என் மலர்
நீலகிரி
- பார்வுட் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நள்ளிரவில் காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் வந்தது.
- வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையால் சேதம் அடைந்த வீட்டை பார்வை யிட்டனர்.
ஊட்டி,
கூடலூர் தாலுகா ஓவேலி பகுதியில் பல இடங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் காட்டு யானைகள் வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பாரம் பகுதியில் வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.
பின்னர் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டினர். இந்த நிலையில் பார்வுட் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நள்ளிரவில் காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் வந்தது.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. அப்போது அங்குள்ள வீட்டை காட்டு யானை ஒன்று உடைத்து அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியது.
இந்த சமயத்தில் வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். இந்நிலையில் மின்சாரமும் தடைபட்டது. சிறிது நேரம் கழித்து காட்டு யானைகள் அங்கிருந்து சென்றது. இதனால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையால் சேதம் அடைந்த வீட்டை பார்வை யிட்டனர்.
அப்போது காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து ஓவேலி வனச்சரகர் யுவராஜ், வனவர் சுதிர்குமார் ஆகியோர் கூறியதாவது, சம்பந்தப்பட்ட தொழிலாளி வீட்டில் பலாப்பழங்கள் வைத்துள்ளனர். அதன் வாசனையை முகர்ந்தபடி காட்டு யானைகள் அப்பகுதிக்கு வந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் தனியார் எஸ்டேட் நிர்வாகமும் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. 2 இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன.
- அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவா்களைத் தங்கவைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், பந்தலூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் நிருபர்களிடம் கூறியதாவது, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடா்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
ஆனால் இதுவரை பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்பட வில்லை. இதுவரை மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டதில் கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. 2 இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன. பாதிப்புகள் மிக குறைந்த அளவிலே ஏற்பட்டுள்ளன. முகாம்களில் பொதுமக்களை தங்கவைக்கும் அளவுக்கு எந்த பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படும் இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள 283 பகுதிகளுக்கும் 42 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.
குறிப்பாக மண்சரிவு ஏற்படும் இடங்களைத் தொடா்ந்து கண்காணிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக மீட்பு பணியை மேற்கொள்ள தேவையான எந்திரங்கள், உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவா்களைத் தங்கவைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. பாதிப்புகளை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடா் மீட்பு படை ஏற்கெனவே வரவழைக்கப்பட்டுள்ளது.
இயற்கை இடா்பாடுகளால் பாதிப்புகள் ஏற்படும்போது மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423 2450034, 2450035 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். ஊட்டி, குன்னூா், கூடலூா், பந்த லூா், கோத்தகிரி, குந்தா ஆகிய 6 வட்டங்களிலும் 24 மணிநேரக் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
சாலையோரம் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற கோட்டாட்சியா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மழை ெதாடங்கும் முன்பே 200-க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. இதுதவிர ஏதேனும் அபாயகரமான மரங்கள் இருக்கும் பட்சத்தில் வருவாய்த் துறை சாா்பில் ஆய்வு செய்து மரங்களை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கூடலூா் பழைய கோர்ட் சாலையில் உள்ள தனியாா் பள்ளியின் தடுப்பு வேலி மழையினால் பாதிக்கப்பட்டு மண் சரிந்துள்ள பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டாா்.
வருவாய் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, வட்டாட்சியா் ராஜேஸ்வரி உள்ளிட்ட அரசு துறை அலுவலா்கள் உடன் இருந்தனா்.
- உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
- கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.
நீலகிரி:
தென்மேற்கு பருவமழை காரணமாக தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 4 தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை கொட்டியது. இந்த மாவட்டங்களில் நேற்று பகலில் சாரல் மழை பெய்தது. சில இடங்களில் மிதமான மழை பெய்தது.
இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி, கடையம், கீழப்பாவூர், செங்கோட்டை ஆகிய 5 வட்டாரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் துரைரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
- பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
- ஆய்வின்போது பலர் உடனிருந்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், ரூ.35 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை, மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டத்தில், 2021-2022-ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடுஹட்டி ஊராட்சிப்பகுதியில் ரூ.18 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தையும், 2022-2023 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டபெட்டு கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் சவ சடங்கு தளத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டதையும், 2022-2023 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பில் கட்டபெட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் நடைபெற்று வரும் சமையற்கூடம் கட்டும் பணியினையும், 2022-2023 ஆம் ஆண்டு 15-வது மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் மேற் கொள்ளப்பட்டுள்ள பராமரிப்பு பணிகள் என மொத்தம் ரூ.35 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும், முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, கோத்தகிரி தாசில்தார் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், அனிதா, உதவி பொறியாளர்கள் செல்வதுரை, ஜெயந்தி உட்பட பலர் உடனிருந்தனர்.
