என் மலர்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி வடக்கு தெருவை சேர்ந்தவர்பொன்னு சாமி மகன் செல்வகுமார் (வயது 46). ஆட்டோ டிரைவர். இவர் ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ள சுகுணா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சுகுணாவிற்கு 11 வயதில் ஒரு மகள் இருந்தார். கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வீட்டில் தனியாக இருந்த போது மகள் முறை கொண்ட 11 வயது சிறுமிக்கு செல்வக்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையறிந்த சுகுணா தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவன் செல்வக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் கலையரசி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளி செல்வகுமாரை கைது செய்தும் சிறையில் அடைத்தார். பின்னர் செல்வகுமார் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது, நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிரி, குற்றவாளி செல்வகுமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், அபராதம் ரூ.5 ஆயிரமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து குற்றவாளி செல்வக்குமாரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் அருகே இன்று காலை சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர்:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர் கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி மகேஸ்வரி, அரக்கோணத்தில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர்களது மகள் காவிய சாதனா ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ராஜேஷின் மாமியார் ஊரான செங்கோட்டைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தனர். நாளை புத்தாண்டை திருத்தணியில் கொண்டாட விரும்பிய திருத்தணி ராஜேஷ் செங்கோட்டையில் இருந்து மீண்டும் காரில் புறப்பட்டார்.
காரை ராஜேஷ் ஓட்டினார். திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் கொண்டிருந்தபோது இடது பக்க ஓரத்தில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வாலாஜாபாத்திற்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் மோதியது.
இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே காருக்குள் உடல் நசுங்கி பலியானார். அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் மகள் காவிய சாதனா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்துக்கு காரணமாக லாரியை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த டிரைவர் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெருமாள்கோவில் வலசு பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (60) என்பவரை போலீசார் கைது செய்தனர். விபத்தில் பலியான ராஜேஷின் தம்பி வெங்கடேஷ் சென்னையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
குன்னம் அருகே கோவிலில் 8 சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே மேலமாத்தூர்-வரிசைப்பட்டி சாலையில் சுமார் 1 கி.மீ. தொலைவில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. கிராம மக்களால் நிர்வகிக்கப்படும் இந்த கோவிலின் பூசாரியாக செந்தில்(வயது 38) உள்ளார். இங்கு, ஒரு அடி முதல் 2 அடி உயரமுள்ள கற்களால் செதுக்கப்பட்ட சாமி சிலைகள் பல உள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோவில் தர்மகர்த்தா ரமேஷ் கோவிலுக்குச் சென்றார். அப்போது, அங்குள்ள கற்சிலைகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்வையிட்டனர். அப்போது 1½ அடி உயரமுள்ள வெள்ளையம்மா, பச்சையம்மன், பொம்மியம்மா சிலைகள், 2 அடி உயரமுள்ள மதுரை வீரன், வீரபத்திரர், பாப்பாத்தி அம்மன் சிலைகள், ஒரு அடி உயரமுள்ள 2 நந்தி சிலைகள் என மொத்தம் 8 கற்சிலைகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மேலமாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ரஜினி கொடுத்த புகாரின்பேரில், குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலைகளை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற31-ந் தேதி காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டமன்றத்தில் நடைபெற உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற31-ந் தேதி காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டமன்றத்தில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடு பொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். எனவே விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
இத்தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியாதெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முதியவரை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எசனை கிராமம், அஞ்சுகம் காலணி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் துரைசாமி (61). இவர் நேற்று காலை 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, முதியவர் துரைசாமியை கைது செய்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதியவர் துரைசாமியை பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி கிரி, முதியவர் துரைசாமியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதன்பேரில் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் அருகே பிறந்த குழந்தை இறந்து விட்டதாக நினைத்து காட்டுப்பகுதியில் இளம்பெண் விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி சோபனா தம்பதி. இவர்களுக்கு காயத்ரி (வயது 20) என்ற மகள் உள்ளார்.
