search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாலை சீரமைப்பு பணியில் தொய்வு- ஆலங்குடி அருகே கடையடைப்பு போராட்டம்
    X

    கல்லாலங்குடி ஊராட்சியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.

    சாலை சீரமைப்பு பணியில் தொய்வு- ஆலங்குடி அருகே கடையடைப்பு போராட்டம்

    • சாலை பணிகளை முழுமையாக முடிக்க கோரியும் கண்டன கடையடைப்பு நடத்த போவதாக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
    • இன்று காலை கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாலங்குடி ஊராட்சி. இந்த பகுதியில் சாலைகள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணி உரிய வகையில் முழுமையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    எனவே ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தில் இருந்து மண் எடுத்த சாலைகளை முழுமையாக சீர் செய்ய வேண்டும், பணம் பறிக்கும் நோக்கத்தில், தனி நபர் ஒருவர் அதிகாரிகளை தடுத்து மிரட்டி வருவதால், பணிகள் நடைபெறாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே இதனை கண்டித்தும், சாலை பணிகளை முழுமையாக முடிக்க கோரியும் கண்டன கடையடைப்பு நடத்த போவதாக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டது.

    அதன்படி இன்று காலை கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரத பந்தலை விட்டு வெளியே செல்லமாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருவதால் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தை ஊராட்சி பொதுமக்கள் புறக்கணிப்போவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×