என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் அரசின் சாதனைகள்-திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி
- புதுக்கோட்டையில் அரசின் சாதனைகள்-திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி நடந்தது
- அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படங்களை, புதுக்கோட்டை பள்ளி மாணவி்கள் நேரில் பார்வையிட்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை அமைச்சர் ரகுபதி, கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, புதுமைப் பெண் திட்டம், மகளிருக்கு இலவச நகரப் பேருந்து பயண திட்டம், நான் முதல்வன், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மகளிர்சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுடன், புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள், பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள், பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சிகள், உள்ளிட்டவைகளை தொகுத்து புகைப்படங்களாக நேர்த்தியுடன் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்கள் அடங்கிய கண்காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படங்களை, புதுக்கோட்டை இராணியார்அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியர்கள் நேரில் பார்வையிட்டு, அறிந்து கொண்டனர்.






