என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாதயாத்திரை செல்ல முயன்றவர்களத தடுத்து நிறுத்திய போலீசார்
- மேல்பாதி கிராமத்திற்கு பாதயாத்திரை செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
- திரவுபதி அம்மன் கோவிலை திறக்க கோரி கோஷங்களை எழுப்பினர்
பெரம்பலூர்,
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலை திறக்க தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் கிராமத்தில் தாமரைக்குளத்தில் இருந்து நேற்று காலை தங்கமாமுனி தலைமையில் பக்தர்கள் சிலர் அந்த கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்ல தயாராகினர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாதயாத்திரை செல்ல இருந்த பக்தர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அந்த பக்தர்கள் மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலை திறக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
Next Story






