என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி
    X

    கோத்தகிரியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

    • பேரூராட்சி அலுவலகத்தில் பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
    • 5 பேரூராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்கள் சுமார் 30 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி மூலம் செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில் தேவர் சோலை, ஓவேலி, சோலூர், நடுவட்டம், கேத்தி உள்ளிட்ட 5 பேரூராட்சிகள் பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    இதில் பொதுமக்கள் தினந்தோறும் பயன் படுத்தும் குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்தல், இல்லங்களுக்கே சென்று குப்பைகள் எவ்வாறு வீடுகளில் இருந்து சேகரிக்கப்படுகிறது, வளம் மீட்பு பூங்காவில் எவ்வாறு குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகள் மறுசுழற்சி எவ்வாறு செய்யபடுகிறது என செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.பொது கழிப்பிடங்கள் எவ்வாறு முறையாக பராமரிப்பு செய்வது குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த திடக்கழிவு மேலாண்மை பயிற்சி பட்டறையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து5 பேரூராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்கள் சுமார் 30 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடக்கிறது.

    Next Story
    ×