என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூரில் விண்ணப்பதிவு முகாம் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார்
- விண்ணப்பதிவு முகாமிற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் குறித்து கலெக்டர் விளக்கமளித்தார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற உள்ளதால் ரெங்கநாதபுரம் மற்றும் சத்திரமனை ஆகிய அரசு தொடக்கப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களில் , அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் அவர் கூறும்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறும்.ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றினை வீடு வீடாகச் சென்று வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலும், மின் கட்டண அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை இருந்தால் அவற்றையும் எடுத்து வர வேண்டும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கும், முகாமிலேயே வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை.விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெறும்.இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அருளாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்அறிவழகன், ஸ்டாலின் செல்வகுமார், வட்டாட்சியர்கிருஷ்ணராஜ், மின் ஆளுமை மேலாளர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 40 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்திய ஆதிதிராவிட மக்கள்
- கோர்ட் உத்தரவினால் அனுமதி
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மங்களநாடு கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் உட்பட 6 சமூகத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஸ்ரீ மங்களநாயகி அம்மன் ஆலயம் கிராம தெய்வமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அனைத்து சமூகத்தினரும் ஆலயத்திற்குள் சென்று வழிபட்டு வந்த நிலையில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் மட்டும் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் கதையாகி வந்த நிலையில் தற்போதைய இளைஞர்கள், பொதுமக்கள் தங்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை, வரி வசூல் செய்வதில்லையெனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கு விசாரணையில் கோவிலுக்குள் எந்த ஒரு திருவிழா நடத்தினாலும் ஆதிதிராவிடர் சமுதாய மக்களையும் சேர்த்து, அவர்களிடமும் வரி வசூல் செய்து விழா நடத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து நேற்று ஆடி வெள்ளி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் ஒன்றாக சேர்ந்து ஆலயத்திற்குள் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த தீண்டாமை பிரச்சனை நேற்று தீர்வுக்கு வந்தது.
- அகரம் சீகூர் அருகே குட்கா கடத்திய கல்லூரி மாணவர் பிடிபட்டார்
- 21 மூட்டை புகையிலை பொருட்கள் வேனுடன் பறிமுதல்
அகரம் சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் அருகாமையில் உள்ள திருமாந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே ஒரு வேனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை மர்ம நபர்கள் கடத்திச் செல்வதாக மங்களமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே உஷாரான போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அந்த வேனில் 21 மூட்டைகளில் 217 கிலோ பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.பின்னர் போலீசார் குட்கா பொருட்களை கைப்பற்றி வேனை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா சேசன் சாவடி மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ( வயது 39), கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரங்கூர் காலனி தெருவை சேர்ந்த சிங்காரவேலு மகன் கார்த்திகேயன் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.இதில் கைதான கார்த்திகேயன் கடலூர் மாவட்டம் குரும்பலூர் அரசு அறிவியல் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது.இந்த மாணவன் பணத்துக்கு ஆசைப்பட்டு குட்கா கடத்தலில் போலீஸ் பிடியில் மாட்டி கொண்டதாக கூறப்படுகிறது.ஆனால் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பன்னீர்செல்வத்துடன் வேனில் வந்ததாக தெரிவித்துள்ளார்.குட்கா கடத்தல் வழக்கில் கல்லூரி மாணவன் பிடிபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வேப்பந்தட்டை பூலாம்பாடியில் திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
