என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • முதலுதவி பற்றிய செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது
    • பேரூராட்சி பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பேரூராட்சி சுகாதார பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் முதலுதவி செயல் விளக்கம் குறித்து மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை தாங்கினார். முகாமில், அனைவருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் எடை, ஈ.சி.ஜி., எக்ஸ்ரே, முழு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10 பேருக்கு ரத்த கொதிப்பு, 3 பேருக்கு சர்க்கரை நோய், 15 பேருக்கு ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு உரிய சிகிச்சையும், ஆரோக்கியம் சம்பந்தமான அறிவுரைகள் வழங்கப்பட்டது. 10 பேர் எக்கோ பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். தொடர்ந்து முதலுதவி பற்றிய செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் ஆரோக்கிய நல குறிப்பேடு வழங்கப்பட்டது. இதில் மருத்துவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடும்ப தகராறில் விபரீதம்
    • தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்

    புதுக்கோட்டை,

    விராலிமலை ஒன்றியம், மாத்தூர் தென்னம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயந்தி (வயது 22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் பாலசுப்பிரமணியனுக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி வீட்டில் தகராறு நடந்து வந்துள்ளது. நேற்று இரவும் பாலசுப்பிரமணியன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் வழக்கம் போல கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை பாலசுப்பிரமணியன் வேலைக்கு சென்று விட்டார். மனமுடைந்த நிலையில் வீட்டில் இருந்த ஜெயந்தி தனது பிள்ளைகளை அங்கன்வாடிக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாக்குதல்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை ஊராட்சி வடக்கு தோப்புப் பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரின் மனைவி பிரேமா ( வயது 26). இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் ராஜேந்திரன் மது அருந்திவிட்டு வருவதால் கணவன், மனைவிக்குள் குடும்பத்தகராறு ஏற்படுமாம். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் இரும்பு கம்பியால் பிரேமாவை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிரேமா கொடத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊராட்சி செயலர், உதவியாளர் நியமனம் குறித்து சர்ச்சை
    • கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாங்கனாம்பட்டி ஊராட்சி யில் சிறப்பு தணிக்கை குழு கிராம சபைகூட்டம் பிள்ளையார் கோவில் திடலில் நடைபெற்றது.மாகங்னாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவரங்குளம் ஒன்றியம் சமூக தணிக்கை வல்லுனர் இஸ்மாயில் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடந்தது.மாங்கனாம்பட்டி ஊராட்சியில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு, மற்றொரு ஊராட்சியில் உள்ள ஒரு பெண்மணியை நியமித்ததை கண்டித்தும், உள்ளூரில் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க மறுக்கப்பட்டதை கண்டித்தும், மாங்கனா ம்பட்டி ஊராட்சி செயலர் நியமிக்காததால், வேறு ஒரு ஊராட்சியில் இருக்கும் செயலர்கள், மாங்கனம்பட்டி ஊராட்சி பொறுப்பாளர்களாக செயல்பட்டு வருவதால், கோரிக்கைகளை எடுத்து ரைக்க முடியவில்லை. எனவே நிரந்தர ஊராட்சி செயலர் நியமிக்க வற்புறுத்தியும் 100 நாள் வேலை வாய்ப்பு பணியாளர்கள் உள்பட கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கிராம நிர்வாக உதவி யாளர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகிய இருவ ரையும் தாங்கள் பகுதியில் உள்ள படித்தவர்களுக்கு வழங்கிட வேண்டும். இந்த வாய்ப்பு தரப்படவில்லை என்றால் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஊராட்சி அலுவலகங்களை முற்றுகையிடுவோம் என்று தெரிவித்தனர்.இது தொடர்பான பிரச்சனை ஆரம்பித்த உடனேயே தணிக்கை குழு அதிகாரி இஸ்மாயில் கூட்டத்தில் இருந்து புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. 

    • எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்
    • நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் மெய்குடி பட்டி கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை, மாவட்ட தி.மு.க. செயலாளர் கே. கே. செல்ல பாண்டியன் ஆகியோர் திறந்து வைத்து, விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அரசு கொள்முதல் நிலையத்தில் கொடுத்து உரிய தொகை வங்கி கணக்குகள் மூலம் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டனர். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் ராணி முருகேசன், திமுக மாவட்ட பிரதிநிதி முருகேசன், துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் சக்தி.விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
    • தரமான உரம் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இடுபொருட்கள் இருப்பை பொருத்தவரை புதுகோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 152.726 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 46.845 மெ.டன் பயறு விதைகளும், 14.347 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 3.872 மெ.டன் சிறுதானிய விதைகளும், 2.603 மெ.டன் எள் விதைகளும் 9.810 மெ.டன்கள் பசுந்தாள் உர விதைகளும் இருப்பில் உள்ளன.

    விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியூதவி திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.2022-23ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1100 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 1979 பயனாளிகளுக்கு 2233 எக்டர் பரப்பளவில் நுண்ணீர்பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ரூ.5 கோடியே 26 இலட்சம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்(காவேரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், துணை ஆட்சியர்(பயிற்சி) ஜெயஸ்ரீ, மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • ரூ.4.5 லட்சம் பறிமுதல்
    • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.அதனடிப்படையில் தனிப்படை போலீசர் அப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அதே பகுதியில் உளள ஒரு வீட்டில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது29), ராமு (23), கார்த்திக் (24), விக்னேஷ் (28), சரவணக்குமார்(26), கிருஷ்ணமூர்த்தி (31) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 4 லட்சத்து 53 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 8 லேப்டாப், 13 ஆண்ட்ராய்டு கைபேசிகள், 1 கார், 6 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து நாகுடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து 6 பேர் மீது வழக்குப்பதிந்த காவல்த்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சிறையிலடைத்தனர். ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து நான்கரை லட்சம் ரொக்கப்பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி ஆசிரியர் முதலிடம்
    • 28 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை, 

    காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் சிக்ஷா திட்டத்தில் மாநில அளவில் சோலார் எனர்ஜி மெட்டிரியல் பற்றி அறிவியல் ஆராய்ச்சி துறையில் நிகழும் முன்னேற்றங்கள், நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள் பற்றி இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் சிக்ஷா திட்டத்தில் பள்ளி ஆசிரியர் களுக்கு இடையே சோலார் எனர்ஜி மெட்டிரியல் பற்றி வினா விடை போட்டிகளும் நடத்தப்பட்டது . இதில் மாநில அளவில் 28 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி ஆசிரியர் சி. மாணிக்கம் ரெட்டி கலந்து கொண்டு வினா விடை போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஆசிரியர் அவர்களை பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன் , இணைத் தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளி முதல் வர் டாக்டர் ஜலஜா குமாரி ஆகியோர் பாராட்டினார்கள்.

    • ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது
    • சுத்தம் மற்றும் பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் இன்னர்வீல் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய உயர்கல்வி வகுப்பு மாணவிகளுக்கான "சுத்தம் மற்றும் பாதுகாப்பு" விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவை பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகளுக்கு சுத்தம் மற்றும் பாதுகாப்பு பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியின் உதவி விரிவுரையாளர் டாக்டர் தமிழரசி விளக்கங்கள் மற்றும் மாணவிகளின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் இன்னர்வீல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் அருணோதயம் ஜெயராமன் மற்றும் செயலாளர் சாந்தி சுப்ரமணியன் முன்னிலை வகிக்க முன்னாள் இன்னர்வீல் சங்கத்தின் தலைவர் அனுராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் வரவேற்புரை வழங்க ஆசிரியர் உதயகுமார் நன்றி கூறினார்.

    • காரையூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது
    • இரத்த அழுத்தம், உயரம், எடை, வெப்பத்தின் அளவு பரிசோதனைகள் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.எச்.சலீம் வழிகாட்டுதலின்படி டீம் மருத்துவமனை சார்பாக புதுக்கோட்டை, காரையூர் ஊராட்சி சமுதாய கூடத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் முகமது இக்பால் மற்றும் துணைத்தலைவர் அடைக்கன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இக்காலக் கட்டத்தில் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும், கை, கால்களை சுத்தமாக அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், சத்துநிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும், அதிக எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் கட்டாயம் அணியவும், போதுமான அளவு சமூக இடைவெளி விடவும் மற்றும் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழலாம் என்று மருத்துவர் விளக்கி கூறினார்.டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் அறிவரசு அனைவருக்கும் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார். இரத்த அழுத்தம், உயரம், எடை, வெப்பத்தின் அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதுபாலன் செய்திருந்தனர். முடிவில் காப்பீடு திட்ட ஒருங்கினைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    • பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்
    • நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 327 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ.17,350 மதிப்புடைய ரொலேட்டார், கார்னர் சேர், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்டவைகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.fiஇக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
    • காங்கிரசார் பங்கேற்பு

    கரம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கறம்பக்குடியில் உள்ள காந்தி பூங்காவில் அமைந்துள்ள தேச பிதாவும் மகாத்மாவுமான காந்தியடிகளின் சிலைக்கு அவரது 76 நினைவு தினத்தை முன்னிட்டு கரம்பக்குடி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரங்கநாதன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் மாரிக்கண்ணு, புண்ணிய சீலன், வெள்ளைச்சாமி, முகமது அப்துல்லா மற்றும் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×