என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை ஏற்பு
    • கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன் பெற அழைப்பு

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செங்கமேடு ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் படி கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் ஆத்மா கமிட்டி சேர்மனுமான வி.முத்துகிருஷ்ணன் திறந்து வைத்து பேசுகையில், இப்பகுதி விவசாயிகள் கோரிக்கையின் படி கலெக்டரிடம் அனுமதி பெற்று இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு அரசுக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • காவிரி-குண்டாறு திட்டத்தை விரைந்து முடிக்க கோரிக்கை
    • இரு அமைச்சர்களை சந்திக்க திட்டம்

    ஆலங்குடி,

    ஆலங்குடியில் விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் சங்க கட்டிட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். இதில் காவேரி குண்டாறு திட்டத்தினை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க கோரி தமிழக அரசை வலியுறுத்துவது, காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து முடிக்க கோரி நமது மாவட்ட இரு அமைச்சர்களையும் சந்திப்பது. காவேரி உபரி நீர்த்திட்டத்தில் விண்ணுணி ஆறு, அம்புலி ஆறு ஆகிய இரு ஆறுகளையும் இணைக்க வேண்டும், மாவட்டத்தில் உள்ள தைல மர காடுகளையும், கருவேல மரங்களையும் முற்றிலுமாக போர்க்கால அடிப்படையில் அகற்றியும் மேலும் பயிரிடாத வண்ணம் தடை செய்ய வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளத்தி விடுதி, கே.ராசியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் நாராயணன், சார்லஸ் மற்றும் விவசாயிகள் நல சங்க தணிக்கைக்குழு தெட்சிணாமூர்த்தி துணை தலைவர் மதியழகன், செயலாளர் வீரமுத்து, துணைச்செயலாளர் மாறன், பொருளாளர் சசிகுமார் பாபு, புஷ்பராஜ், தமிழ்வேந்தன் , கோபு, வட்ட ஒன்றிய நகர தலைவர்கள், பொறுப்பாளர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வெற்றி ெபற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
    • ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.இதில், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 9 அணிகள் கலந்துகொண்டன.தொடக்கத்தில் ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒருவர் மீது ஒருவராக 3 பேர் வீதம் வழுக்கு மரத்தில் ஏ றுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.ஆனால், இலக்கை யாரும் தொடாததால் வீரர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் 7 பேர் வீதம் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், பனங்குளம் கிங்க் பிஷர் எனும் அணியினர் 47 அடி உயரமுள்ள மரத்தின் உச்சி வரை லாவ கமாக ஏறி வெற்றி பெற்றனர்.இது வரை நடைபெற்ற போட்டிகளில் இல்லாத அளவிற்கு, அதிக உயரமுள்ள மரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்கள் ஏறி இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பதாக விழாக்குழுவினர் தெரிவி த்தனர்.வெற்றி பெற்ற அணியினருக்கு ரூ.15, ஆயிரம் ரொக்கம், கோப்பை மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும், கலந்துகொண்ட அனைத்து அணியினருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. சுமார் 5 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியை நூற்றுக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.

    • பட்டமரத்து காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது
    • அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    அறந்தாங்கி:


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிறுவிளத்தூர் பட்ட மரத்து காளியம்மன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த ஆண்டு திருப்பணிகள் முடிவுற்று பிப்ரவரி 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் வருடாபிஷேக விழா தற்போது நடைபெற்றது.

    ரகு குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள்வேத மந்திரங்கள் முழங்க பட்ட மரத்துகாளியம்மன், காமாட்சியம்மன், முனீஸ்வ ரர், கருப்பர், மதுரைவீரன், முன்னோடியான், சாம்பான் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்ப ட்டது.

    விழாவில் ஒன்றியக்குழு தலைவர்பரணி கார்த்திகேயன் உள்ளிட்ட கிராமத்தார்கள், பொதுமக்கள்கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


    • ஆலங்குடியில் திருமணமான இரவே மணப்பெண் மாயமானார்
    • புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் காருண்யாவை பல இடங்களில் தேடினர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பெரிய வாடியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 27). இவருக்கும் வேளாண் பயிற்சி மையத்தில் விரிவுரை யாளராக பணி புரிந்து வரும் காருண்யா(வயது 27) என்பவருக்கும்கடந்த 27-ந்தேதி திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணம் நடைபெற்ற அன்றிரவு மணமக்கள், மாப்பிள்ளைவீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    அங்கு மணமக்களுக்கு முதலிரவு ஏற்பாடு நடைபெற்று உள்ளது. புதுமாப்பிள்ளை கோபாலகிருஷ்ணனும் சாந்தி முதலிரவிற்காக தயாராகி கொண்டிருந்தார். அப்போது புதுப்பெண்ணை முதலிரவிற்காக அலங்கரிக்க அவர் இருந்த அறைக்குள் சென்று உறவினர்கள் பார்த்துள்ளனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அதன் பின்னர் வீடு முழுவதும் தேடினாலும் மணப்பெண்ணை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார். பல இடங்களில் தேடி உள்ளனர். எங்கும் அவர் கிடைக்காததால் புதுமாப்பிள்ளை கோபால கிருஷ்ணன், தனது மனைவியை காணவில்லை என்று வடகாடுகாவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் காருண்யாவை பல இடங்களில் தேடினர்.

    வடகாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில், எஸ்.ஐ. ராஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மாயமான மணப்பெண் சிக்கியதாக தெரிகிறது. திருமணமான அன்றிரவே மணப்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    • தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்
    • பக்தர்கள் நடை பயணத்தின் போது வள்ளலாரின் அருள் மொழிகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறினர்.

    கந்தர்வகோட்டை:

    வடலூர் வள்ளலார் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பாண்டி மண்டல சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய பாதயாத்திரை குழுவைச் சேர்ந்த சன்மார்க்க சங்கத்தினர் மதுரையிலிருந்து வடலூர் வரை கடந்த 60 ஆண்டுகளாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சிவஜோதி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு, கந்தர்வகோட்டை வள்ளலார் மடத்தில் தங்கி, தொடர்ந்து வடலூருக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். சன்மார்க்க சங்க பக்தர்கள் நடை பயணத்தின் போது அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல், உயிர் பலி தவிர்த்தல் உள்ளிட்ட வள்ளலாரின் அருள் மொழிகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி நடை பயணம் மேற்கொண்டனர்.

    • புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சார்பில் 20 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது
    • பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு அல்லது குறைவிற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டது

    புதுக்கோட்டை:

    பல்வேறு வெளி நாடுகள் மற்றும் பிறமாநிலங்களிலிருந்து இனபெருக்கத்திற்காக பறவைகள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருடம் தோறும் பறந்து வருகின்றன. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலமான செப்டம்பர்மாதத்திலும், வடகிழக்கு பருவமழை முடிவடையும் கால கட்டத்திலும் பறவைகள் கணக்கெடுப்புபணி நடைபெறும்வடகிழக்கு பருவ மழை முடிவடைந்துள்ள நிலையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    நேற்று (28ம் தேதி) தொடங்கிய இந்த பணியானது இன்றும் நடைபெற்றது. புதுக்கோட்டை வனசரகத்திற்குட்பட்ட அன்னவாசல் கண்மாய், ஆரியூர்கண்மாய், அரு வாக்குளம், கவிநாடு கண்மாய், அறந்தாங்கி வனசரகத்திற்குட்பட்ட பொன்பேத்தி ஏரி, செய்யா னம் ஏரி, கரகத்திக்கோட்டை கண்மாய், முத்துக்குடா கடல், கோடியக்கரை கடல், பொன்னமராவதி வனசரகத்திற்குட்பட்ட காரையூர்காரைகண்மாய், ஒலியமங்கலம்கண்மாய், ஏனாதி கண் மாய், கொன்னை கண்மாய், கீரனூர்வ னசரகத்திற்குட்பட்ட நீர்பழனி கண்மாய், ஔவையார்பட்டி கண்மாய், பேராம்பூர்கண்மாய், குளத்தூர்கண்மாய், திருமயம் வனசரகத்திற்கு ட்பட்ட தாமரை கண்மாய், பெல் ஏரி, நல்லம்மாள் சமுத்திரம் ஆகிய 20 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஒவ்வொரு ஈர நிலத்திலும் மேற்கொள்ளப்படும் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளில் ஒரு பறவைகள் நிபுணர், இரண்டு தன்னார்வலர்கள், 2 வனத்துறை அலுவலர்கள், ஒரு என்.ஜி.ஓ மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடம்பெற்றனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் செ.பிரபா கூறும் போது, வடகிழக்கு பருவமழை காலங்களில் பறவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பு அல்லது குறைவிற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டது. முன்னதாக இப்பணிகள் மூலம் பறவைகளுக்குத் தேவையான உணவு, நீர்மற்றும் இருப்பிடம் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கப் பெறுக்கின்றனவா என்பது குறித்து கணக்கிட முடியும் என்று அவர் கூறினார்.


