என் மலர்
நீலகிரி
- பந்தலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
- மாவட்டம் முழுவதும் மருத்துவமனைகள், கிராமப்புற சாலைகள் துாய்மைபடுத்தப்பட்டன.
ஊட்டி,
காந்திஜெயந்தியை முன்னிட்டு நீலகிரி சேவா கேந்திரம் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மாவட்டம் முழுவதும் 45 இடங்களில் இந்த பணி நடந்தது.
பந்தலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். கூடலூர் எம்.எல்.ஏ., ஜெயசீலன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் கோவில் வளாகங்கள், குளங்கள், மருத்துவமனைகள், கிராமப்புற சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள், பள்ளி வளாகங்கள் துாய்மைபடுத்தப்பட்டன.
அந்தந்த பகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இந்த மக்கள் பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோட்ட பொறுப்பாளர் மனோஜ் குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- பஸ்சில் பள்ளி முடிந்து திரும்பிய மாணவ-மாணவிகள் சிலர் ஏறினர்.
- வீடியோ விவகாரம் கண்டக்டர் பணியாற்றும் ஊட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளுக்கும் சென்றது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கேரள மாநிலம் கள்ளிக்கோட்டைக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த பஸ்சில் ஊட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த பாபு என்பவர் கண்டக்டராக இருந்தார்.
அந்த பஸ்சில் பள்ளி முடிந்து திரும்பிய மாணவ-மாணவிகள் சிலர் ஏறினர். அவர்கள் பந்தலூர், சேரம்பாடி அருகே உள்ள காப்பிக்காடு என்ற இடத்தில் இறங்கினர். அப்போது மாணவ-மாணவிகளிடம் இந்த பஸ் எக்ஸ்பிரஸ் இனிமேல் இதில் ஏறக்கூடாது, டவுன் பஸ்களில் ஏறிச் செல்லுங்கள் என கண்டக்டர் பாபு கண்டித்தார்.
இதற்கு பஸ்சில் இருந்த பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி மாணவ-மாணவிகள் தானே அவர்களை அனுசரித்து அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கிச் செல்லுங்கள் என கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கண்டக்டர் பாபு, கள்ளிக்கோட்டைக்கு போய் சேர வேண்டுமா, வேண்டாமா? என கேட்டதுடன் பயணிகளை பார்த்து மிரட்டவும் செய்துள்ளார். இதனை யாரோ ஒரு பயணி வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டார்.
இந்த வீடியோ விவகாரம் அவர் பணியாற்றும் ஊட்டி அரசு போக்குவரத்து கழக பணி மனை அதிகாரிகளுக்கும் சென்றது. அதன்பேரில் பாபு மீது விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் பயணிகளுடன் தகராறு செய்து அவர்களை மிரட்டியது உறுதியானது. இதைத்தொடர்ந்து கண்டக்டர் பாபு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது.
- ஊட்டி 200-ஐ சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கோரிக்கைகள் அனைத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுச் சென்று தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கடநாடு ஊராட்சி பொது நிதியின் கீழ் ரூ.26.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கடநாடு ஊராட்சி மன்ற அலுவலகம், தூனேரி ஊராட்சி அணிக்கொரை கிராமத்தில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடம் என மொத்தம் ரூ.46.80 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-
ஊட்டி நகராட்சி மாா்க்கெட்டை புதுப்பிக்கும் வகையில் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் காா் நிறுத்துமிடம் அமைக்க ரூ.18 கோடியும், புதிய மாா்க்கெட் பகுதியில் கட்டிடம் கட்ட ரூ.18 கோடியும் என மொத்தம் ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
மலை மாவட்ட மக்களை சிறப்பிக்கும் வகையில் ஊட்டி 200-ஐ சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்ட பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், வளா்ச்சித் திட்டங்கள் குறித்து கோரிக்கைகள் அனைத்தும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுச் சென்று உடனடியாக தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஆர். கணேஷ் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாராஜ், குன்னூா் கோட்டாட்சியா் பூஷ்ண குமாா், ஊட்டி நகராட்சி துணைத் தலைவா் ரவிக்கு மாா், ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாதன் ,கடநாடு ஊராட்சி தலைவர் சங்கீதாசிவமணி, கடநாடு ஊராட்சி உறுப்பினர் சிவமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- நாள்தோறும் இரவு நேரங்களில் வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கரடி சேதப்படுத்திய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரடிகள் உணவைத் தேடி வனப்பகுதியில் இருந்து குடியிருப்புகளுக்கு வருவது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள முத்தநாடு எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த கரடிகள் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தன. பின்னர் அங்கிருந்த உணவுப்பொருட்களை தின்று சூறையாடி விட்டுச் சென்றனர். நாள்தோறும் இரவு நேரங்களில் வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கரடியை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கரடி சேதப்படுத்திய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
கதவுகளில் பாதுகாப்பை ஏற்படுத்த இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், கரடிகளுக்கு பிடித்த உணவுகளான எண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பான அறைகளில் வைக்கவும் கிராம மக்களுக்கு உத்தரவிட்டனர். மீண்டும் கரடி வந்தால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- குன்னூர் அருகே நடந்த கூட்டத்தில் அதிகாரி வலியுறுத்தல்
- கடந்த மாதத்தில். ஆறு குழந்தைகளை அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு பராமரித்து வருகிறோம்.
