search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பாட்டுக்கு வந்த ஆக்சிஜன் பிளான்டை காணலாம்
    X
    ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பாட்டுக்கு வந்த ஆக்சிஜன் பிளான்டை காணலாம்

    ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத மாவட்டமாக மாறியது நீலகிரி

    ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிளான்டில் ஒரு நிமிடத்துக்கு 1,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் மட்டும் இருந்தது. கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்ததால் ஆக்சிஜன் தேவை அதிகமானது. தொடர்ந்து 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து குழாய்கள் மூலம் கொரோனா வார்டுகள் மற்றும் பிற வார்டுகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து திரவ ஆக்சிஜன் லாரியில் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.

    இதையடுத்து ஊட்டியில் ஆக்சிஜன் கூடுதலாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் ரூ.94 லட்சத்து 40 ஆயிரத்தில் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான புதிய பிளான்ட் அமைக்கும் பணி நடந்து வந்தது. சமீபத்தில் ராட்சத கிரேன் மூலம் பிளான்ட் அமைக்கப்பட்டு, ஜெனரேட்டர் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல் புதிய ஆக்சிஜன் பிளான்ட் செயல்பாட்டுக்கு வந்தது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது,

    ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிளான்டில் ஒரு நிமிடத்துக்கு 1,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம். இதன்மூலம் மிதமான ஆக்சிஜன் தேவைப்பட்டால் 180 நோயாளிகள் வரையும், அதிக ஆக்சிஜன் தேவைப்பட்டால் 100 நோயாளிகள் வரையும் அளிக்க முடியும். சமவெளி பகுதிகளில் இருந்து கொண்டு வர நீண்ட நேரம் ஆகிறது.

    குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் ஒரு நிமிடத்துக்கு 500 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிளான்ட், ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆக்சிஜன் யூனிட் என மொத்தம் 3 ஆக்சிஜன் யூனிட்டுகள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத மாவட்டமாக நீலகிரி மாறி இருக்கிறது. கொரோனா பாதிப்பு காலம் மட்டுமில்லாமல், மற்ற மருத்துவ பயன்பாடுகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றார்.
    Next Story
    ×