என் மலர்tooltip icon

    நீலகிரி

    குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மிதமான காலநிலையும், அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்தது. நேற்று மாலை முதலே குன்னூர் பகுதியில் மழை பெய்ய தொடங்கியது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாகவே மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழைக்கு சில இடங்களில் மண்சரிவு, மரங்கள் முறிந்து விழுதல், வீடுகள் சேதம் அடைதல் போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததுடன், அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மிதமான காலநிலையும், அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்தது. நேற்று மாலை முதலே குன்னூர் பகுதியில் மழை பெய்ய தொடங்கியது.

    இரவில் குன்னூர், ஓட்டுப்பட்டறை, பர்லியார், வண்டிச்சோலை, கோத்தகிரி, கோடநாடு, சோலூர் மட்டம் உள்பட அனைத்து இடங்களில் கனமழை பெய்தது.

    இந்த மழை இன்று காலை வரை விடாமல் தொடர்ந்து பெய்தது.

    விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை காரணமாக அனைத்து முக்கிய சாலைகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

    மழை காரணமாக குன்னூர் சுற்றுவட்டார பகுதிக்கு நீராதாரமாக விளங்கும் ரேலியா அணை நிரம்பியது. 43 அடி கொண்ட ரேலியா அணை தனது முழு கொள்ளவை எட்டியது. அணை முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

    கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான சேரம்பாடி, மசினகுடி, நெல்லியாளம், ஓவேலி, தேவர்சோலை, எருமாடு, நெலாக்கோட்டை, அம்பல மூலா, மண்வயல் உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    இரவில் தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டியதால் கூடலூர் பஸ் நிலைய சாலை, கூடலூர்- ஊட்டி சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. வாகனங்கள் சாலைகளில் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன. இதேபோல் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

    நீலகிரியில் இன்று காலையும் மழை நீடித்தது. மழையுடன் குளிரும் வாட்டி வதைத்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

    மாவட்டம் முழுவதும் பனி மூட்டமாக காட்சியளிக்கிறது. காலை நேரமே இரவு போல் இருப்பதால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், வால்பாறை, சூலூர், மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட புறநகர் பகுதிளிலும், மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன்பாளையம், காந்திபுரம், டவுன்ஹால், ராமநாதபுரம், ரெயில்வே நிலையம், வடவள்ளி உள்பட அனைத்து பகுதிகளிலுமே விடிய, விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையும் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது.

    மழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது. இந்த மழையால் மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்களை இயக்கினர்.

    பலத்த காற்று காரணமாக நேற்று முன்தினம் இரவு ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பைக்காரா முதல் அனுமாபுரம் வரை 4 மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் பிடிமானம் இல்லாமல் இருந்த மரங்கள் சாய்ந்து விழுந்தது தெரியவந்தது.

    மஞ்சூர்-கிண்ணக்கொரை சாலை கேரிங்டன் பகுதியில் நேற்று மரம் முறிந்து விழுந்தது. இதனால் கிண்ணக்கொரை, இரியசீகையில் இருந்து மஞ்சூர், ஊட்டிக்கு வரும் 2 அரசு பஸ்கள் செல்ல முடியாமல் நின்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து மாநில நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றினர். 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழை பெய்து வருவதால் சாலையோரங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுவதை குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

    கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடலூர் அருகே தேவாலாவில் இருந்து அத்திக்குன்னா செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு மரம் சரிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர்.

    இதேபோல் தேவாலா அட்டி பகுதியில் உள்ள பாலமுருகன் கோவில் மீது ராட்சத மரம் நேற்று அதிகாலை சரிந்து விழுந்தது. இதில் கோவில் கோபுரம் மற்றும் மேற்கூரைகள் பலத்த சேதமடைந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் பக்தர்கள் திரண்டு வந்த ராட்சத மரத்தை வெட்டி அகற்றினர். தொடர்ந்து வருவாய் துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர்.

