என் மலர்
உள்ளூர் செய்திகள்

விராலிமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்-வருகிற 4ம் தேதி தேரோட்டம்
- விராலிமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது
- தினமும் காலை, மாலையில் முருகனுக்கு ஆறுகால பூஜையுடன் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, வெள்ளி கவச அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அறுபடை வீடுகளுக்கு இணையாகக் கருதப்படும் முருகன் மலைக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டு தைப்பூச விழாவின் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் 11 நாட்கள் நடைபெறும்
திருவிழாவில் தினமும் காலை, மாலையில் முருகனுக்கு ஆறுகால பூஜையுடன் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, வெள்ளி கவச அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழா நாட்களில் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக மயில் வாகனம், பூதவாகனம், நாக வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனங்களில் முருகன் எழுந்தருளி கிரிவலப்பாதையில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
தைப்பூச விழாவின் 9 ம் நாள் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் பிப்ரவரி 4 ம் தேதி காலை 10.30 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், விழா குழுவினர், உபயதாரர்கள் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக ரூபாய் 10 லட்சம் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட பெரிய திருத்தேர் முக்கிய வீதிகளில் பவனி வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