அரும்பாவூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியில் உள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா கடந்த 6ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. யாகம் வளர்த்து பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓதினர்.அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் திருமாங்கல்யத்தை தொட்டு வணங்கி கொடுத்தனர்.பின்னர் கெட்டிமேளம் வாசிக்க ஸ்ரீதிரௌபதிஅம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் டத்தோ பிரகதீஸ்குமார் மற்றும் முக்கியபிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
சுவாமி திருவீதி உலா முடிந்து கோவிலுக்கு வந்தடைந்தது.அதைத்தொடர்ந்து கோவிலில் யாக பூஜைகள் நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து நாட்டுக்கல் மனக்காட்டிலிருந்து தீர்த்தகுடம்,அக்னி சட்டி எடுத்தல் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடை பெற்றது.இன்றிரவு டிவி புகழ் ஈரோடு மகேஷ் மற்றும் ஆக்காட்டி ஆறுமுகம் பங்குபெறும் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.விழாவின் முக்கிய நிகழ்வான வருஷாபிஷேகம் நாளை (23-ந்தேதி) காலை 7.30மணிக்கு நடக்கிறது.24-ந்தேதி பொங்கல் மாவிலக்கு பூஜையும், அன்றிரவு வானவேடிக்கையுடன் ஏழு வாகனங்களில் சுவாமிகளின் ஊர்வலம் நடைபெறும்போது,ஒயில் கும்மி மற்றும் கோலாட்டம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக 25-ந்தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து மாலையில் ஸ்ரீ தர்மராஜா பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை திரௌபதி அம்மன் கோவில் அறக்கட்டளையினர் மற்றும் கிராம மக்கள் டத்தோ பிரகதீஸ்குமார்இளைஞர் நற்பணிமன்றத்தினர் செய்து வருகின்றனர்
- பெரம்பலூரில் காட்டுப்பன்றியை 5 பேர் வேட்டையாடினர்.
- ரூ.1.50 ஆயிரம் அபராதம் விதிப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின்பேரல் வனச்சரக அலுவலர்கள் பழனிகுமரன், நவீன்குமார் ஆகியோர் தலைமையில் வனவர் குமார் , வனக்கா ப்பாளர்கள் அன்பரசு, கண்ணதாசன், சித்திக், செல்வகுமாரி, கனிமொழி, மகமாணிக்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடு பட்டபோது 5 பேர் காட்டுப்பண்றியை வேட்டையாடி கூறு போட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.இதனை அடுத்து வனத்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் செஞ்ஞேரி கிராமத்தை சேர்ந்த மாகமணி மகன் ஜெகன், நொண்டி மகன் அறிவழகன், ஊமைத்துரை மகன் ராஜ்குமார், ராஜலிங்கம் மகன் சுரேஷ், சுரேஷ் மகன் தியாகு வனவிலங்கான காட்டு ப்பண்றியை வேட்டையாடி கூறு போட்டு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த காட்டு பண்றி கறியை பறிமுதல் செய்தனர். இது குறித்து வனத்து றையினர் வழக்குபதிந்து ஜெகன் உட்பட 5 பேரை கைது செய்து அவர்களுக்கு ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- மகளிர் உரிமை தொகை பெற ஜீரோ பேலன்ஸில் கூட்டுறவு வங்கிகளில் கணக்குகள் தொடங்கலாம்
- பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடு
பெரம்பலூர்,
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் வருகிற 24-ம் தேதி தொடங்குகிறது.இந்த திட்டத்தில் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்க முடியும். இந்த உரிமை தொகை பெறுவதற்கான தகுதிகளை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டுள்ளது.மேற்கண்ட திட்டத்தில் விண்ணப்பிக்க வீடு தேடி கொடு க்கப்படும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து முகாம் நடக்கும் நாட்களில் கொண்டு சென்று கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே வங்கி கணக்கு இல்லாதவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க வங்கிகளை நாடி செல்கின்றனர். தற்போது வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என்றால் குறைந்தபட்ச இருப்பு தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் இல்லாமல் ஜீரோ பேலன்ஸ் என்று அடிப்படையில் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், அரும்பாவூர், செட்டிகுளம், குன்னம், இலப்பை குடிக்காடு, பாடலூர், துறைமங்கலம்,வி. களத்தூர்,வாலி கண்டபுரம், வேப்பந்தட்டை ஆகிய 10 இடங்களில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் இந்த சேமிப்பு கணக்குகள் தொடங்கும் பணிகள் தொ டங்கப்பட்டுள்ளன.இந்த சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த தகவலை கூட்டுற வுத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
- நிலம் தொடர்பான மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