அருவங்காடு,
நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூகப் பணி திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் பெண் குழந்தைகளை பாலியல் கொடுமைகளிலிருந்து மீட்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் நகரப் பகுதி மட்டும் அல்லாமல் பேரூராட்சிகள், வட்டார அளவில், கிராம அளவிலும் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக. குன்னூர் அருகே உள்ள உளிகள் பேரூராட்சியில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு. பேரூராட்சி தலைவர் ராதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட குழந்தைகள் நல சமூகப் பணியாளர் சிந்து பேசியதாவது:-
குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை யாரேனும் கட்டாயப்படுத்தி வன்கொடுமையில் ஈடுபடுத்தி இருந்தால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடந்த மாதத்தில். ஆறு குழந்தைகளை அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு பராமரித்து வருகிறோம்.
ஒரு சில குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு பயந்து அவர்களை பலாத்காரம் செய்த நபர்களை விட்டு வேறொரு நபர்களை கை காட்டுவதால் சம்பந்தம் இல்லாத ஒரு சிலர் இதுபோன்ற வழக்கில் சிக்கி வருகின்றனர்.
பொதுவாக இத்தொடர்பான புகார்கள் வந்தவுடன் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கை கிடைக்க ஆறு மாதங்கள் வரை ஆகும். இதனால் ஒரு சிலர் தவறு செய்யாமலே தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
எனவே பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளை அவ்வப்போது கண்காணித்து அவர்களிடம் நண்பர்களாக பழகி. அவர்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பயமின்றி கூற ஊக்க வார்த்தைகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் அச்சத்தை தவிர்த்து பயமின்றி பெற்றோரிடம் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆ.ராசா எம்.பி.யிடம் ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை முன் வைத்தனர்
- ரூ.1 கோடி மதிப்பில் எச்.பி.எப் பகுதியின் அருகில் வரவேற்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி,
ஊட்டியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நகராட்சி தினசரி சந்தையை இடித்து புதிய கட்டிடம் கட்டபல்வேறு காரணங்களால் எதிர்ப்பு தெரிவித்து வரும் மார்க்கெட் வியாபாரிகள் கடந்த மாதம் நீலகிரி எம்.பி. ஆ.ராசாவை சந்தித்தனர்.
ஆ.ராசா எம்.பி.யிடம் ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்ட எம்.பி. ஆ.ராசா எம்.பி. மார்க்கெட் சங்க நிர்வாகிகளிடம் விவரங்களை கேட்டறிந்து, தானே பொறுப்பேற்று தனது எம்.பி நிதியின் மூலம் தற்காலிக கடைகளை கட்டி தருவதாக உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து ஊட்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் மார்க்கெட் வியாபாரிகளுக்காக, எம்.பி. நிதியில்அமைக்கப்பட்டு வரும் தற்காலிக கடைகளை ராசா எம்.பி. ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஊட்டி நகரின் மிகத் தொன்மையான மார்க்கெட் கடைகளை புதுப்பிக்கும் வகையில்நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பாக ஏறத்தாழ கார் பார்க்கிங் அமைப்பதற்கு ரூ.18 கோடியும், புதிய மார்க்கெட் கட்டுவதற்கு ரூ.18 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
அதுவரை ஊட்டி ரேஸ்கோர்ஸ் பார்க்கிங் பகுதியில்ரூ .20 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிகமாக கடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் சிற்றுந்துகள் நிறுத்துவதற்கான இடத்துடன் கூடிய தமிழகத்திலேயே முன்னோடி மார்க்கெட்டாக ஊட்டி நகராட்சி மார்க்கெட் அமைய உள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊட்டி 200-யினை கொண்டாடும் வகையில் ஊட்டி நகராட்சிக்கு ரூ.10 கோடி சிறப்பு திட்ட நிதி வழங்கி, பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் புதியதாக உருவாக்கப்பட்டும், மேம்படுத்தப்பட்டும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
மேலும், ரூ.1 கோடி மதிப்பில் எச்.பி.எப் பகுதியின் அருகில் வரவேற்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியமான தோடர் மக்களை சிறப்பிக்கும் வகையில், அவர்களின் குடில் மற்றும் உருவ சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நீலகிரி வனப்பகுதியில் உள்ள விலங்குகளை அங்கீகரிக்கும் வகையில் யானை சிலை மற்றும் மான் சிலைகள் வைக்கப்பட்டது
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஊட்டி எம்.எல்.ஏ. ஆர். கணேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்சினி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், தி.மு.க. நகர செயலாளரும், கவுன்சிலருமான ஜார்ஜ், கவுன்சிலர் முஸ்தபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்த விபத்தை தொடர்ந்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.
