என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • எழுமூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீமிதி திருவிழா நடைபெற்றது.
    • மாரியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, எழுமூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதில், விரதமிருந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இதில் எழுமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதியை கண்டதோடு, அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். முன்னதாக மதியம் பக்தர்களின் பால்குடம் ஊர்வலம் நடந்தது. பாதுகாப்பு பணியில் மங்களமேடு போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    • வீரமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 50), விவசாயி
    • பழனிவேல் ஏரி சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வீரமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 50), விவசாயி.

    இவர் நேற்று காலை வேள்விமங்கலம் அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றார். அங்கு சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்."

    • மங்கூன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது
    • விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மங்கூன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே இந்த துணை மின்நிலையத்திற்குட்பட்ட குரும்பலூர், பாளையம், புதுஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவு சாலை, சிறுவயலூர், குரூர், மாவிலிங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது.

    இத்தகவலை பெரம்பலூர் கிராமியப்பகுதிக்கான உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்து உள்ளார்.

    • எம்.ஜி. ஆர் காலணி மற்றும் இந்திரா காலணியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்க்கு உள்ள பாதையில் குடிநீர் உடைப்பை சரி செய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.
    • பள்ளம் சரியாக மூடப்படததால் இந்தபாதையை பயன் படுத்தும் பள்ளிமாணவர்கள் சுமார் 1 கிமீ தூரம் சுற்றி பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்க்கு உட்பட்டது தெரணி கிராமம். இந்தகிராமத்தில் உள்ள எம்.ஜி. ஆர் காலணி மற்றும் இந்திரா காலணியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்க்கு உள்ள பாதையில் குடிநீர் உடைப்பை சரி செய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.

    பின்னர் குடிநீர்குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. ஆனால் பள்ளம் சரியாக மூடப்பட வில்லை.இதனால் இந்தபாதையை பயன் படுத்தும் பள்ளிமாணவர்கள் சுமார் 1 கிமீ தூரம் சுற்றி பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொது மக்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    எனவே அந்த பாதையை சரி செய்து தரவேண்டும் என தெரணி கிராம மக்களும் மாணவ, மாணவிகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிதாக தெருவிளக்கு அமைத்தல், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையல் கூடம் கட்டுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • 21 கவுன்சிலர்களில் 7 திமுக கவுன்சிலர்கள், கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் ஒருவரும், சுயேட்சை கவுன்சிலர் ஒருவரும் என மொத்தம் 9 கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று அதன் கூட்டுமன்றத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் அம்பிகா தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொ) மனோகர், துணை தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    நகராட்சி அலுவலர் செந்தில்குமார் தீர்மானங்களை வாசித்தார். இதில் புதிதாக தெருவிளக்கு அமைத்தல், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையல் கூடம் கட்டுதல், புதிதாக காவேரி குடிநீர் இணைப்பு வழங்கல்,சிறு பாலம் அமைத்தல், பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தல், தலைவருக்கு புதிதாக கார் வாங்குதல் என்பது உட்பட 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மொத்தம் உள்ள 21 கவுன்சிலர்களில் 7 திமுக கவுன்சிலர்கள், கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் ஒருவரும், சுயேட்சை கவுன்சிலர் ஒருவரும் என மொத்தம் 9 கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.

    இதனால் கலந்து கொண்ட 8 திமுக கவுன்சிலர்கள், 3 அதிமுக கவுன்சிலர்கள், ஒரு சுயேட்சை கவுன்சிலர்கன் என 12 கவுன்சிலர்களை கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சியில் திமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    கூட்டத்தில் கலந்து கொள்ளதாத திமுக கவுன்சிலர்கள் கூறுகையில், வார்டு பகுதிகளில் உள்ள குறைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்வோம் என கூறி ஓட்டு கேட்டு வெற்றிப்பெற்றுள்ளோம். ஆனால் வார்டு பகுதிகளில் செய்யவேண்டிய வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் மறுக்கிறது. இதனால் நகராட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்தால் தான் நாங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தோம்.

    எனவே வரும் காலங்களில் மக்கள் நலன் கருதி கவுன்சிலர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற நகர்மன்றமும், நகராட்சி நிர்வாகமும் முன்வரவேண்டும் என்றனர்.

    • பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் போதை பொருட்களை தடை செய்ய கோரி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் போதை பொருட்களை தடை செய்ய கோரி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    இதில் கலந்து கொண்ட பா.ம.க.வினர் தமிழகத்தில் போதை பொருட்கள் தடை செய்யக்கோரி தமிழக அரசை வலியுறுத்தியும், மேலும் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    • வீட்டின் முன்பு சுபத்ரா உள்ளிட்ட 3 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
    • வீட்டின் சமையல் அறையில் பதிப்பதற்காக சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பா கல் திடீரென்று சரிந்து விளையாடி கொண்டிருந்த சுசிவின்ராஜ் மீது விழுந்தது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி இளவரசி. இவர்களது மகள் சுபத்ரா (வயது 9), மகன்கள் சுசிவின்ராஜ் (7), சுபிராஜ் (3).

