என் மலர்
உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடியில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு.
- காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
- காங்கிரசார் பங்கேற்பு
கரம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கறம்பக்குடியில் உள்ள காந்தி பூங்காவில் அமைந்துள்ள தேச பிதாவும் மகாத்மாவுமான காந்தியடிகளின் சிலைக்கு அவரது 76 நினைவு தினத்தை முன்னிட்டு கரம்பக்குடி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரங்கநாதன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் மாரிக்கண்ணு, புண்ணிய சீலன், வெள்ளைச்சாமி, முகமது அப்துல்லா மற்றும் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






