரசு தின விழாவையொட்டி அந்தந்த ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் மேலப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் அயூப்கான் தலைமையில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய அங்காடிக்கட்டிடம் மற்றும் வன்னியப்பிள்ளைவயல் கிராமத்தை மையமாக வைத்து பகுதிநேர அங்காடி அமைப்பது, நெகிழிப்பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவது, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் உள்ளிட்ட 15க்்கும் மேற்பட்ட கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று பின்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட மக்கள் நல அலுவலர் ஜெயசீலன், துணை வட்டாட்சியர் கவிதா, ஆதிதிராவிடர் நலத்துறை ஆய்வாளர் காமராஜ், கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி, ஊராட்சி மன்ற துணை தலைவர் நீதிராஜ், சுகாதாரத்துறை ஆய்வாளர் அருள் பிரகாசம், வனத்துறை ஆய்வாளர் கருணாநிதி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கருப்பையா உள்ளிட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், ஊராட்சி செயலாளர், கிராம பொதுமக்கள், இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    • மது விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
    • 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யபட்டது

    ஆலங்குடி:

    அறந்தாங்கி சாலை அருகில் மது பாட்டில் வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்றுக் கொண்டிருந்த தெற்கு பாத்தம்பட்டியை சேர்ந்த சிவசாமி மகன் ஆனந்தனை (வயது 23) கைது செய்து அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


    • ஆலங்குடியில் இருசக்கர வாகனம் திருட்டு போனது
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை போஸ் நகரைசேர்ந்த ஆறுமுகம் மகன் பிரபாகரன் (வயது 40). இவர் கேபிள் ஆபரேட்டர் தொழில் செய்து வருகிறார். இவர் ஆலங்குடி அருகே உள்ள ஏமாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் தனது இருசக்கர வாகத்தை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்த்த போது வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து செம்பட்டி விடுதி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • பொன்னமராவதி அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்
    • தார் சாலை தற்போது குண்டும் குழியமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலைமை உள்ளது

    பொன்னமராவதி:

    குடியரசு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதன் படி பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சீகம்பட்டியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கிய சில வினாடிகளில் அங்கிருந்த பொதுமக்களில் சிலர், 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை தற்போது குண்டும் குழியமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலமை உள்ளது. சீரான போக்குவரத்து இல்லாததால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    மேலும் ஏற்கனவே வந்து சென்ற 7 பேருந்துகளில் தற்போது ஒரு பேருந்து மட்டுமே வந்து செல்கிறது. ஆர்.பாலகுறிச்சியில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலை, வைரம்பட்டியில் இருந்து ஆர்.பாலகுறிச்சிக்கு செல்லும் சாலை ஆர்.பாலக்குறிச்சி விளக்கு சாலை உள்ளிட்ட ஏழு கிலோ மீட்டருக்கு இன்று வரை ஏன் புதிய தார் சாலை போடவில்லை.

    ஏற்கனவே நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் கொடுத்த தீர்மானத்தை ஏன் இன்று வரை நிறைவேற்றவில்லை என மீண்டும் மீண்டும் பொதுமக்கள் அதிகாரிகளை பார்த்து கேள்ளிவிகள் கேட்டனர். சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுங்கள் பின்னர் கிராம சபை கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கூச்சலிட்டு கலைந்து சென்றனர்.


    • கறம்பக்குடி ஒன்றியத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டபட்டது
    • விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா மற்றும் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதன்படி கறம்பக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் முருகேசன், துணைத்தலைவர் நைனா, முகமது வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


    • காதலுக்கு உண்மையான அன்பும், புரிதலும் இருந்தாலே போதும்.
    • கடல் கடந்து காதலித்தாலும் நிச்சயம் கரம்பிடிக்க முடியும்.

    புதுக்கோட்டை :

    காதலுக்கு மொழி, இனம் என்ற பாகுபாடு கிடையாது. காதலுக்கு உண்மையான அன்பும், புரிதலும் இருந்தாலே போதும். கடல் கடந்து காதலித்தாலும் நிச்சயம் கரம்பிடிக்க முடியும். அந்த வகையில், புதுக்கோட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஹாங்காங் நாட்டில் வேலைக்கு சென்றபோது அங்குள்ள இளம்பெண்ணை காதலித்து தனது சொந்த ஊரிலுள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் காத்தமுத்து என்கிற மணிகண்டன் (வயது 31). என்ஜினீயரிங் முடித்த இவர் ஹாங்காங் நாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு கடந்த 2 ஆண்டுகளாக சென் என்கிற செல்சீ (27) என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடு்த்து செல்சீயை மணிகண்டன் தனது சொந்த ஊரில் முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தார். இதற்கு காதலியின் வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து ஹாங்காங்கில் இருந்து மணிகண்டன் தனது சொந்த ஊருக்கு காதலியின் குடும்பத்தை அழைத்து வந்தார். புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் இந்து முறைப்படி செல்சீயை மணிகண்டன் நேற்று திருமணம் செய்துகொண்டார். ஹாங்காங்கை சேர்ந்த இளம்பெண்ணாக இருந்தாலும் தமிழ்நாட்டின் பாரம்பரிய முறைப்படி அவர் மணமகளுக்குரிய அடையாளமாக சேலை அணிந்திருந்தார். இதேபோல மணமகன் பட்டு, வேட்டி சட்டை அணிந்திருந்தார். மேளதாளம், நாதஸ்வரம் முழங்க காதலி கழுத்தில் மணிகண்டன் தாலிக்கட்டினார். அப்போது கூடியிருந்தவர்கள் மலர் தூவி மணமக்களை வாழ்த்தினர்.