    இந்நிலையில் நேற்று ஊரில் ஒரு துக்க காரியத்துக்கு சரவணன் சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு சுபத்ரா உள்ளிட்ட 3 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    வீட்டின் சமையல் அறையில் பதிப்பதற்காக சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பா கல் திடீரென்று சரிந்து விளையாடி கொண்டிருந்த சுசிவின்ராஜ் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

    இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுசிவின்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வி.களத்தூர் கிராமத்தில் 1912 ம் ஆண்டு முதல் செல்லியம்மன் கோவில் திருவிழாக்களில் இந்து மற்றும் முஸ்லிம் தரப்பு மக்களிடையே தகராறு இருந்து வந்தது.
    • சமுதாய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தை நிலை நிறுத்தும் வகையில் நேற்று பூரணி பொங்கல் மாவிளக்கு சுவாமி திருவீதி விழாவும் நடைபெற்றது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் 110 ஆண்டுகள் கழித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா முயற்சியின் பேரில் செல்லியம்மன் கோவில் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடை பெற்றது.

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கிராமத்தில் 1912 ம் ஆண்டு முதல் செல்லியம்மன் கோவில் திருவிழாக்களில் இந்து மற்றும் முஸ்லிம் தரப்பு மக்களிடையே தகராறு இருந்து வந்தது.

    தற்போது பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா முயற்சியின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர், வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் முன்பாக இரு தரப்பு மக்களையும் அழைத்து பல கட்டமாக அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வி.களத்தூர் கிராமத்தில் எவ்வித பிரச்சனையும் இன்றி அமைதியான முறையில் திருவிழா நடத்திட இருதரப்பினரும் ஒப்பு கொண்டதை தொடர்ந்து கோவில் திருவிழாக்கான அழைப்பிதழை வழங்கி திருவிழாவினை முன்னின்று நடத்த அழைப்பு விடுத்தனர்.

    வி.களத்தூர் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா கடந்த மே மாதம் 16ம் தேதி அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கான அழைப்பிதழை முஸ்லிம் ஜமாத்தார்கள் இந்து சமய பிரமுகர்களிடம் வழங்கி அவர்களை திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்கள். மேலும் அவர்களுக்கான உரிய மரியாதை வழங்கி எவ்வித அசம்பாவிதமும் இன்றி விழா சிறப்பாக சுமூகமாக இருதரப்பு சமுதாயத்தினரும் இணைந்து நடைபெற்று முடிந்தது.

    வி.களத்தூர் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் வகையறா ஆலயங்களில் ஊரணி பொங்கல் மாவிளக்கு சுவாமி திருவீதி உலா 30ந்தேதி நேற்று முதல் 31 மற்றும்1ம் தேதி ஆகிய மூன்று தினங்களுக்கு நடைபெற திட்டமிடப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

    சமுதாய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தை நிலை நிறுத்தும் வகையில் நேற்று பூரணி பொங்கல் மாவிளக்கு சுவாமி திருவீதி விழாவும் நடைபெற்றது. அதில் முஸ்லிம் ஜமாத்தார் திருவிழாவில் கலந்து கொண்டனர். மேலும் இரு சமுதாய முக்கிய பிரமுகர்கள் இணைந்து எவ்வித அசம்பாவிதமும் இன்றி கோவில் விழா சுமுகமாக நடைபெற மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன், வட்டாட்சியர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • சிறுவாச்சூர் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததை அறிந்து பிடிக்க முயன்ற போது தப்பித்தாக கூறப்படுகிறது.
    • இதைத் தொடர்ந்து வனச்சரக அலுவலர் பழனிக்குமரன், வனவர் பிரதீப் குமார், வனக்காப்பாளர்கள் அன்பரசு, ஜெஸ்டின் செல்வராஜ், ரோஜா மற்றும் செல்வகுமாரி மற்றும் வனக்காவலர்கள் சிலம்பரசன் வீரராக ன், அறிவுச்செல்வன் ஆகியோர் எசனை வனப்பகுதி வரை விரட்டி சென்று அவர்களை பிடித்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே வனப்பகுதியில் வெளியூரிலிருந்து வனவிலங்குகளை வேட்டையாட வந்த 21பேரை வனத்துறையினர் விரட்டி பிடித்தனர்.

    பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிக்குமரன் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் இருந்தனர்.