    இதேபோல் கூடலூர் அருகே புளியாம்பாரா அட்டிக்கொல்லி பகுதியில் தொழிலாளி கனகராஜ் என்பவரது வீட்டின் மீது மரம் சரிந்து விழுந்தது. இந்த சமயத்தில் வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதையறிந்த கிராம மக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து மழை சேதங்கள் அதிகரித்து வருவதால், வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்தி சேத விவரங்களை கணக்கெடுத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அவலாஞ்சியில் 10 செ.மீட்டர் மழை பதிவானது. இதனால் அந்த வனப்பகுதியில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதுடன், கால்வாயில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதற்கிடையில், கூடலூர் தாலுகா தேவாலாவில் இருந்து கரிய சோலை செல்லும் சாலையில் வாழவயல் பகுதியில் நேற்று அதிகாலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டது.

    பின்னர் தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து காலை 11 மணிக்கு மண் குவியலை அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.
    ஊட்டி பொது விநியோக திட்ட சிறப்பு தாசில்தாராக பணிபுரிந்து வந்த சிவகுமார் கூடலூர் தாசில்தார் ஆகவும், பந்தலூர் தாசில்தாராக பணிபுரிந்து வந்த தனிஷ்குமார் குன்னூர் தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்கள், 3 வருவாய் கோட்டங்கள் உள்ளன. இங்கு பணிபுரிந்து வந்த தாசில்தார்கள் நிர்வாக காரணங்களால் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சிலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி தாசில்தார்கள் 22 பேரை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டு இருக்கிறார்.

    இதன்படி கூடலூர் தாசில்தாராக பணிபுரிந்து வந்த தினேஷ்குமார் ஊட்டி தாசில்தாராகவும், ஊட்டி தாசில்தாராக பணிபுரிந்து வந்த குப்புராஜ் பந்தலூர் தாசில்தார் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    குந்தா தாசில்தாராக பணிபுரிந்த மகேஸ்வரி நீலகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆகவும், அந்த பணியில் இருந்த மோகனா குந்தா தாசில்தார் ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    ஊட்டி பொது விநியோக திட்ட சிறப்பு தாசில்தாராக பணிபுரிந்து வந்த சிவகுமார் கூடலூர் தாசில்தார் ஆகவும், பந்தலூர் தாசில்தாராக பணிபுரிந்து வந்த தனிஷ்குமார் குன்னூர் தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    குன்னூர் தாசில்தாராக பணிபுரிந்து வந்த சீனிவாசன் கோத்தகிரி தாசில்தாராகவும், மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராக இருந்த குமாரராஜா ஊட்டி சிறப்பு தாசில்தார் ஆகவும், கோத்தகிரி தாசில்தாராக பணிபுரிந்து வந்த கிருஷ்ணமூர்த்தி கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    ஊட்டி சிறப்பு தாசில்தாராக பணிபுரிந்து வந்த கே.மகேஸ்வரி கோத்தகிரி பழங்குடியினர் நல சிறப்பு தாசில்தாராகவும், அரசு கேபிள் டி.வி. சிறப்பு தாசில்தாராக பணிபுரிந்து வந்த லோகநாதன் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகை வரவேற்பு அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தாசில்தார்கள் மொத்தம் 22 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த உத்தரவின் நகல் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
    கரடிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து, அவை குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளதால் அடிக்கடி காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருகின்றன. கடந்த சில மாதங்களாக ஊருக்குள் 3 கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. இதையடுத்து வனத்துறையினர் கரடிகளை பிடிக்க 2 கூண்டுகள் வைத்தனர். தொடர்ந்து இந்த கூண்டுகளில் 2 கரடிகள் சிக்கின. குட்டி கரடி மட்டும் தப்பிச்சென்றுவிட்டது. இதையடுத்து அந்த கரடிகளை வனத்துறையினர் அப்பர் பவானி வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மிளிதேன் கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் 3 கரடிகள் மீண்டும் உலா வந்த வண்ணம் உள்ளன. இதனால் பணிக்கு சென்று வரும் தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வரும் கரடிகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும். மேலும் கரடிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து, அவை குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    கொளப்பள்ளி பகுதியில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு ரூ.ஆயிரம் விதிக்கப்பட்டது.
    பந்தலூர்:

    நீலகிரி மாவட்டத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து வருவதற்கு இ-பதிவு முறையில் அனுமதி பெற வேண்டும். இதனை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த கலெக்டர் இன்னசென்ட் உத்தரவிட்டார்.

