என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் நல சங்க ஆலோசனை கூட்டம்
    X

    விவசாயிகள் நல சங்க ஆலோசனை கூட்டம்

    • காவிரி-குண்டாறு திட்டத்தை விரைந்து முடிக்க கோரிக்கை
    • இரு அமைச்சர்களை சந்திக்க திட்டம்

    ஆலங்குடி,

    ஆலங்குடியில் விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் சங்க கட்டிட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். இதில் காவேரி குண்டாறு திட்டத்தினை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க கோரி தமிழக அரசை வலியுறுத்துவது, காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து முடிக்க கோரி நமது மாவட்ட இரு அமைச்சர்களையும் சந்திப்பது. காவேரி உபரி நீர்த்திட்டத்தில் விண்ணுணி ஆறு, அம்புலி ஆறு ஆகிய இரு ஆறுகளையும் இணைக்க வேண்டும், மாவட்டத்தில் உள்ள தைல மர காடுகளையும், கருவேல மரங்களையும் முற்றிலுமாக போர்க்கால அடிப்படையில் அகற்றியும் மேலும் பயிரிடாத வண்ணம் தடை செய்ய வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளத்தி விடுதி, கே.ராசியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் நாராயணன், சார்லஸ் மற்றும் விவசாயிகள் நல சங்க தணிக்கைக்குழு தெட்சிணாமூர்த்தி துணை தலைவர் மதியழகன், செயலாளர் வீரமுத்து, துணைச்செயலாளர் மாறன், பொருளாளர் சசிகுமார் பாபு, புஷ்பராஜ், தமிழ்வேந்தன் , கோபு, வட்ட ஒன்றிய நகர தலைவர்கள், பொறுப்பாளர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×