என் மலர்
உள்ளூர் செய்திகள்

விண்ணப்பதிவு முகாம்
- பெரம்பலூரில் விண்ணப்பதிவு முகாம் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார்
- விண்ணப்பதிவு முகாமிற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் குறித்து கலெக்டர் விளக்கமளித்தார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற உள்ளதால் ரெங்கநாதபுரம் மற்றும் சத்திரமனை ஆகிய அரசு தொடக்கப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களில் , அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் அவர் கூறும்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறும்.ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றினை வீடு வீடாகச் சென்று வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலும், மின் கட்டண அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை இருந்தால் அவற்றையும் எடுத்து வர வேண்டும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கும், முகாமிலேயே வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை.விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெறும்.இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அருளாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்அறிவழகன், ஸ்டாலின் செல்வகுமார், வட்டாட்சியர்கிருஷ்ணராஜ், மின் ஆளுமை மேலாளர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