    • கந்தர்வகோட்டையில் மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமில் 48 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. முகாமில் புதுநகர் வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் அறிவுறுத்தல் படி நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் சசிவர்மன் தலைமையிலான குழுவினர் கிராம பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    முகாமில் 48 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வீடுகள் தோறும் புகை மருந்து அடிக்கப்பட்டு, கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்தும், வீடு தோறும் களப்பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி, ஊராட்சி செயலர் காளிமுத்து, சுகாதார ஆய்வாளர் தமிழ்வாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • சங்க துணை விதிகளுக்கு புறம்பாக உள்ளூர் பால் விற்பனையை குறைத்து காண்பித்து நிதியிழப்பு முறைகேடு செய்தது உறுதியானது
    • சங்க செயலாளர் பணிக்கு வராமல், ஆள்மாறாட்டம் செய்து கணவர் மற்றும் மாமனார் ஆகியோரை சங்க துணை விதிகளுக்கு முரணாக சங்க பணிகளை மேற்கொள்ள அனுமதித்தது.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வடக்கு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர் நித்யா. இவர் பல முறைகேடுகள் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சங்க அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆவின் துணை பதிவாளர் ஜெயபாலன் (பால்வளம்) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்க உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்குரிய கொள்முதல் பதிவேட்டை பராமரிக்காதது தெரியவந்தது. மேலும் உறுப்பினர்களிடமிருந்து மொத்தம் எவ்வளவு பால் கொள்முதல் செய்யப்பட்டது? என்ற விவரம் இல்லை. உள்ளூர் விற்பனை எவ்வளவு, ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட பால் அளவு விவரம் குறித்தும் பதிவேடுகள் இல்லை.

    சங்க துணை விதிகளுக்கு புறம்பாக உள்ளூர் பால் விற்பனையை குறைத்து காண்பித்து நிதியிழப்பு முறைகேடு செய்தது உறுதியானது. அது மட்டுமல்லாமல் சங்க செயலாளர் பணிக்கு வராமல், ஆள்மாறாட்டம் செய்து கணவர் மற்றும் மாமனார் ஆகியோரை சங்க துணை விதிகளுக்கு முரணாக சங்க பணிகளை மேற்கொள்ள அனுமதித்தது. தனியார் நிறுவனத்திற்கு பால் விற்பனை செய்தது. சங்க கணக்குகள் 1.4.2022 முதல் 20.1.2023 தேதி வரையான ஆவணங்களை சமர்பிக்காமல் தற்காலிக கையாடல் செய்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.

    இதனை தொடர்ந்து சங்க செயலாளராக இருந்த நித்யாவை தற்காலிக பணி நீக்கம் செய்தும், சங்கத்தின் தலைவர் சாந்தி புஸ்பவள்ளியை டிஸ்மிஸ் செய்தும் மாவட்ட துணை பதிவாளர் ஜெயபாலன் உத்தரவிட்டார்.

    • கறம்பக்குடியில் முருகன் கோவிலை இடிப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
    • தகவல் அறிந்த வருவாய் துறையினர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் முருகன் கோவில், அனுமார் கோவில் மற்றும் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் ஆகியவை உள்ளது. இந்த கோவில்கள் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது என்றும் இது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக எனவும் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கோவில்களை அகற்றும் படி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டனர்.

    அதன்படி நெடுஞ்சாலைத் துறையினர் பலமுறை வந்து கோவிலை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பொது மக்களின் கடும் எதிர்ப்பால் கோவில் இடிப்பது பலமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் கோவிலை இடித்து அகற்றுவதற்கு முற்பட்டனர். பாதுகாப்பு பணிக்காக ஆலங்குடி துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தகவல் அறிந்த கறம்பக்குடி சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் திரளாக கூடி கோவில் இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் நேற்று சுப முகூர்த்த தினம் என்பதால் ஏராளமான திருமணங்கள் முருகன் கோவிலில் நடைபெற்றது. திருமணத்துக்கு வருகை தந்த அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. தகவல் அறிந்த வருவாய் துறையினர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு கோவிலை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.


    • ஆலங்குடி அரசு பள்ளியில் போதையின் தீமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது

    ஆலங்குடி:

    ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மது, போதைப்பொருட்கள் தீமை குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் சார்பில் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மணமல்லி, மது, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    பின்னர் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மற் றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் (10581) குறித்தும் துண்டு பிரசுரங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போலீஸ் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரெத்தினகுமார் தலைமை வகித்தார். எஸ்.ஐ. புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விராலிமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது
    • தினமும் காலை, மாலையில் முருகனுக்கு ஆறுகால பூஜையுடன் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, வெள்ளி கவச அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அறுபடை வீடுகளுக்கு இணையாகக் கருதப்படும் முருகன் மலைக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டு தைப்பூச விழாவின் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் 11 நாட்கள் நடைபெறும்

    திருவிழாவில் தினமும் காலை, மாலையில் முருகனுக்கு ஆறுகால பூஜையுடன் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, வெள்ளி கவச அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழா நாட்களில் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக மயில் வாகனம், பூதவாகனம், நாக வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனங்களில் முருகன் எழுந்தருளி கிரிவலப்பாதையில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    தைப்பூச விழாவின் 9 ம் நாள் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் பிப்ரவரி 4 ம் தேதி காலை 10.30 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், விழா குழுவினர், உபயதாரர்கள் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக ரூபாய் 10 லட்சம் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட பெரிய திருத்தேர் முக்கிய வீதிகளில் பவனி வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


    ×