search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயற்கை முறை"

    • பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 4 கிராம தொகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
    • ஏ.குமாரபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி நடைபெற்றது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 4 கிராம தொகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏ.குமாரபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில், குமாரபாளையம் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பூச்சிக் கட்டுப்பாடு, கம்போஸ்ட் உரமிடல் , பசுந்தாள் உரம், இயற்கை முறையில் மண்புழு உரமிட்டு மண் வளத்தை பெருக்குதல், உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஜீவாமிர்தம், அமிர்த கரைசல்,பஞ்சகாவ்யம், மண்புழு உரம் உற்பத்தி குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

    பெத்த நாயக்கன் பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன், வேளாண்மை அலுவலர் தாமரைச்செல்வன், உதவி வேளாண்மை அலுவலர் செல்லமுத்து, தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி, முன்னோடி இயற்கை விவசாயி தும்பல் சுரேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    ×