search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராய விற்பனை"

    • சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
    • ஜாமீனில் வெளியில் வரும் அவர், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்து 15 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

    மரக்காணம் பாலகிருஷ்ணா தெருவில் வசிக்கும் விஜயகுமார் (வயது 23) தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பதும், ஜாமீனில் வெளியில் வரும் அவர், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், விஜயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டரின் உத்தரவின் பேரில் மரக்காணம் போலீசார் விஜயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மரக்காணம் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மரக்காணம் சுற்றுவட்டார பகுதியில் சாராயம், மது பானங்கள் விற்பவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் கிராமத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து மரக்காணம் சுற்றுவட்டார பகுதியில் சாராயம், மது பானங்கள் விற்பவர்களை கைது செய்ய தனப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மரக்காணம் அடுத்த கரிப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சாராயம் மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்ட அருண்குமார் (வயது 26), அய்யப்பன் (32), மீனாட்சி (42), கலையரசி (39) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த சாராயம், மது பானங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டிவனம் சிறையில் அடைத்தனர்.

    • போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    சங்கராபுரம், மே.20-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, ராஜா தலைமையிலான போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேஷசமுத்திரம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சோ்ந்த ஜெயராமன்(வயது 63), அம்பிகா(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் அரசம்பட்டு கிராமத்தில் சாராயம் விற்ற அதே ஊரை சேர்ந்த ரமேஷ்(44), ஆரூர் கிராமத்தில் சாராயம் விற்ற அர்ச்சுனன்(75), குளத்தூரில் சாராயம் விற்ற செல்வம்(40) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து மொத்தம் 150 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது42), ரகு(38), முருகன்(29) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    • போலீசார் அவா்களிடம் இருந்து 37 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் குளத்தூர் பகுதிகளில் தீவிர ரோந்துபணியில் இருந்தனர். அப்போது வெவ்வேறு இடத்தில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது42), ரகு(38), முருகன்(29) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களிடம் இருந்து 37 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்

    • கடலூர் அருகே சாராய விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
    • சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில்சென்று சோதனை செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே குள்ளஞ்சாவடி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த நாகம்மாள் (வயது60 ) சாராயம் விற்பனை செய்துவருவதாக தொடர்ந்து புகார் வந்தது.அதன்பேரில் குள்ளஞ்சாவடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். அப்போது நாகம்மாள் விற்பனைக்கு வைத்து இருந்த சாராயம் கைப்பற்றப்பட்டு அவர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • சங்கராபுரம் பகுதியில் சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
    • 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொ ண்டிரு ந்தனர். தியாகராஜபுரம் ஏரிக்கரை அருகில் சாராயம் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த மீனாட்சி (வயது 40), மற்றும் வீட்டின் அருகில் சாராயம் விற்ற நெடுமானூர் கிராமத்தைச்சேர்ந்த முத்தம்மாள் (34), மொட்டையம்மாள் (58), சங்கராபுரத்தை சேர்ந்த ஏழுமலை (54) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின் அவர்களை கைது செய்து அவர்களிடம் 41 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அழித்தனர்.இதே போன்று வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொ ண்டிருந்தனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மூலக்காடு பகுதியை சேர்ந்த குமார் (48), கொடியனூர் வெள்ளையன் (40), சின்னபுளியங்கொட்டை பிரபு (31), ரங்கப்பனூர் ராஜேந்திரன்(55) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின் அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • சாராய விற்பனையால் மது பிரியர்கள் காலையிலேயே சாராயம் அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் குடும்பத்திலும் பல பிரச்சினைகள் நிலவியது.
    • சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீசாரை கூண்டோடு போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மாற்றம் செய்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளநத்தம் ,பாண்டியன் குப்பம், சமத்துவபுரம், அம்மையகரம் ,சின்னசேலம், தாகம் தீர்த்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் சாராய விற்பனை படுஜோராக நடந்து வந்தது. சாராய விற்பனையால் மது பிரியர்கள் காலையிலேயே சாராயம் அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் குடும்பத்திலும் பல பிரச்சினைகள் நிலவியது. இதன்காரணமாக பல்வேறு குடும்பத்தினர் மன உளைச்சலால் நிம்மதி இன்றி இருந்து வந்தனர். எனவே கள்ளச்சாரயத்தை தடுக்க சமூக ஆர்வலர்கள் பலமுறை போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.கள்ள சாராயம் விற்பனை குறித்து செய்திகள் வெளியானது.

    எனவே சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீசாரை கூண்டோடு போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மாற்றம் செய்தார்.  அதன்படி சின்னசேலத்தில் பணிபுரிந்த நாராயணசாமி, தேவமூர்த்தி, தேவேந்திரன், ராபர்ட் ஜான், ஆகியோர்களை கள்ள க்குறிச்சி, கச்சிரா யபளையம், பகண்டை எக்ஸ் கூட்ரோடு ஆகிய போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கீழ் குப்பம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த ராஜேந்திரன், கோவிந்தராஜ், சேட்டு, நந்தகோபால், ஆறுமுகம் உள்ளிட்டோர் கச்சிராய பாளையம், திருநாவலூர், உளுந்தூ ர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

    ×