என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் இருதரப்பினர் மோதல்-போலீசார் விசாரணை
- ஆலங்குடியில் இருதரப்பினர் மோதியதில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- இச்சம்பவம் குறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஆலங்குடி:
ஆலங்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் ராமையா மகன் சின்னகருப்பன் (வயது40). இவரது வீட்டின் அருகில் ஒரு பப்பாளி மரம் இருந்துள்ளது. அதன் அருகில் கோவிந்தன் மகன் வெற்றிவேல் (44), இவரது மனைவி தனலெட்சுமி (40) ஆகியோர் மாணிக்கம் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் பப்பாளி மரம் வெட்டியதில் இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் வெற்றிவேல் அவதூறாக பேசி கொலை முயற்சி விடுத் ததாகவும், தனலெட்சுமி சின்னகருப்பன் என்பவரை உருட்டு கட்டையால் தாக்கியதில் பலத்த ரத்த காயத்துடன் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சின்னகருப்பனை மீட்டு ஆலங்குடி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.






