என் மலர்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனை இந்திரா நகர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு செல்வம் என்ற மனைவியும், 2 மகள்களும், விக்னேஷ்குமார் (வயது 21) என்ற ஒரு மகனும் உண்டு. குணசேகரன் ஏற்கனவே இறந்து விட்டதால், செல்வம் விவசாய கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். பி.காம் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்த விக்னேஷ்குமாருக்கு ஏற்கனவே வயிற்று வலி இருந்து வந்ததாகவும், அதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது விக்னேஷ்குமாருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. வயிற்று வலியை தாங்க முடியாததால் விக்னேஷ்குமார் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் வீட்டில் நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் புது ஆத்தூர் நியூ சிட்டி புஷ்பா நகரை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 36). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். அம்மாபாளையத்தில் உள்ள பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையத்தில் வேலாயுதம் வேலை செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலாயுதத்தின் மனைவி, அவர்களுடைய மகனுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் வேலாயுதம் வீட்டில் தனியாக இருந்து, வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் வேலாயுதம் வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றுவிட்டு, இரவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டில் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
இது தொடர்பாக வேலாயுதம் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மங்களமேடு பகுதியில் தொடரும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த திருவாலந்துறை, கீரனூர், திருமாந்துறை, லப்பைக்குடிகாடு ஆடுதுறை, ஒகளூர், அத்தியூர், அகரம்சீகூர், வசிஷ்டபுரம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளாற்றில் இருந்து இரவு நேரங்களில் சமூக விரோத கும்பல் டிராக்டர் மற்றும் டயர் வண்டிகள் மூலம் தினமும் மணல் கொள்ளையில் ஈடுபடுகிறது. வாகனங்கள் மூலம் கடத்தி செல்லப்படும் மணலை ஒரு இடத்தில் குவித்து வைத்து, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதில் திருவாலந்துறை முதல் வசிஷ்டபுரம் ஊராட்சி வரை வெள்ளாற்றின் கரையோர கிராமங்களின் அருகே நடக்கும் இந்த மணல் கொள்ளையை பற்றி பொதுமக்கள் புகார் அளித்தாலும், அதிகாரிகள் மணல் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.
அதிகாரிகள் சோதனைக்கு வருவது குறித்து, சிலர் மணல் கொள்ளையர்களுக்கு தகவல் கொடுத்து தப்பிக்க வைத்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால், சோதனைக்கு செல்லும் அதிகாரிகள், மணல் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
மேலும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பவர்களின் விவரம் பற்றியும், மர்ம நபர்கள் மணல் கொள்ளையர்களுக்கு தெரிவித்து விடுகின்றனர். இதனால் மணல் கொள்ளை குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குன்னம் தாலுகாவிக்கு உட்பட்ட மங்களமேடு பகுதியில் தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒருதலைக்காதலால் பட்டதாரி பெண்ணை குத்திக்கொன்றுவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுடைய மகள் தனலட்சுமி(வயது 22). பட்டதாரி. மகேஸ்வரியின் தாய் வீடு கொளப்பாடி கிராமத்தில் உள்ளது. தனலட்சுமி, தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அந்த வீட்டின் அருகே உள்ள வீட்டை சேர்ந்த அண்ணாதுரையின் மகன் அருண்பாண்டியன்(30). இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். அருண்பாண்டியனின் தாய்-தந்தை ஏற்கனவே இறந்துவிட்டனர். மேலும் பாட்டி வீட்டிற்கு வந்து சென்ற தனலட்சுமியை பார்த்த அருண்பாண்டியன், அவரை ஒருதலையாக காதலித்து வந்தார். அவர் தனது கையில் தனலட்சுமியின் பெயரை பச்சை குத்தியுள்ளார்.
மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனலட்சுமி வீட்டிற்கு அருண்பாண்டியன் சென்று திருமணத்திற்கு பெண் கேட்டுள்ளார். அப்போது, அருண்பாண்டியன் தாய், தந்தை இல்லாமல் ஆதரவற்ற நிலையில் இருந்ததால், அவருக்கு பெண் தர முருகேசன் மறுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று கொளப்பாடி கிராமத்தில் கோவில் திருவிழாவில் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக நேற்று மகேஸ்வரி, தனலட்சுமி ஆகியோரை, அவர்களது உறவினரான ஆகாஷ்(22) தனது மோட்டார் சைக்கிளில் அல்லிநகரத்தில் இருந்து கொளப்பாடிக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர்கள் கொளப்பாடி கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதற்கிடையே தனலட்சுமியை, அருண்பாண்டியன் பார்த்துள்ளார். அப்போது, தனக்கு தர மறுத்த பெண்ணை வேறு யாரும் திருமணம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில், தனலட்சுமியை கொலை செய்ய அருண்பாண்டியன் முடிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து தனது கோழிப்பண்ணையில் பாம்பை குத்திக்கொல்வதற்காக வைத்திருந்த ஈட்டி போன்ற சுருக்கி என்ற ஆயுதத்தை எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில், தனலட்சுமியை பின்தொடர்ந்து வந்தார். அரியலூர்- திட்டக்குடி சாலையில் ஒரு வேகத்தடையில் மெதுவாக சென்றபோது, அருண்பாண்டியன் தான் வைத்திருந்த சுருக்கியால் தனலட்சுமியின் இடதுபுற முதுகில் பலமாக குத்தினார். இதில் தனலட்சுமி படுகாயம் அடைந்து துடிதுடித்தார். இதையடுத்து அவரை அரியலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்தநிலையில், அருண்பாண்டியன், சின்ன வெண்மணி கிராமத்தில் தனக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் உள்ள மாமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் தங்களது சுயசான்றொப்பமிட்ட சாதி சான்றிதழ் நகல்களை சமர்ப்பித்து இலவசமாக இணையதளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
2021-22-ம் கல்வியாண்டிற்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாமாண்டு முழு நேரம் தொழில் பயிற்சியுடன் கூடிய அமைப்பியல் துறை, இயந்திரவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல், கணிப்பொறியியல் துறை போன்ற பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இணையதளம் மூலமாக 20ம்தேதி முதல் வரும் ஆகஸ்ட் 5ம்தேதி வரை நடைபெறுகிறது.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு இப்பயிலகத்திலேயே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது https://www.tngptc.com மற்றும் https://www.tngptc.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் தங்களது சுயசான்றொப்பமிட்ட சாதி சான்றிதழ் நகல்களை சமர்ப்பித்து இலவசமாக இணையதளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஐ.டி.ஐ சான்றிதழ், சாதிசான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சிறப்பு பிரிவினர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