- 13 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அபுபக்கர் மற்றும் போலீசார் முன்னிலை வகித்தனர். முகாமில் 13 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
- தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடடனர்
- வரகூர்அருணாசலம் தலைமையில் நடந்தது
பெரம்பலூர்,
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே மாவட்ட அ.தி.மு.க .சார்பில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான வரகூர்அருணாசலம் தலைமை வகித்தார். முன்னாள் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கட்சி அமைப்பு செய லாளருமான செம்மலை கலந்து கொண்டு மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, தேர்தல் வாக்குறு திகளை நிறைவே ற்றாதது, அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்களி, தக்காளி, வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி பேசினார். பின்னர் திமுக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
- பெரம்பலூருக்கு ரெயில் சேவை தொடங்கப்படுகிறது
- அரியலூர்- நாமக்கல் வழியாக நடைபெறுகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூர் வழியாக அரியலூர், நாமக்கல்லுக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பெரம்பலூர் வழியாக ரயில் போக்குவரத்து திட்டம் தொடங்க வேண்டும் என பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் பார்லிமெண்டில் பேசி ரயில்வே துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று பெரம்பலூர் வழியாக அரியலூர், நாமக்கல்லுக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து 116.26 கி.மீ. தூரம் கொண்ட அரியலூர் - நாமக்கல் ரயில் வழித்தடத்திற்கான ஆய்வுப்பணி முடிந்தவுடன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை தொடங்கும் என பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தருக்கு ரயில்வே அமைச்சகம் கடிதம் அனுப்பி யுள்ளது.
- செல்வமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது
- 9-ஆம் ஆண்டை முன்னிட்டு நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் 15-வது வார்டு புதிய காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசெல்வமாரியம்மன் கோவிலில் 9-ஆம் ஆண்டு ஆடி மாத பால்குட ஊர்வலம் வெகு சிறப்பாக நடந்தது.
பெரம்பலூர் ஆலம்பாடி ரோடு, 15 வது வார்டு புதிய காலனியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வமாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ நாககன்னி அம்மன் திருக்கோவில் 9 ஆம் ஆண்டு ஆடி மாத பால்குடம், விளக்கு பூஜை நடந்தது.இதில் பக்தர்கள் பால் குடம் எடுத்து மேளதாளங்கள் முழங்க ஊர்லமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலா பிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பி க்கப்பட்டது. பின்னர் குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் நகராட்சி கவுன்சிலர் சிவக்குமார், திமுக கிளை செயலாளர் பரிதி நீலமேகம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
- மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
- முகவரி கேட்பது போல் நடித்து
பெரம்பலூர்:
குன்னம் அருகே உள்ள இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவரது மனைவி அகிலாண்டம் (வயது 65). இவர் நேற்று முன்தினம் மாலை இலுப்பைக்குடி-சாத்தனூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற மர்ம ஆசாமி ஒருவர், மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கு தயாராக இருந்த தனது கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி அகிலாண்டம் அளித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாடு மேய்க்க சென்ற பெண்ணின் 2 பவுன் தாலிச் செயின் பறிப்பு
- கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மருவத்தூர் இலுப்பை குடி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு.இவருக்கு அந்தப் பகுதியில் விவசாயத் தோட்டம் உள்ளது. மேலும் ஆடு, மாடுகளும் வளர்த்து வருகிறார்.இந்த நிலையில் அவரது மனைவி அகிலாண்டம் (வயது 65). வழக்கம் போல் காலை தங்கள் கால்நடைகளுடன் வயலுக்குச் சென்றார்.பின்னர் மேய்ச்சலுக்கு தோட்டத்தில் கட்டி இருந்த மாடுகளை அவிழ்த்துக் கொண்டு வீடு திரும்பினார்.இலுப்பூர்- சாத்தனூர் ரோட்டில் வந்த போது 2 வாலிபர்கள் இரு வேறு மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். பின்னர் திடீரென அவர்கள் அகிலாண்டத்தை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் கத்தினார். ஆனால் கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர்.பின்னர் இது குறித்து துரைகண்ணு மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