    இதன்படி பந்தலூர் அருகே தாளூர் சோதனைச்சாவடியில், கூடலூர் ஆர்.டி.ஓ. சரவணகண்ணன் மேற்பார்வையில், பந்தலூர் துணை தாசில்தார் சதீஸ் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து இ-பதிவு பெறாமல் வந்த காருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல கொளப்பள்ளி பகுதியில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு ரூ.ஆயிரம் விதிக்கப்பட்டது.

    நெலாக்கோட்டை பகுதியில் பந்தலூர் தாசிர்தார் தினேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாமல் 11 வாகனங்களில் தொழிலாளர்களை ஏற்றி சென்றவருக்கு ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
    பாடந்தொரை பகுதியில் தற்போது பகல் நேரத்திலும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன.
    கூடலூர்:

    கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

    இதற்கிடையில், ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் சேவை சரிவர கிடைக்காததால், வீட்டைவிட்டு வெளியே வரும் மாணவ-மாணவிகள் காட்டு யானைகளிடம் சிக்கும் அபாய நிலை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மூச்சிகண்டி கிராமத்தில் பகல் நேரத்தில் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் வீட்டுக்குள் பதுங்கிக்கொண்டனர். தொடர்ந்து காட்டு யானை குடியிருப்பு பகுதிகளை சுற்றி வந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். பின்னர் கிராம மக்கள் கூச்சலிட்டவாறு இருந்தனர். இதையடுத்து காட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    பாடந்தொரை பகுதியில் தற்போது பகல் நேரத்திலும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன. தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர்.

    சில நேரங்களில் சேவை கிடைக்காமல் திறந்தவெளியில் சுற்றி வருகின்றனர். இதனால் மனித-வனவிலங்குகள் மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிளான்டில் ஒரு நிமிடத்துக்கு 1,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் மட்டும் இருந்தது. கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்ததால் ஆக்சிஜன் தேவை அதிகமானது. தொடர்ந்து 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து குழாய்கள் மூலம் கொரோனா வார்டுகள் மற்றும் பிற வார்டுகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து திரவ ஆக்சிஜன் லாரியில் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.

    இதையடுத்து ஊட்டியில் ஆக்சிஜன் கூடுதலாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் ரூ.94 லட்சத்து 40 ஆயிரத்தில் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான புதிய பிளான்ட் அமைக்கும் பணி நடந்து வந்தது. சமீபத்தில் ராட்சத கிரேன் மூலம் பிளான்ட் அமைக்கப்பட்டு, ஜெனரேட்டர் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல் புதிய ஆக்சிஜன் பிளான்ட் செயல்பாட்டுக்கு வந்தது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது,

    ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிளான்டில் ஒரு நிமிடத்துக்கு 1,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம். இதன்மூலம் மிதமான ஆக்சிஜன் தேவைப்பட்டால் 180 நோயாளிகள் வரையும், அதிக ஆக்சிஜன் தேவைப்பட்டால் 100 நோயாளிகள் வரையும் அளிக்க முடியும். சமவெளி பகுதிகளில் இருந்து கொண்டு வர நீண்ட நேரம் ஆகிறது.

    குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் ஒரு நிமிடத்துக்கு 500 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிளான்ட், ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆக்சிஜன் யூனிட் என மொத்தம் 3 ஆக்சிஜன் யூனிட்டுகள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத மாவட்டமாக நீலகிரி மாறி இருக்கிறது. கொரோனா பாதிப்பு காலம் மட்டுமில்லாமல், மற்ற மருத்துவ பயன்பாடுகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றார்.
    முட்டைகோஸ் செடிகளை பூச்சி தாக்காத வண்ணம் மஞ்சள் ஒட்டு பொறி அட்டை வழங்கப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் இயற்கை வேளாண்மை மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, கலெக்டர் அறிவுரைப்படி இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஊட்டி வட்டாரத்தில் காய்கறி சாகுபடியை அதிகரிக்க 300 ஹெக்டர் பரப்பளவுக்கு பின்னேற்பு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் முட்டைகோஸ் விதை மற்றும் நாற்றுகளை விலைக்கு வாங்கி தங்களது நிலங்களில் பயிரிட்டு வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டை நோய் தாக்குதலால் செடிகள் வளர்ச்சி பாதிக்கப்பட்டதோடு, முட்டைகோஸ் விளைச்சல் இல்லாமல் போனது. இதை எதிர்கொள்ளும் வகையில் வீரிய ரக டெக்கில்லா முட்டைகோஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. நஞ்சநாடு தோட்டக்கலை பண்ணையில் இந்த ரக நாற்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 5 விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் நாற்றுகள் வழங்கப்பட்டன. இந்த நாற்றுகளை விவசாயிகள் கடந்த மார்ச் மாதம் நிலங்களில் நடவு செய்தனர்.