- பேரூராட்சி அலுவலகத்தில் பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
- 5 பேரூராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்கள் சுமார் 30 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரவேணு,
கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி மூலம் செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில் தேவர் சோலை, ஓவேலி, சோலூர், நடுவட்டம், கேத்தி உள்ளிட்ட 5 பேரூராட்சிகள் பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் தினந்தோறும் பயன் படுத்தும் குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்தல், இல்லங்களுக்கே சென்று குப்பைகள் எவ்வாறு வீடுகளில் இருந்து சேகரிக்கப்படுகிறது, வளம் மீட்பு பூங்காவில் எவ்வாறு குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகள் மறுசுழற்சி எவ்வாறு செய்யபடுகிறது என செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.பொது கழிப்பிடங்கள் எவ்வாறு முறையாக பராமரிப்பு செய்வது குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த திடக்கழிவு மேலாண்மை பயிற்சி பட்டறையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து5 பேரூராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்கள் சுமார் 30 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடக்கிறது.
- குன்னூரில் தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்தின் டேன் டீ தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
- மேலும் வனத்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
குன்னூர்,
நீலகிரி, வால்பாறை போன்ற பகுதிகளில் தமிழக அரசின் தேயிலை தோட்ட கழக தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இவை தமிழக அரசின் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
குன்னூரில் தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்தின் டேன் டீ தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. டேன் டீ தேயிலை தலைமை அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர்மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் அமைச்சர் டேன் டீ தேயிலை பற்றியும் தேயிலை சந்தையில் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது என்று விரிவாக கேட்டறிந்தார்.
மேலும் வனத்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டேன் டீ பொதுமேலாளர் அசோக் குமார். டேன் டீ தலைமை அதிகாரி சூப்பிரிட் முகமத். நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரி கவுதம். கோவை மாவட்ட வனத்துறை அதிகாரி ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
- கூடலூர் அடுத்த ஓவேலி பகுதியில் பெய்த மழைக்கு அங்குள்ள அரசு பள்ளியின் அருகே நின்ற மரம் முறிந்து பள்ளி மீது விழுந்தது.
ஊட்டி:
தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே நேற்று காலை முதலே மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. அவலாஞ்சி, அப்பர் பவானி பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.
2 அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் அந்த அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர தொடங்கி உள்ளது.
குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்துகொண்டே இருந்தது. நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. இன்றும் மழை பெய்து கொண்டே இருக்கிறது.
இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.
தேயிலை தோட்டங்களில் பணியாளர்கள் பிளாஸ்டிக் போர்வைகளை அணிந்தபடி தங்களது பணியில் ஈடுபட்டனர்.
பர்னில் சாலை, குழிச்சோலை சாலை, சி.எஸ்.ஐ. பள்ளி பகுதி, தலைக்குந்தாவில் இருந்து அத்திக்கல் செல்லும் சாலை, ஓவேலி-பாலவாடி சாலை, தேவர்சோலை-சர்க்கார் மூலை, சேரங்கோடு அடுத்த அய்யன் கொல்லியின் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலை, மேல்குன்னு சாலை உள்பட 8 இடங்களில் மரங்கள் முறிந்து நடுரோட்டில் விழுந்தன.
இதனால் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
கூடலூர் அடுத்த ஓவேலி பகுதியில் பெய்த மழைக்கு அங்குள்ள அரசு பள்ளியின் அருகே நின்ற மரம் முறிந்து பள்ளி மீது விழுந்தது. இதில் மேற்கூரை லேசான சேதம் அடைந்தது.
பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழையால் எகோட்டப்பாடி, மழவன்சேரம்பாடி, பிதர்காடு உள்பட பல கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் இருளில் மூழ்கின.
இதேபோல் மழைக்கு பந்தலூர், குன்னூர் பகுதிகளில் 2 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. மேலும் ஓவேலியில் வாகனத்தில் சென்ற ஒருவர் மீது மரம் முறிந்து விழுந்ததில் அவர் காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
தொடர் மழைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறிய அளவிலான மண்சரிவுகளும் ஏற்பட்டது. அவை உடனுக்குடன் தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்து றையினரால் அப்புறப்படுத்தப்பட்டன.
குன்னூர்-கோத்தகிரி சாலையில் உள்ள லாரி நிலையத்தில் பாரம் ஏற்றிய லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று பெய்த மழைக்கு ராட்சத மரம் ஒன்று சரிந்து லாரியின் மீது விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 20 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. நேற்று 18 செ.மீ மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
அவலாஞ்சி-204, அப்பர் பவானி-110, சேரங்கோடு-93, பந்தலூர்-70, தேவாலா-68 கிளைன்மார்கன்-60, நடுவட்டம்-58, ஓவேலி-54, கூடலூர், பாடந்தொரை-44, செருமுள்ளி-42, எமரால்டு-41, மேல் கூடலூர்-40.