    அப்போது திருச்சி, விராலிமலை , மணப்பாறை, புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்து 21 பேர் வேட்டையாடக்கூடிய குழு ஒன்று வேட்டை நாய்கள்,கருவிகளுடன் பெரம்பலூர் அருகே அள்ள சிறுவாச்சூர் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததை அறிந்து பிடிக்க முயன்ற போது தப்பித்தாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து வனச்சரக அலுவலர் பழனிக்குமரன், வனவர் பிரதீப் குமார், வனக்காப்பாளர்கள் அன்பரசு, ஜெஸ்டின் செல்வராஜ், ரோஜா மற்றும் செல்வகுமாரி மற்றும் வனக்காவலர்கள் சிலம்பரசன் வீரராக ன், அறிவுச்செல்வன் ஆகியோர் எசனை வனப்பகுதி வரை விரட்டி சென்று அவர்களை பிடித்து

    பெரம்பலூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து வனப்பாதுகாப்பு சட்ட அடிப்படையில் அவர்களிடம் அபராதம் விதித்து வனவிலங்கு பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

    • கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏ.டி.எம். அமைக்கப்படும் என்று மாநில பதிவாளர் தெரிவித்துள்ளார்
    • விவசாயிகளுக்கு தேவையான சேவைகளையும் வழங்க முடியும்.

    பெரம்பலூர்:

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏடிஎம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் தெரிவித்தார்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுவது தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட துணைப்பதிவாளர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டுறவு சங்க ங்களின் மாநில பதிவாளர் சண்முக சுந்தரம் செய்தியா ளர்களிடம் கூறியதாவது :-

    கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்தும் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இச்சேவை மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான பல்ேவறு சேவைகளையும் வழங்க முடியும்.

    கூட்டுறவு கடன் சங்கங்களில் காலிப்ப ணியிட ங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் நகைக்கடன் மற்றும் விவசாயக் கடன் போன்ற சேவைகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளுக்கு சென்று வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்பதால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுவ ருகின்றன.

    கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்தையும் கணினி மயமாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

    மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏடிஎம் மையங்கள் அமைக்க ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட நபர்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் இடங்களில் மட்டுமே ஏடிஎம் இயந்தி ரங்கள் பொருத்த முடியும் என்பதால் அது குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது என்றார்.

    • மத்திய அரசு திட்டத்தில் தொழிலாளர்கள் இணைவதற்கான வழிகாட்டுதல் கூட்டம் நடந்தது.
    • ஆலோசனை வழங்குதல் கூட்டம் நடந்தது

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு தொழிலாளர் ஆணையர் உத்தரவின்படி, திருச்சி கூடுதல் ஆணையர் மற்றும் இணை ஆணையர் வழிகாட்டுதலின்பேரில் பெரம்பலூரில் தொழிலாளர் நல அலுவலகத்தில் மத்திய அரசின் இ-சார்ம் திட்டத்தின் கீழ் அமைப்பு சாரா தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்காக, பதிவு பெற்ற தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாஸ்கரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், மத்திய அரசின் திட்டத்தில் ஏற்கனவே அமைப்பு சாரா மற்றும் கட்டுமான வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களை சேர்க்கவும், மேலும் சிறு, குறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கால்நடை வளர்க்கும் தொழில் செய்பவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், நெசவாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், செங்கல் சூலை மற்றும் கல்குவாரி தொழிலாளர்கள், முடி திருத்துவோர், ஆட்டோ ஓட்டுனர்கள், சாலையோர வியாபாரிகள், தேசிய ஊரக வேலைப்பணியாளர்கள், பால் ஊற்றும் விவசாயிகள் என 18 வயது முதல் 59 வயது வரையிலான அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களும் இ-சார்ம் என்ற இணைய தளத்தில் சுயமாகவோ, அருகில் உள்ள இ-சேவை மையத்திற்கு தங்களது வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை மற்றும் தங்களது செல்போனுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம், என்றார். கூட்டத்தில் உதவி ஆணையர் மூர்த்தி (அமலாக்கம்) மற்றும் பதிவு பெற்ற தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • 2 அக்காள்களுடன் அமுதன் வசித்து வந்தாா்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் அமுதன் (வயது 24). காமராஜ் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து தனது தாய் சுசிலா, 2 அக்காள்களுடன் அமுதன் வசித்து வந்தாா். மேலும் அவர் தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்து தனது குடும்பத்தை கவனித்து வந்தார். சம்பவத்தன்று வார விடுமுறையில் வீட்டில் இருந்த அமுதன் இரவில் அறைக்கு தூங்கச்சென்றார். இந்நிலையில் நேற்று காலை அறையில் அமுதன் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அமுதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதனின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×