    தற்போது நோய் தாக்கம் இன்றியும், இயற்கை முறை சாகுபடியால் விளைச்சல் அதிகரித்து உள்ளது. முட்டைகோஸ் செடிகளை பூச்சி தாக்காத வண்ணம் மஞ்சள் ஒட்டு பொறி அட்டை வழங்கப்பட்டது. தோட்டக்கலை துறையினர் சம்பந்தப்பட்ட விளைநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மானியம் அடிப்படையில் நாற்றுகள் வழங்கி வருகின்றனர். இதைத்தொடர்ந்து 15 ஹெக்டர் பரப்பளவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 5 ஹெக்டர் பரப்பளவில் வீரிய ரக டெக்கில்லா முட்டைகோஸ் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. கொரோனா காலத்தில் 100 சதவீத மானியத்தில் நாற்றுகள் கிடைத்ததால் செலவு மிதமானது. மேலும் மஞ்சள் ஒட்டு பொறி அட்டை மூலம் பூச்சிகளை எளிதில் கட்டுப்படுத்த முடிவதால், மருந்து அடிப்பது குறைந்தது. தோட்டக்கலை துறை எடுத்த நடவடிக்கையாலும், முட்டைகோஸ் நல்ல விலை கிடைப்பதாலும் நஷ்டம் தவிர்க்கப்பட்டு உள்ளது என்றனர்.
    ஹெல்மெட் சரியான முறையில் லாக் செய்து இருக்க வேண்டும். ஹெல்மெட் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் இருக்க வேண்டும்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகர், புறநகர், குன்னூர், தேவாலா, கூடலூர் என 5 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2019-ம் ஆண்டு 42 இருசக்கர வாகன விபத்துகள், 2020-ம் ஆண்டு 42 விபத்துகள், 2021-ம் ஆண்டு 26 விபத்துகள் நடந்து உள்ளன.

    இதில் 2019-ம் ஆண்டு 8 பேரும், 2020-ம் ஆண்டு 5 பேரும், நடப்பாண்டில் 8 பேரும் உயிரிழந்தனர். மேலும் ஆண்டுகள் முறையே 50, 49, 20 பேர் என கை, கால்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட விபத்துகளில் உயிரிழப்புக்கு காரணம் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் சரியாக ஹெல்மெட் அணியாமல் இருந்ததே என தெரியவந்துள்ளது.

    விபத்து

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் வெளியிட்ட செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத்தின்படி அரசு உத்தரவிட்டு உள்ளது. இதை அலட்சியம் செய்து சிலர் பயணித்ததால் விபத்துகளில் உயிரிழப்புகளும், கை, கால் இழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.வாகன விபத்துகளில் இறப்புகள் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி தலையில் காயம் ஏற்பட்டதால் இறப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

    எனவே இனிவரும் காலங்களில் இதை தவிர்க்கும் பொருட்டு நீலகிரி மாவட்ட காவல்துறை மூலம் வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் என இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் ஹெல்மெட் சரியான முறையில் லாக் செய்து இருக்க வேண்டும். ஹெல்மெட் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை காவல்துறை மற்றும் இதர அரசு ஊழியர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    ஆகஸ்டு 1-ந் தேதி முதல் பொதுமக்கள், காவல்துறை மற்றும் இதர அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


    ஊட்டி, குன்னூர் வட்டாரங்களில் ஏ.டி.எஸ். கொசுக்கள் இல்லை. கூடலூர் வட்டாரத்தில் அந்த வகை கொசுக்கள் கண்டறியப்பட்டு, ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பதிவாகி உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்தது. சமீபத்தில் இ-பாஸ் ரத்து செய்யப்பட்டு, இ-பதிவு நடைமுறையில் வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