    இந்த திருமணம் குறித்து மணிகண்டன் கூறுகையில், ``நான் ஹாங்காங்கில் பணிபுரிந்த இடத்தில் எனது காதலியை சந்தித்தேன். அதன்பின் பேசி பழகியதில் 2 வருடமாக காதலித்தோம். இந்திய கலாசாரப்படி திருமணம் செய்ய முடிவு செய்தோம். அவரது அம்மா, அப்பாவிடம் கேட்டு சம்மதம் வாங்கினோம். அவர்களும் புரிந்து கொண்டு ஒத்துக்கொண்டார்கள். இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. ஹாங்காங்கில் இருந்து அவர்களது பெற்றோரும் வந்துள்ளனர். எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.

    மணமகள் செல்சீ கூறுகையில், ``எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் நாட்டில் உள்ளதை விட இந்த கலாசாரம் நன்றாக உள்ளது. எனக்கு மிகவும் பிடித்துள்ளது. என்னிடம் அன்பாக பழகினார்கள். என்னை இங்கு எல்லாரும் வரவேற்றார்கள். நல்ல பண்பாக உள்ளது'' என்றார்.

    • சமதள நிலத்தில் சாகுபடி செய்த மிளகை புதுச்சேரி அமைச்சர் ஜெயகுமார் நேரில் பார்வையிட்டார்
    • மலைப்பிரதேச பயிர் எனப்படும் இந்த மிளகு உள்ளிட்ட பயிர்களை வடகாடு பகுதி விவசாயிகள் சமதளத்தில் விளைய வைத்து இருப்பது அசாத்தியமானது.

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே சமதள நிலத்தில் மிளகு சாகுபடி நடைபெறுவதை புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயகுமார் நேரில் பார்வையிட்டார்.மலை பிரதேசங்களில் பயிரிடப்படும் மிளகினை ஆலங்குடி பகுதி விவசாயி கள்சமதள பரப்பில் பயிரிட்டு வருகின்றனர். வடகாடு, கொத்தமங்கலம், சேந்த ன்குடி ஆகிய பகுதிகளில் சமதள பரப்பில் மிளகு பயிரிடப்பட்ட மிளகு விவசாயத்தினை, புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு, இது குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

    கொடி மிளகு, செடி மிளகு உள்ளிட்ட மிளகு சாகுபடிகளை பயிரிடப் பட்டு உள்ளதாக அப்பகுதி விவசாயி பால்சாமி அமைச்சரிடம் தெரிவித்தார். இதனை கேட்டறிந்த அமைச்சர் மிளகு செடியினை பெற்றுச்சென்றார்.அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, மலைப்பிரதேச பயிர் எனப்படும் இந்த மிளகு உள்ளிட்ட பயிர்களை வடகாடு பகுதி விவசாயிகள் சமதளத்தில் விளைய வைத்து இருப்பது அசாத்தியமானது.

    இது போன்ற விவசாயத்தை புதுச்சேரியின் விவசாயி களுக்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் தான் அடுத்த மாதம் புதுச்சேரி யில் நடைபெறஉள்ள விவசாயிகள் திருவிழா மற்றும் மலர் கண்காட்சியில் மிளகு விவசாயத்தை சமதளத்தில் சாத்தியமாக்குவதுகுறித்து விவசாயிகளுக்குவிளக்க ப்பட உள்ளதுஇதுகுறித்து அறிந்திட நேரில் வந்து ள்ளேன். புதுச்சேரியில் மிளகு விவசாயத்தில் கள மிறங்கும் விவசாயி களுக்கு அரசு மானியம் வழங்கி ஊக்குவிக்க உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    • ஆலங்குடியில் சாராயம் விற்றவர் கைது செய்யபட்டார்
    • அழகன்விடுதி பகுதியில் சாராயம் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    ஆலங்குடி:


    புதுக்கோட்டைமேட்டுப் பட்டி ஓடியனேரி காலனி ராஜ்குமார் மகன் சிவகுமார் (வயது 23). இவர் கறம்பக்குடி அருகே உள்ள அழகன்விடுதி பகுதியில் சாராயம் பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் அங்கு சென்று நடத்திய சோதனையில், அவரிடமிருந்து 10 லிட்டர் சாரயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.




    • வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • மாணவர்கள் தங்களின் கைகளில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

    ஆலங்குடி:

    13-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி ஆலங்குடியில் நடைபெற்றது. பேரணியை தாசில்தார் செந்தில்நாயகி கொடியசைத்து துவக்கி வைத்தார்.முன்னதாக தாசில்தார் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் பேரணியானது பள்ளி மாணவர்கள் காமராஜர் சிலை, அரசமரம் பஸ் ஸ்டாப், வடகாடு, முக்கம், சந்தைப்பேட்டை மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் சென்றது.

    மாணவர்கள் தங்களின் கைகளில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை தாசில்தார் பழனியப்பன் மற்றும் பாலகோபாலன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


    • லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யபட்டார்
    • போலீசார் இருசக்கர வாகனம், செல்போன், ரூ.12 ஆயிரத்து 470 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்

    ஆலங்குடி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா குருவிகரம்பை குறவன் கொள்ளையை சேர்ந்த காளிமுத்து மகன் சுப்பிரமணியன் (வயது 31). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தக் கோட்டை விநாயகர் கோவில் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக ஆலங்குடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற விசாரணை நடத்தினர்.

    அப்போது அவரிடமிருந்து லாட்டரி விற்பனைக்கான பேப்பர்கள் இருசக்கர வாகனம், செல்போன், ரூ.12 ஆயிரத்து 470 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தார்.


    ×