என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்பெயினில் இருந்து பேசுவதாக புதுக்கோட்டை வாலிபரிடம் செல்போனில் நூதனமாக பேசி ரூ.16.20 லட்சம் மோசடி
    X

    ஸ்பெயினில் இருந்து பேசுவதாக புதுக்கோட்டை வாலிபரிடம் செல்போனில் நூதனமாக பேசி ரூ.16.20 லட்சம் மோசடி

    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    • குரு ஸ்பெயின் ஆர்டலை நம்பி மும்பை நிறுவனத்தில் ஆயில் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்தவர் ரமேஷ் மகன் குருசபரிஷ்(வயது 24). இவர் வெளிநாட்டிற்கு எண்ணெய் வகைகளை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவரது போனிற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து பேசுவதாகவும், தங்கள் மருத்துவமனைக்கு டாஸ்மானியா ஆயில் தேவைபடுவதாக பேசியுள்ளனர்.

    அதற்கு குருசபாரிஷ் தன்னிடம் அந்த ஆயில் இல்லை என கூறியுள்ளார். அடுத்த சில தினங்களில் குருவின் செல்போனுக்கு இன்னொரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் டாஸ்மானியா ஆயில் மும்பையில் இருப்பதாக தெரிவித்தார். உடனே குரு ஸ்பெயின் ஆர்டலை நம்பி மும்பை நிறுவனத்தில் ஆயில் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். முதற்கட்டமாக 10லிட்டர் ஆயில் அனுப்பப்பட்டது.

    இதற்கு கூடுதலாக 5 சதவீதம் தள்ளுபடி செய்து கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து குரு 8 தவனைகளில் ரூ.16 லட்சத்து 19 ஆயிரத்து 999 அனுப்பியுள்ளார். அதன்பிறகு ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த போன்காலுக்கு தொடர்பு கொண்டதற்கு எந்த பதிலும் இல்லை. இதனால் கொள்முதல் செய்த ஆயிலை மும்பை நிறுவனத்திற்கு திரும்ப அனுப்ப முயற்சி செய்தபோது அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து கொண்ட குருசபரிஷ், மாவட்ட காவல் சூப்பிரெண்டுடிடம் புகார்செய்தார். சைபர் கிரைம் போலீசா ர் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். சினிமாவில் காண்பிக்கும் காட்சிகள் போல் போனில் பேசி மோசடி செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×