என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்-புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு
- முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்
புதுக்கோட்டை:
தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தப்பட உள்ளது. பொதுப்பிரிவில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவில் கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து போன்ற போட்டிகள் நடத்தப்படும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கபடி, சிலம்பம், தடகளம், கூடைபந்து, இறகுப்பந்து, கால்பந்து, ஹாக்கி, நீச்சல், கையுந்துப்பந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளும், மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படும். முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் விளையாட்டும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். நேரடியாக போட்டிகளில் பங்குபெற அனுமதி இல்லை. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.






