search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் குறைதீர் கூட்டம்"

    • வருகின்ற 17ந் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற உள்ளது.
    • குறைகளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 17ந் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற உள்ளது. எனவே தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.

    மேலும் தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுக்களாக வழங்கலாம். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி, அதன்மீது தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அடுத்து நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகளிடம் நேரிடையாக தெரிவிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    • கொடைக்கானல் அப்சர்வேட்டரி சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் புகார் அளித்தனர்.
    • சேதமடைந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அப்சர்வேட்டரி சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக நகர்மன்ற தலைவர் செல்லத்துரையிடம் கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் புகார் அளித்தனர்.

    இதனைதொடர்ந்து நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், கோட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்டபொறியாளர் ராஜன், ஆகியோர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர்.

    சேதமடைந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் 1-வது வார்டு கவுன்சிலர் கலாவதி தங்கராஜ், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், 8-வது வார்டு கவுன்சிலர் அப்பாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
    • கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்குகிறார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
    • மலைமாடுகளை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விவசாயிகள் கூறியதாவது:-

    தேனி மாவட்ட வனப்பகு தியில் மலைமாடுகளுக்கு வனத்துைறயினர் மேய்ச்சல் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் மலைமாடுகள் நலிவடைந்து வருகின்றன.

    இதன் காரணமாக விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டு மாடு இனங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரம் நிர்ணயித்து மலைமாடுகளை அரசே ஏற்க வேண்டும். கோரையூத்து பகுதியில் விவசாயிகள் வளர்த்து வந்த 11 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. ஆனால் இந்த பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை.

    மேகமலை வனப்பகு தியில் உள்ள பட்டா நிலங்களில் ஏலக்காய், காபி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மேல்மணலாறு வனப்பகுதியில் உள்ள சாலையை பயன்படுத்தி விவசாய நிலங்களுக்கு சென்று வரவும் தோட்டத்தில் புதிதாக ஏலக்காய் நாற்றுகளை நடவு செய்யவும் வனத்துறையினர் தடை விதிக்கின்றனர்.

    அகமலை ஊரடி ஊத்துக்காடு மலை கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின் வினியோகம் தடை ஏற்பட்டு ள்ளது. பராமரிப்பு பணி மேற்கொள்ள வனத்துறை யினர் அனுமதிக்க வில்லை. கண்ணக்கரை- மறைகர் மலை கிராமங்களுக்கு இடையே சாலை அமைக்க விவசாயிகள் சார்பில் 12 ஏக்கர் பட்டா நிலங்கள் அரசுக்கு வழங்கப்பட்டு ள்ளது. சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வனத்துறை அனுமதி வழங்காததால் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அகமலை அரசு பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    • விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகின்ற 30-ந்தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற உள்ளது.
    • விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகின்ற 30-ந்தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர்.

    எனவே விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தோட்டக்கலை வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட நடவடிக்கைகள்,

    பட்டுப்பூ வளர்ப்பு மற்றும் விவசாய கடன் தொடர்பாக கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந்தேதி கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது
    • கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூடத்தில் வருகிற 29-ந் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

    அனைத்து துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உள்ளனர். எனவே அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு வேளாண்மை, தோட்ட க்கலை,

    வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனை கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு குறித்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    • தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24-ந் தேதி நடைபெறுகிறது.
    • விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24-ந் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

    விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்திலுள்ள வேளாண்மை சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்து பயன்பெறவும், மேலும் தங்களது குறைகளை மனுக்களாக குறைதீர் தின கூட்டத்தில் வழங்கிடலாம்.

    விவசாயிகளிடம் பெறப்படும் மனுக்கள் மீது கண்காணித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    ×