என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறை தண்டனை
    X
    சிறை தண்டனை

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை

    பெரம்பலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி வடக்கு தெருவை சேர்ந்தவர்பொன்னு சாமி மகன் செல்வகுமார் (வயது 46). ஆட்டோ டிரைவர். இவர் ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ள சுகுணா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சுகுணாவிற்கு 11 வயதில் ஒரு மகள் இருந்தார். கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வீட்டில் தனியாக இருந்த போது மகள் முறை கொண்ட 11 வயது சிறுமிக்கு செல்வக்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதையறிந்த சுகுணா தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவன் செல்வக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் கலையரசி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளி செல்வகுமாரை கைது செய்தும் சிறையில் அடைத்தார். பின்னர் செல்வகுமார் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது, நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிரி, குற்றவாளி செல்வகுமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், அபராதம் ரூ.5 ஆயிரமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து குற்றவாளி செல்வக்குமாரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 
    Next Story
    ×