- 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் விடுமுறை
- புதுச்சேரியின் மாகே-விலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக முதலில் நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில ஆளுகைக்கு உட்பட்ட கேரளாவில் உள்ள மாகே-விலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. இதனால் கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தின் வால்பாறையில் கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, கருமலை ஆறு, சோலையாறு சுங்கம் ஆறு மற்றும் கருமலை இறைச்சல் பாறை ஆறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இது தவிர நீர்வீழ்ச்சிகள், தடுப்பணைகள் உள்பட அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
- நிகழ்ச்சியில் காகித பைகளை பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கினர்.
ஊட்டி,
சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தையொட்டி கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி வளாகத்தில் தாளாளர் தன்ராஜ் அறிவுறுத்தலின்படி, நிர்வாக இயக்குநர் சம்ஜித் தன்ராஜ் முன்னிலையில் மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் பிளாஸ்டிக் பொருட்களை பொது இடம், விவசாய நிலம் மற்றும் நீர்நிலைகளில் வீசி எறிவதால் ஏற்படும் விளைவுகள், சுற்றுச் சூழல் சீர்கேடு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சரோ தன்ராஜ், துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் மாணவர்கள் தயாரித்த காகித பைகளை பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கினர். முன்னதாக ஆசிரியை ஆஷா வரவேற்றார். மாணவி ஸ்ரீஆதிரா நன்றி கூறினார்.
- அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் அறிமுக விழா நடந்தது.
- 12-ம் வகுப்புக்கு பிறகு என்ன மேல்படிப்பு படிக்கலாம் என்பது தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
குன்னூர்,
குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் அறிமுக விழா நடந்தது. குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார் தலைமை தாங்கினார்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுமதி மாணவ மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாட்டு பாடி அசத்தினார். அதன்பிறகு இளம்தலைமுறையினருக்கு கல்வி மிகவும் முக்கியம்.
தமிழக அரசு கல்வி மேம்பாட்டுக்காக அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதனை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு முழு முயற்சியுடன் படிக்க வேண்டும். அதன்பின் என்ன செய்ய வேண்டும் என்பதனை முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கேற்ப வியூகங்களை வகுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து நான் முதல்வன் கல்லூரி கனவு என்ற கையேடு மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. அடுத்தபடியாக 12-ம் வகுப்புக்கு பிறகு என்ன மேல்படிப்பு படிக்கலாம் என்பது தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதற்கிடையே மாணவ- மாணவியருக்கு தேவையான சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவற்றை பெறும் வகையில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
- ஆண்டுதோறும் ஜூலை 3-ந்தேதி சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- மாணவ -மாணவிகள் நெகிழிப்பை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர்.
கோத்தகிரி,
ஆண்டுதோறும் ஜூலை 3-ந்தேதி சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கோத்தகிரி ஐ.சி.எஸ்.பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோத்தகிரி மார்க்கெட் திடலில் மாணவ -மாணவிகள் பங்கேற்ற நெகிழிப்பை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ள விக்கி, நாவல், பிளம்ஸ், பேரிக்காய், பிச்சிஸ் ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
கோத்தகிரி ஐ.சி.எஸ். பள்ளி விழிப்புணர்வு பேரணியில் தாளாளர் செந்தில்ரங்கராஜன், முதல்வர் மகேஸ்வரி ரங்கராஜன், கோத்தகிரி பேரூராட்சி தலைவி ஜெயக்குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- எண்ைணய் வித்து பயிரான சூரியகாந்தி, 120 நாட்களில் வளரும் வீரிய ஒட்டுப்பயிராகும்.
- வாகனஓட்டிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சி
ஊட்டி,
ஊட்டி அடுத்த மசினகுடி, மாவனல்லா உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, சூரியகாந்தி மலர்கள் ஆகியவை பயிரிடப்பட்டு உள்ளன.
இது மைசூர் சாலையில் பந்திப்பூர் தாண்டி குண்டல்பேட் வரை, பல ஏக்கர் பரப்பளவில் செழித்து வளர்ந்து நிற்கின்றன. இதில் எண்ைணய் வித்து பயிரான சூரியகாந்தி, 120 நாட்களில் வளரும் வீரிய ஒட்டுப்பயிராகும். குறைந்த நீரில் வளர்ந்து அதிக மகசூல் தரக்கூடியது.
தமிழகத்தில் நீலகிரி முதல் கர்நாடகாவின் குண்டல்பேட் வரை கண்களை பறிக்கும் அழகுடன் சூரியகாந்தி மலர்கள் பூத்து குலுங்குவது, அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எனவே அவர்கள் சூரிய காந்தி மலர்களுக்கு மத்தியில் நின்றபடி செல்போனில் செல்பி எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.