மேல்நிலைக்கல்வியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் அல்லது தொழில்பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல் (ஏதாவது ஒன்று) மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற் பிரிவு பாடங்கள் (எழுத்து முறை மற்றும் செய்முறை) அல்லது அதற்கு சமமான படிப்பு படித்து இருக்க வேண்டும் அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் தொழில் பயிற்சியில் உரிய தொழில் பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கீழ் குறிப்பிட்டுள்ள பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு மூலமாக சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
இக்கல்லூரியில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச கல்விக்கட்டணம் மட்டும் பெறப்படும். பனிரெண்டாம் வகுப்பு - ரூ.2 ஆயிரத்து 194, தொழிற்கல்வி ரூ.2 ஆயிரத்து 200 கட்டணமாக செலுத்த வேண்டும். அரசு விடுதி வசதி, இலவச பஸ் பாஸ், கல்வி உதவிதொகை போன்ற சலுகைகள் உள்ளது.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக இரண்டமாண்டு சேர்ந்து கல்வி பயிலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மான்கள் அடிக்கடி சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த எறையூர் சர்க்கரை ஆலை அருகே அமைந்துள்ளது நரிக்குறவர் காலனி. இதையொட்டிய வனப்பகுதி மற்றும் காப்புக்காடுகளில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் மான்கள் அடிக்கடி சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் புவனேஸ்வரன் உத்தரவின் பேரில் வனத்துறையினர் எறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 37), மாவீரன் (33) ஆகிய இருவரும் புள்ளிமான் ஒன்றை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பதற்காக தயார் நிலையில் வைத்திருந்தனர்.
அவர்களை சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவர்களை கைது செய்ததோடு, இருவருக்கும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

வெவ்வேறு சம்பவங்களில் பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள திருப்பெயர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி மணிமேகலை (வயது 50). இவருக்கு வயிற்று வலி இருந்ததாகவும், அதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, வயிற்று வலி தாங்க முடியாமல் மணிமேகலை சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மணிமேகலைக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதேபோல் பெரம்பலூர் அருகே உள்ள எசனை கல்ஒட்டர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). கொத்தனாரான இவருக்கு சர்க்கரை வியாதி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செந்தில்குமார் சம்பவத்தன்று வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்ததில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த செந்தில்குமாருக்கு நதியா என்ற மனைவியும், தனுஷ் (11), ஹரிஷ் (7) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கல் ஒட்டர் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். இவரது மனைவி மூக்காயி(56). இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மூக்காயி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய அவருடைய மகன் முருகேசன், மூக்காயியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூக்காயி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை அருகே மீனவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் நேற்று தனது வயலுக்கு சென்றார். அப்போது அங்கு ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்தவரை பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் கிருஷ்ணாபுரம் மீனவர் தெருவை சேர்ந்த சுரேஷ்(வயது 35) என்பதும், மீனவரான இவர் மீன் வளர்க்கும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுரேசை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூரில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்த சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள குளோபர் நகரை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மனைவி சகுந்தலா(வயது 65). இவர் நேற்று காலை கடைக்கு காய்கறிகள் வாங்கச்சென்றார். பின்னர் காய்கறிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றார்.
வீட்டின் அருகே சென்றபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த நபர், சகுந்தலா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்தார்.
இதையடுத்து மர்மநபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். மேலும் மர்மநபர் சங்கிலியை பறித்தபோது சகுந்தலாவுக்கு கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. இது தொடர்பான புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் திருடர்களின் அட்டூழியம் தலைவிரித்தாடுகிறது. கடந்த சில நாட்களாக குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் வந்து மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டத்தொடங்கி விட்டனர். இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளில் திருட்டு சம்பவமும், தனியாக செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவமும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். எனவே திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னம் அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மகன் வடிவேல்(வயது 33). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வடிவேல் சம்பாதிக்கும் பணத்தை குடித்துவிட்டு செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவருடைய பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வடிவேல் குடிபோதையில் நேற்று முன்தினம் இரவு தனது கூரை வீட்டின் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குன்னம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 11 சாராய ஊறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,625 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. மேலும் சாராய விற்பனையில் ஈடுபட்ட 61 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 1,828 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தெரிவித்தார்.

மங்களமேடு அருகே கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த மங்களம் கிராமத்தில் பெரிய ஏரிக்கரையில் பெரியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரி லட்சுமணன் நேற்று முன்தினம் மாலை பூஜை முடிந்த பின்னர், கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மீண்டும் நேற்று காலை அவர் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். இதில், முதல் நாள் இரவில் மர்ம நபர்கள் கோவிலின் இரும்பு கதவு மற்றும் மரக்கதவில் இருந்த 2 பூட்டுகளையும், அங்கிருந்த சூலத்தால் உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த உண்டியலில் இருந்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. உண்டியலில் சுமார் ரூ.20 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பூசாரி லட்சுமணன், மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.