என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது
- லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யபட்டார்
- போலீசார் இருசக்கர வாகனம், செல்போன், ரூ.12 ஆயிரத்து 470 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்
ஆலங்குடி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா குருவிகரம்பை குறவன் கொள்ளையை சேர்ந்த காளிமுத்து மகன் சுப்பிரமணியன் (வயது 31). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தக் கோட்டை விநாயகர் கோவில் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக ஆலங்குடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற விசாரணை நடத்தினர்.
அப்போது அவரிடமிருந்து லாட்டரி விற்பனைக்கான பேப்பர்கள் இருசக்கர வாகனம், செல்போன், ரூ.12 ஆயிரத்து 470 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தார்.
Next Story