வீராசாமி கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு தனியாக பிரிந்து சென்று விட்டார். சோபனா தனது மகள் காயத்ரியை வளர்த்து வந்தார்.
பிழைப்புக்காக மகள் காயத்ரியை அழைத்துக் கொண்டு கடந்த 5 வருடங்களாக ஊட்டி அருகிலுள்ள தனியார் டீ எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்தார். காயத்ரி அங்குள்ள கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார்.
காயத்ரி வசிக்கும் பகுதியில் பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தை சேர்ந்த பாண்டியன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் ராஜதுரை (22). காயத்ரிக்கும் ராஜதுரைக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இதில் நெருங்கி பழகியதில் காயத்ரி கர்ப்பம் அடைந்தார். மேலும் தான் கர்ப்பமானதை யாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளார்.
நாளடைவில் வயிறு பெரிதாகியதால் காயத்ரியின் தாயார் ஷோபனா காரணம் கேட்டார். அப்போது தனக்கு வயிற்று வலி இருப்பதாகவும் வயிறு சரியில்லை என்றும் காரணம் கூறியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காயத்ரியின் சொந்த ஊரான எசனை கிராமத்திற்கு கல்வி உதவித்தொகை பெறவும், போஸ்ட் ஆபீசில் பணம் எடுக்கவும் ஷோபனாவும் காயத்ரியும் வந்தனர்.
நேற்று இரவு 11 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக தாயிடம் கூறிவிட்டு, அருகிலுள்ள காட்டிற்கு காயத்ரி சென்றார். மலைக்குன்றின் பகுதியில் காயத்ரிக்கு பெண் குழந்தை பிறந்தது.
வெளியில் சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகம் அடைந்த தாய் ஷோபனா அங்கு சென்று பார்த்த போது காயத்ரிக்கு குழந்தை பிறந்து இருப்பது தெரியவந்தது. குழந்தை இறந்து விட்டதாக கருதி அங்கேயே போட்டு விட்டு வீட்டுக்கு வந்து விட்டனர்.
இதற்கிடையே காயத்ரிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை பிறந்து 3 மணி நேரம் தான் ஆகியிருக்கும் என சந்தேகப்பட்டு பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பெரம்பலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் சோபாவை அழைத்துக் கொண்டு குழந்தை பிறந்த இடத்திற்கு செல்லும் பொழுது அங்கு குழந்தை அழுதவாறு கிடந்துள்ளது. உடனே குழந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் ஒப்படைத்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயத்ரியும், அவரது குழந்தையும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 10,315 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 15,752 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பெரம்பலூர்:
தமிழக அரசின் உத்தரவின்படி, 16-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் 161 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 359 இடங்களிலும் நேற்று நடைபெற்றது. தற்போது புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவலாம் என்ற அச்சத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் வந்தனர். முகாம்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 10,315 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 15,752 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் அரியலூர் நகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வாலாஜாநகரம் ஊராட்சி மன்ற அலுவலகம், சின்னநாகலூர், ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை கலெக்டர் ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்ற திமுக பிரமுகர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பெரம்பலூரில் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக திருச்சி சரக போலீஸ் டி.ஜ.ஜி. அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து டி.ஜ.ஜி. சரவணசுந்தர் உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் லாட்டரி சீட்டுகளை விற்ற 5 பேரை தனிப்படை போலீசார் பிடித்து, பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பெரம்பலூர் தெப்பகுளம் அருகே உள்ள சின்ன தெற்கு தெருவை சேர்ந்த மருதமணி என்ற மாது(வயது 36), முத்துநகரை சேர்ந்த வடிவேல் (54), திருநகரை சேர்ந்த தண்ணீர்த்தொட்டி சுரேஷ்(37), வடக்கு மாதவி சமத்துவபுரத்தை சேர்ந்த முனியாண்டி மகன் ரவிக்குமார் (31), இந்திரா நகரை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் கலை என்ற சிவா (29) என்பது தெரியவந்தது.
