என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 26,067 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் மாவட்டத்தில் 10,315 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 15,752 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பெரம்பலூர்:
தமிழக அரசின் உத்தரவின்படி, 16-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் 161 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 359 இடங்களிலும் நேற்று நடைபெற்றது. தற்போது புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவலாம் என்ற அச்சத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் வந்தனர். முகாம்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 10,315 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 15,752 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் அரியலூர் நகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வாலாஜாநகரம் ஊராட்சி மன்ற அலுவலகம், சின்னநாகலூர், ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை கலெக்டர் ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story






