என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராம சபை கூட்டம் பொதுமக்கள் புறக்கணிப்பு
- ஊராட்சி செயலர், உதவியாளர் நியமனம் குறித்து சர்ச்சை
- கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாங்கனாம்பட்டி ஊராட்சி யில் சிறப்பு தணிக்கை குழு கிராம சபைகூட்டம் பிள்ளையார் கோவில் திடலில் நடைபெற்றது.மாகங்னாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவரங்குளம் ஒன்றியம் சமூக தணிக்கை வல்லுனர் இஸ்மாயில் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடந்தது.மாங்கனாம்பட்டி ஊராட்சியில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு, மற்றொரு ஊராட்சியில் உள்ள ஒரு பெண்மணியை நியமித்ததை கண்டித்தும், உள்ளூரில் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க மறுக்கப்பட்டதை கண்டித்தும், மாங்கனா ம்பட்டி ஊராட்சி செயலர் நியமிக்காததால், வேறு ஒரு ஊராட்சியில் இருக்கும் செயலர்கள், மாங்கனம்பட்டி ஊராட்சி பொறுப்பாளர்களாக செயல்பட்டு வருவதால், கோரிக்கைகளை எடுத்து ரைக்க முடியவில்லை. எனவே நிரந்தர ஊராட்சி செயலர் நியமிக்க வற்புறுத்தியும் 100 நாள் வேலை வாய்ப்பு பணியாளர்கள் உள்பட கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கிராம நிர்வாக உதவி யாளர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகிய இருவ ரையும் தாங்கள் பகுதியில் உள்ள படித்தவர்களுக்கு வழங்கிட வேண்டும். இந்த வாய்ப்பு தரப்படவில்லை என்றால் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஊராட்சி அலுவலகங்களை முற்றுகையிடுவோம் என்று தெரிவித்தனர்.இது தொடர்பான பிரச்சனை ஆரம்பித்த உடனேயே தணிக்கை குழு அதிகாரி இஸ்மாயில் கூட்டத்தில் இருந்து புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.






