search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஊட்டியில் தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    ஊட்டியில் தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • ஊட்டி நகராட்சி மாதந்திர கூட்டம் நடந்தது அதற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார்.
    • கொரோனா காலத்தில் ஊட்டி நகராட்சி மார்க்ெகட் கடைகளுக்கு 3 மாதம் வாடகையை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி மாதந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். கமிஷனர் ஏகராஜ் மற்றும் துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகராட்சி துணைத்தலைவர் ரவிக்கு மார் பேசியதாவது:-

    ஊட்டி நகராட்சியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி வார்டு உறுப்பினர்களை காட்டிலும், அ.தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் வார்டுகளில் தான் அதி கமான வளர்ச்சி பணிகள் நடக்கிறது.

    ஆனால் தங்கள் வார்டில் பணிகள் நடக்கவில்லை என அவர்கள் கூறுவது அப்பட்டமான பொய். மேலும் கவுன்சிலர் ஒருவர் பிரதான குடிநீர் குழாயில் இருந்து காட்டேஜ்களுக்கு தண்ணீர் இணைப்பு பெற்று தர ரூ.3.5 லட்சம் பணம் பெற்றுளளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் மற்றொரு கவுன்சிலர் ஒருவர் கமர்சியல் சாலையில் 6 கடைகளில் விதிமுறைகளை மீறி கட்டுமான பணிகளை மேற்கொள்ள பணம் வசூலி த்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் விசாரிக்க வேண்டும்.

    கொரோனா காலத்தில் ஊட்டி நகராட்சி மார்க்ெகட் கடைகளுக்கு 3 மாதம் வாடகையை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கு நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியு ள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஊட்டி நகராட்சி கவுன்சி லர் ஜார்ஜ் பேசியதாவது:-

    பேசும்போது, ஊட்டி நகரில், தற்போது நாய்க ளின் தொல்லை மிகவும் அதிக மாக உள்ளது. நகருக்குள் தெரு நாய்கள் அதிகமாக உள்ளதால், குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை போன்ற வன விலங்குகள் வரத்துவங்கி யுள்ளன.

    மேலும், காட்டுப்பன்றி களின் எண்ணிக்கை அதிக ரித்துக் கொண்டே செல்கி றது. எனவே, இதனை கட்டு ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    அனைத்து வார்டுகளு க்கும் முறையாக குப்பை வண்டிகள் வருவதில்லை. 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை தான் வாகன ங்கள் வருகின்றன. இத னால், பொதுமக்கள் அவதிக்கு ள்ளாகின்றனர்.

    பழையபடி அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேசினோ பகுதியில் உள்ள பார்க்கிங் தளத்தில் கட்டணம் வசூலிக்கும் இளைஞர்கள் வாகன ஓட்டுநர்களிடம் தரைகுறைவாக பேசுவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×