இதில் மருதமணி பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. மாணவரணியின் துணை அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, 5 பேரையும் கைது செய்தனர். முன்னதாக அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ஆயிரத்து 880 ரூபாய் மற்றும் ஒரு கார், மொபட், 7 செல்போன்கள், 3 ஹார்டு டிஸ்க்கள், 3 மெமரி கார்டுகள், 2 பென்டிரைவ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
குன்னம் அருகே வாகன விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஆக்கனூர் பாளையத்தை சேர்ந்தவர் செல்லையா. மகன் பன்னீர் செல்வம் (வயது 34). சம்பவத்தன்று இவர், தனது நண்பர் மணிகண்டனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வாகனம் நன்னை கிராமத்தில் வரும் போது எதிரே ஆனந்தராஜ் (30) என்பவர் ஓட்டிவந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பன்னீர் செல்வம் மற்றும் மணிகண்டனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட இவர்களில் பன்னீர் செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே துறைமங்கலத்தில் போதிய அளவு குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புறநகர் பகுதியான நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு துறைமங்கலம் அவ்வையார் தெரு பகுதியில் 2 வாரங்களுக்கு ஒரு முறை குழாய்கள் மூலம் காவிரி குடிநீர் சுமார் 2 மணி நேரம் வினியோகிக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 11 நாட்களுக்கு முன்பு ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டதாகவும், அப்போது குழாய்களில் தண்ணீர் குறைந்த அளவே வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கேட்டபோது, இனி வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே காவிரி குடிநீர் ஒரு மணி நேரம் வினியோகிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் தற்போது ஒரு வாரம் தாண்டியும் காவிரி குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த கிணற்று தண்ணீரும் சரியாக வினியோகிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலம் அருகே உள்ள சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போதிய அளவு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர். மேலும் அந்தப்பகுதிகளில் தற்காலிகமாக நகராட்சி லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
குன்னம் அருகே தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருமேனி. இவரது மனைவி ராணி. இவர்களது மகன் அகத்தியன்(வயது 23). என்ஜினீயர். திருமேனி திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அகத்தியன் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார்.
தற்போது அவர் மீண்டும் ஆந்திரா செல்வதற்காக ராணியிடம் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து ராணி பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் மாடியில் அகத்தியன் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து ராணி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அகத்தியனுக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாகவும், இதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற 51 பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்தார்.
பெரம்பலூர்:
நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் கழிவறையின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனரும் (இடைநிலை), பள்ளி கட்டிடங்களின் ஆய்வுக்குழுவிற்கு பெரம்பலூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலருமான செல்வகுமார் தலைமை தாங்கினார்.
இதில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்களிடையே பேசும்போது கூறியதாவது:- பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகளில் ஆய்வு செய்ததில், பழைய மற்றும் பாதுகாப்பற்ற 51 பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மூலம் இந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கும் பணிகள் 2 நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
பழைய கட்டிடங்களை இடிக்கும் பணிகளின் போது பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். பள்ளி வளாகங்கள் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் தொடர்ந்து தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். மேலும் பள்ளிகளுக்கு செல்லும் கல்வித்துறை அலுவலர்களும் கற்றல் தொடர்பான ஆய்வுகளுடன் பள்ளி வளாகம் தூய்மையாகவும், பாதுகாப்பாக உள்ளதா? என்பதையும் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், கல்வி மாவட்ட அலுவலர்கள் சண்முகம் (பெரம்பலூர்), ஜெகநாதன் (வேப்பூர்), முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் சிதம்பரம், ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் அன்பழகன் (பெரம்பலூர்), இளங்கோவன் (ஆலத்தூர்), சாந்தப்பன் (வேப்பூர்), ஜோதிலட்சுமி (வேப்பந்தட்டை), பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து பள்ளி கட்டிடங்களின் ஆய்வுக்குழு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வகுமார் செஞ்சேரி, பாளையம், குரும்பலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.