- சாலையோரங்களில் இருபுறமும் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.
ஊட்டி,
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த 60 பேர் கடந்த 30-ந் தேதி தனியார் பஸ் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் மாலையில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.
குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் என்ற இடத்தில் 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் தடுப்புச்சுவரில் மோதி 50 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்தை தொடர்ந்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளனர். விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் விபத்து நடந்த பகுதியில் தற்காலிகமாக நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யவேண்டும். விபத்து நிகழாத வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். சாலையோரங்களில் இருபுறமும் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என எச்சரித்தனர்.
- கிராம சபை கூட்டத்தில் 73 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அருவங்காடு,
குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை ஊராட்சி சார்பில் நஞ்சப்பசத்திரத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் தலைவர் மஞ்சுளா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக குன்னூர் சிறப்பு தாசில்தார் சீனிவாசன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் மழை நீர் சேகரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் பராமரிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் ஏற்படும் வகையில் உள்ள பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து சோலடா மட்டம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊருக்கு ரேஷன் கடை அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். அங்குள்ள நூலக கட்டிடத்தில் இந்த கடையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும் குன்னூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. சோலடா மட்டத்தில் 290 குடும்ப அட்டைகள் உள்ளது.
அனைவரும் அருகே உள்ள கோடமலை பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி சுமந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் இன எச்சரித்தனர்.
தொடர்ந்து குன்னூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் இப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது இந்த கிராம சபை கூட்டத்தில் 73 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- தோட்டக்கலைத் துறை சார்பில் 3 பேருக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் தார்ப்பாலின் மண்புழு உர படுக்கை செடி தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார்.
- கோரிக்கை மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
அரவேணு,
காந்தி ஜெயந்தி நாளான நேற்று கோத்தகிரியில் உள்ள 11 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. நடுஹட்டி கிராமத்தில் ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அருணா முதல் முறையாக பங்கு பெற்ற கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரனும் பங்கு பெற்றார்.
அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மகளிரின் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
பெண்களின் உயர்கல்வியை உறுதிப்படுத்த அரசு கொண்டு வந்த முன்மாதிரி திட்டங்களில் புதுமைப்பெண் திட்டமும் ஒன்றாகும். மேலும் நான் முதல்வன் முலம் மாணவ-மாணவிகளுக்கு எதிர்கால கல்வி குறித்து சிறப்பான ஆலோசனை வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை சார்பில் 5 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு மருத்துவ புத்தகங்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் 3 பேருக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் தார்ப்பாலின் மண்புழு உர படுக்கை செடி தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
மேலும் பல்வேறு துறைகளில் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சிகளை அமைச்சர் மற்றும் கலெக்டர் பார்வையிட்டனர் முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராம சபை குறித்து பேசும் காணொலி காட்சியை அனைத்து மக்கள் முன்னிலையில் பார்வையிட்டனர். இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜக்கனாரை ஊராட்சியில் அதன் தலைவர் சுமதி சுரேஷ் தலைமையிலும், கொனகவக்கரை ஊராட்சியில் ஜெயப்பிரியா தலைமையிலும், நெடுங்குளா ஊராட்சியில் சுகுணா சிவா தலைமையிலும், குஞ்சப்பனை ஊராட்சியில் விமான வேல் மணிகண்டன் தலைமையிலும், கோடநாடு ஊராட்சியில் சுப்பிகாரி தலைமையிலும், தேனாடு ஊராட்சியில ஆல்வின் தலைமையிலும், அரக்கோடு ஊராட்சி ஷீலா தேவி, தெங்குமரடா ஊராட்சியில் அதன் தலைவர் மனோகரன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.
- ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு இரண்டாவது சீசன் நடந்து வருகிறது.
