என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடி அருகே தீக்காயம்பட்டு பெண் சாவு
    X

    ஆலங்குடி அருகே தீக்காயம்பட்டு பெண் சாவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆலங்குடி அருகே தீக்காயம்பட்டு பெண் பலினானார்
    • கேஸ் அடுப்பில் தீ எரிந்தபோது எதிர்பாராதவிதமாக கண்ணகியின் பின்புற சேலையில் தீ பற்றியது

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்களம் பரப்பன்காடு கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மனைவி கண்ணகி (வயது51). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தனது வீட்டில் உள்ள கேஸ் அடுப்பில் தீ எரிந்தபோது எதிர்பாராதவிதமாக கண்ணகியின் பின்புற சேலையில் தீ பற்றியது. இதில் பலத்த காயத்துடன் கண்ணகி துடி துடித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் மருத்துவரின் சிகிச்சை பலனில்லாமல் கண்ணகி இறந்து விட்டார். பின்னர் பிரேத பரிசோதனை செய்து உடலை அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து கண்ணகியின் மகன் சரவணன் (30) வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×