என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டமரத்து காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
- பட்டமரத்து காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிறுவிளத்தூர் பட்ட மரத்து காளியம்மன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த ஆண்டு திருப்பணிகள் முடிவுற்று பிப்ரவரி 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் வருடாபிஷேக விழா தற்போது நடைபெற்றது.
ரகு குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள்வேத மந்திரங்கள் முழங்க பட்ட மரத்துகாளியம்மன், காமாட்சியம்மன், முனீஸ்வ ரர், கருப்பர், மதுரைவீரன், முன்னோடியான், சாம்பான் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்ப ட்டது.
விழாவில் ஒன்றியக்குழு தலைவர்பரணி கார்த்திகேயன் உள்ளிட்ட கிராமத்தார்கள், பொதுமக்கள்கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story