    ஊரடங்கில் தளர்வு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு அதிகம் பேர் வருகின்றனர். இதையொட்டி கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

    நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் இ-பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். உள்ளூர் மக்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பினாலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம். கேரளாவில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. இந்த மாநிலத்தை ஒட்டி உள்ள நீலகிரியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஊட்டி, குன்னூர் வட்டாரங்களில் ஏ.டி.எஸ். கொசுக்கள் இல்லை. கூடலூர் வட்டாரத்தில் அந்த வகை கொசுக்கள் கண்டறியப்பட்டு, ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பதிவாகி உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொசுக்கள் இனப்பெருக்கத்தை தடுக்க முடியும்.

    கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகளில் மாலை 6 மணிக்கு மேல் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. கூடலூர் வட்டாரத்தில் கவனம் செலுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கில் தளர்வால் தங்கும் விடுதிகளில் பலர் தங்கி வருகின்றனர். அங்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கட்டாயம் முககவசம் அணிவது போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    யாருக்கேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    கோத்தகிரி அருகே வீட்டில் குழந்தை பெற்ற இளம்பெண்ணை சிகிச்சைக்காக தொட்டில் கட்டி உறவினர்கள் சுமந்து சென்றனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது, தாளமொக்கை ஆதிவாசி கிராமம். இங்கு வசிக்கும் 19 வயது இளம்பெண் கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. கர்ப்பிணியாகி 7 மாதம் மட்டுமே ஆகியிருந்த நிலையில், அவருக்கு குறை பிரசவமாக குழந்தை பிறந்தது. ஆனால் தொப்புள் கொடி முழுமையாக வெளியே வரவில்லை. இதனால் அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சோலூர்மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சந்திரிகா தலைமையிலான குழுவினர் நேரில் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் அவரை ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டி இருந்தது.

    ஆனால் தாளமொக்கை ஆதிவாசி கிராமத்துக்கு செல்ல சரிவர சாலை வசதி இல்லை. இதனால் ஆம்புலன்ஸ் வர முடியாத நிலை ஏற்பட்டது. உடனே குழந்தையுடன் அவரை உறவினர்கள் தொட்டில் கட்டி சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்தை கடந்து தாளமொக்கை இலைசெட் பகுதிக்கு சுமந்து சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தாளமொக்கை கிராமத்தில் சாலை வசதியை மேம்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 15-ந் தேதி நீலகிரி மலை ரெயில் நாளாக கொண்டாடப்படுகிறது.
    ஊட்டி:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கடந்த 1899-ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து குன்னூர் வரை நிலக்கரி மற்றும் பர்னஸ் ஆயில் கொண்டு நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வந்தது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 15-ந் தேதி நீலகிரி மலை ரெயில் நாளாக கொண்டாடப்படுகிறது.

    நீலகிரி மலைரெயிலுக்காக ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த நீராவி என்ஜினில் பராமரிப்பு பணி திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் நடந்து வருகிறது. மேலும் அங்கு புதிய நீராவி என்ஜின் தயாரிக்கப்பட்டு வருகிறது. உந்து சக்தி குறைவு காரணமாக கல்லார்-குன்னூர் இடையே அவ்வப்போது ரெயில் பழுதாகி நின்றது. இதை கருத்தில் கொண்டு புதிய தொழில்நுட்பங்களோடு, நீராவி என்ஜின்கள் தயாராகி வருகின்றது. வருகிற ஆகஸ்டு மாதம் நீராவி என்ஜின்கள் மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    நீலகிரி மலைரெயிலில் பயன்படுத்த 2 நீராவி என்ஜின்களின் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக புதிய நீராவி என்ஜின் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த என்ஜினில் பயன்படுத்தப்படும் 3 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட உதிரி பாகங்களில், 1,200 உதிரி பாகங்கள் பொன்மலை ரெயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டது. மீதமுள்ள உதிரிபாகங்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது. சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 2 நீராவி என்ஜின்கள் ஊட்டி மலைரெயிலில் சேர்க்கப்படும்.
    ×