- மலைப்பாதைகளில் கவனமுடன் வாகனங்களை இயக்க, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு இரண்டாவது சீசன் நடந்து வருகிறது. இங்குள்ள இத்தாலியன் கார்டன், கண்ணாடி மாளிகையில் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகிறது. பல ஆயிரம் மலர்கள் மாடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக, தொடர் விடுமுறை என்பதால், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு, 29-ந் தேதி முதல், நேற்று 2-ந் தேதி வரையிலான 4 நாட்களில், 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
அவர்கள், 10 ஆயிரம் மலர் தொட்டியில் வடிவமைக்கப்பட்ட 'சந்திராயன்-3' விண்கலம், மாடங்களில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களை பார்வையிட்டு மகிழ்ந்தனர். பூங்காவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, செல்பி, போட்டோ எடுத்தனர். பயணிகள் கூட்டம் அதிகரிப்பால், ஊட்டி, குன்னூர் மலைப்பாதைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. மலைப்பாதைகளில் கவனமுடன் வாகனங்களை இயக்க, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் ராணி (50). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.
இந்நிலையில் மீண்டும் கோத்தகிரி செல்வதற்காக நேற்று மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் சென்றார். பள்ளிகளின் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்க உள்ள நிலையில் கோத்தகிரி, ஊட்டி செல்வதற்காக ஏராளமான பயணிகள் பஸ்நிலையத்தில் குவிந்திருந்தனர்.
இதனால் பஸ்சில் இடம் கிடைக்காமல் ராணி நீண்ட நேரம் காத்திருந்தார். அப்போது கோத்தகிரியில் இருந்து வந்த அரசு பஸ் பயணிகளை இறக்கிவிட்டது. பின்னர் பஸ்சை டிராக்கில் நிறுத்துவதற்காக டிரைவர் முயன்றார்.
அந்த நேரத்தில் ராணி பஸ்சின் பின்புற சக்கரத்தின் அருகே உள்ள இருக்கையில் இடம் பிடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சின் பின் சக்கரம் ராணியின் காலில் ஏறி இறங்கியதில் கால் நசுங்கியது. இதனால் ராணி வேதனையில் அலறி துடித்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் ராணி அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஊட்டி நகராட்சி மாதந்திர கூட்டம் நடந்தது அதற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார்.
- கொரோனா காலத்தில் ஊட்டி நகராட்சி மார்க்ெகட் கடைகளுக்கு 3 மாதம் வாடகையை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி மாதந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். கமிஷனர் ஏகராஜ் மற்றும் துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகராட்சி துணைத்தலைவர் ரவிக்கு மார் பேசியதாவது:-
ஊட்டி நகராட்சியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி வார்டு உறுப்பினர்களை காட்டிலும், அ.தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் வார்டுகளில் தான் அதி கமான வளர்ச்சி பணிகள் நடக்கிறது.
ஆனால் தங்கள் வார்டில் பணிகள் நடக்கவில்லை என அவர்கள் கூறுவது அப்பட்டமான பொய். மேலும் கவுன்சிலர் ஒருவர் பிரதான குடிநீர் குழாயில் இருந்து காட்டேஜ்களுக்கு தண்ணீர் இணைப்பு பெற்று தர ரூ.3.5 லட்சம் பணம் பெற்றுளளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மற்றொரு கவுன்சிலர் ஒருவர் கமர்சியல் சாலையில் 6 கடைகளில் விதிமுறைகளை மீறி கட்டுமான பணிகளை மேற்கொள்ள பணம் வசூலி த்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் விசாரிக்க வேண்டும்.
கொரோனா காலத்தில் ஊட்டி நகராட்சி மார்க்ெகட் கடைகளுக்கு 3 மாதம் வாடகையை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கு நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியு ள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஊட்டி நகராட்சி கவுன்சி லர் ஜார்ஜ் பேசியதாவது:-
பேசும்போது, ஊட்டி நகரில், தற்போது நாய்க ளின் தொல்லை மிகவும் அதிக மாக உள்ளது. நகருக்குள் தெரு நாய்கள் அதிகமாக உள்ளதால், குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை போன்ற வன விலங்குகள் வரத்துவங்கி யுள்ளன.
மேலும், காட்டுப்பன்றி களின் எண்ணிக்கை அதிக ரித்துக் கொண்டே செல்கி றது. எனவே, இதனை கட்டு ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அனைத்து வார்டுகளு க்கும் முறையாக குப்பை வண்டிகள் வருவதில்லை. 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை தான் வாகன ங்கள் வருகின்றன. இத னால், பொதுமக்கள் அவதிக்கு ள்ளாகின்றனர்.
பழையபடி அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேசினோ பகுதியில் உள்ள பார்க்கிங் தளத்தில் கட்டணம் வசூலிக்கும் இளைஞர்கள் வாகன ஓட்டுநர்களிடம் தரைகுறைவாக பேசுவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






