என் மலர்tooltip icon

    நீலகிரி

    • தென்கரை ஊராட்சி மெட்டுக்கல் கிராமத்தில் மண்வள மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
    • இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், வேளாண் இடுபொருட்கள் தயாரிப்பு முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    அரவேணு:

    கோத்தகிரி அடுத்த தென்கரை ஊராட்சி மெட்டுக்கல் கிராமத்தில் தோட்டக்கலை துறை மற்றும் மலைபயிர்கள் துறை தேசிய மண்வள மேலாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் மண்வள மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. விழாவுக்கு கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயந்தி பிரேம் குமார் தலைமை தாங்கினார்.

    கோத்தகிரி வட்டார துணை அலுவலர் சந்திரன் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், வேளாண் இடுபொருட்கள் தயாரிப்பு முறை குறித்து எடுத்துரைத்தார்.

    இதில் மண் ஆய்வு கூட வேளாண் அலுவலர் சாம்நாத், தோட்டக்கலை துணை அலுவலர் ஜெயக்குமார், மேலாண்மை அலுவலர் வெற்றிவேல் குமார், உதவி தோட்டக்கலை துறை அலுவலர் சவுமியா உள்பட பலர் பங்கேற்றனர்.

    • மதுக்கடையால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வாகனப்போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக புகார் கூறப்பட்டு வந்தது.
    • மதுபான கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த மதுக்கடையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வாகனப்போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக புகார் கூறப்பட்டு வந்தது.

    இதை தொடர்ந்து மனித உரிமை விழிப்புணர்வு இயக்கம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளின் சார்பில் டாஸ்மாக் மதுபான கடையை அப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டதுடன் இதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து கடந்த மாதம் அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் கூறப்பட்டபடி மேற்படி பகுதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடையை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதை தொடர்ந்து குடியிருப்புவாசிகள், மாணவ, மாணவிகள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி நேற்று மனித உரிமை விழிப்புணர்வு இயக்கம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம், மஞ்சூர் சிறு வனிகர்கள் நலச்சங்கம், மஞ்சூர் ஓட்டுனர், உரிமையாளர்கள் நலச்சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள், பொதுநல அமைப்புகள் சார்பில் டாஸ்மாக மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மனித உரிமைகள் விழிப்புணர்வு இயக்க நிறுவனர் அன்னமலை முருகேசன் தலைமை தாங்கினார். முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க நிர்வாகி கேப்டன் ராமச்சந்திரன், சிறு வனிகர்கள் நலச்சங்க நிர்வாகி ஆறுமுகம், ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்க தலைவர் துரை, குந்தை சீமை படுகர் நலச்சங்க தலைவர் சந்திரன், ெபண்கள் உரிமை விழிப்புணர்வு நிர்வாகி சாரதா, அனைத்து படுகர் கூட்டமைப்பு நிர்வாகி சிவன், சமூக நீதி விழப்புணர்வு இயக்க நிர்வாகி மணிவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.

    இதில் பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து பல்வேறு வகையிலும் இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஊட்டி ரூரல் டி.எஸ்.பி.செந்தில்குமார், ரூரல் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் டாஸ்மாக் கடை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் பொதுநல அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக நேற்று மஞ்சூர் அரசு மதுக்கடை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிளஸ்-2 பயின்ற மாணவா்களுக்கான உயா் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 530 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் வீதம் 106 ஆசிரியர்கள், 2 பெற்றோர்கள் வீதம் 100 பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    ஊட்டி:

    தமிழக முதல்வரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 பயின்ற மாணவா்களுக்கான உயா் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

    விழாவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் 36 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 17 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 530 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் வீதம் 106 ஆசிரியர்கள், 2 பெற்றோர்கள் வீதம் 100 பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் உயர்கல்விக்காக ஊட்டி, கூடலூர் பகுதிகளில் அரசு கல்லூரிகள் உள்ளன. இங்கு 8 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். குன்னூர், கோத்தகிரி மாணவர்களின் நலன் கருதி குன்னூரில் அரசு கல்லூரி விரைவில் தொடங்கப்படும்.

    மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் டைடல்பார்க் அமைக்கப்படும். இந்நிகழ்ச்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல், ஊக்குவிப்பு, வங்கிகளின் கல்விக் கடன் குறித்தும், போட்டித் தோ்வுகளுக்கு எவ்வாறு தயாா் செய்வது என்பது குறித்தும், மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த கல்வி, வணிகம் மற்றும் கணக்கு பதிவியல், சட்டம் ஆகியவை குறித்தும் சம்பந்தப்பட்ட துறை வல்லுநா்கள் மூலம் மாணவ, மாணவியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

    எனவே பிளஸ்-2 முடித்த மாணவா்கள் 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சியில் கல்வி வல்லுநா்களால் தெரிவிக்கப்படும் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை முழுமையாக கவனித்து, தங்களது கனவினை நனவாக்கும் வகையில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், குன்னூா் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி, ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் மாயன், ராம்குமாா், சுனிதா நேரு, கீா்த்தனா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தாமோதரன், மாவட்ட கல்வி அலுவலா்கள் புனிதா அந்தோணியம்மாள், சுடலை மற்றும் கல்லூரிகளின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், துறைத் தலைவா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

    • முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்வதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை காண இங்கு வருகிறார்கள்.
    • வனவிலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனமும் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. அதன் காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மசினகுடி வழியாக ஊட்டிக்கு சாலை செல்கிறது. புலிகள் காப்பக பகுதியில் இந்த சாலைகள் செல்வதால் தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் மற்றும் பஸ்கள், தனியார் வாகனங்கள் இவற்றின் வழியே சென்று வருகின்றன.

    மேலும், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்வதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை காண இங்கு வருகிறார்கள்.

    இதையொட்டி வனத்துறை சார்பில் இயக்கப்படும் வாகனங்களில் பயணம் செய்து வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான நேரங்களில் வனத்துறையினர் அழைத்துச் செல்லும் பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவது உண்டு.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடை வறட்சியால் முதுமலை புலிகள் காப்பகம் பசுமையை இழந்து காணப்பட்டது. இதனால், வன விலங்குகளின் நடமாட்ட மும் குறைவாக இருந்தது.

    வனவிலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனமும் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. அதன் காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மான் கூட்டம், காட்டெருமை கூட்டம், யானை கூட்டம் மயில்கள் என வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

    இருப்பினும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். 

    • நீலகிரியில் பாலின உணர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிநடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜே.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி மருந்து வேதியியல் துறையினர் செய்திருந்தனர்.

    ஊட்டி:

    புது டெல்லி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், மைசூரு ஜே எஸ் எஸ் உயர்க்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நீலகிரி இந்திய மருந்து சங்கம் மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்களுக்கான பாலின உணர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மஞ்சக்கோம்பையில் கிராமத்தில் நடைபெற்றது.

    கல்லூரி விரிவுரையாளர் முனைவர் கோமதி சுவாமிநாதன் வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சி விளக்வுரை வழங்கினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக மதுசூதனன் புரோகித் கலந்து கொண்டு சிறப்புரையாற்றனார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தனபால், வேதியியல் துறை தலைவரும் இணை பேராசிரியருமான முனைவர் ஆர் காளிராஜன், டாக்டர்.பி.கனகாம்பாள், டாக்டர் எம்.தருணா, ஜெயக்குமார், டாக்டர் கீர்த்தனா. சி, டாக்டர் ஜி.என்.கே.கணேஷ், விரிவுரையாளர் முனைவர் ஸ்ரீகாந்த் ஜூபுடி, ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோமதி சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    2 நாட்கள் ந டந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜே.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி மருந்து வேதியியல் துறையினர் செய்திருந்தனர்.

    • குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை என 3 நாட்கள் ஜமாபந்தி முகாம் நடந்தது.
    • பொதுமக்களிடமிருந்து 401 மனுக்கள் பெறப்பட்டு, இதில் 49 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை என 3 நாட்கள் நடந்த ஜமாபந்தி முகாமில் குன்னூர் தாலுக்காவில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மக்கள் பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்திருந்தனர்.

    அதன்படி, நேற்று வரையில் பொதுமக்களிடமிருந்து 401 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மனுக்களில் 49 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட வருவாய்துறை அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, வட்டாச்சியர் சிவக்குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.
    • இந்த கரடி பல மாதங்கள் இங்கு தான் சுற்றி திரிகின்றது. குட்டிகளுடன் இருப்பதால் மக்களை தாக்கும் அபாயம் உள்ளது.

    அரவேணு :

    கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.

    இந்த நிலையில் நேற்று கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனி பகுதியில் 2 குட்டியுடன் சாலையில் பெரிய கரடி ஒன்று உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திய வாகன ஓட்டிகள், தங்களது செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்தனர்.

    பின்னர் அதனை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த கரடி பல மாதங்கள் இங்கு தான் சுற்றி திரிகின்றது. குட்டிகளுடன் இருப்பதால் மக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் சாலைகளில் குட்டிகளுடன் உலா வரும் கரடிகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீலகிரி மாவட்ட காவல்துறையில் 4 மோப்பநாய்கள் புலன்விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
    • கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி ஜாக்கி என்ற மோப்பநாய் காவல்துறையில் இணைந்தது.

    நீலகிரி மாவட்ட காவல்துறையில் 4 மோப்பநாய்கள் புலன்விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் 2 மோப்பநாய்கள் குற்றம் நடைபெற்ற இடத்தில் சோதனை நடத்தவும், 2 மோப்பநாய்கள் வெடிமருந்து சோதனை நடத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

    இதில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி ஜாக்கி என்ற மோப்பநாய் காவல்துறையில் இணைந்தது. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றது. அந்த மோப்பநாய், பட்பயர் பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்தது. இதுவரை 96 முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த அந்த மோப்பநாய், நேற்று மரணம் அடைந்தது. அதன் இறுதிச்சடங்கில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ் உள்பட அதிகாரிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

    • குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
    • காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    குன்னூர்

    குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அடிக்கடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    இந்தநிலையில் குன்னூர் அருகே நான்சச் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    இதில் உணவு தேடி வந்த போது தவறி விழுந்து காட்டெருமை இறந்ததும், 8 வயது ஆண் காட்டெருமை என்பதும் தெரியவந்தது. இறந்த காட்டெருமை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தோட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்து குழி தோண்டி புதைக்கப்பட்டது.

    • ஊட்டியை ஒட்டி தொட்டபெட்டா, கவர்னர்சோலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன.
    • இதனை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பினர். சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    ஊட்டி:

    தமிழகம் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    சிறுத்தை புகுந்தது நீலகிரி மாவட்டம் ஊட்டியை ஒட்டி தொட்டபெட்டா, கவர்னர்சோலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை, கடாமான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்புகளுக்கு புகுந்து வருகின்றது. குறிப்பாக காட்டெருமை, கரடி நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி தமிழகம் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடியது. சாலையில் வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தை பார்த்த சிறுத்தை, சாலையோரத்தில் பதுங்கி நின்றது.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பினர். சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். பிடிக்க வேண்டும் இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக முகாம் அலுவலக வளாகத்தில் சிறுத்தை நடமாடியது.

    அந்த சிறுத்தை நேற்று முன்தினமும் சாலையில் நடமாடி இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் சிறுத்தை எந்த வழியாக அங்கிருந்து சென்றது என்பது தெரியவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஊட்டியில் உலா வரும் சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

    மேலும் குடியிருப்பு பகுதியில் நடமாடுவதால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். ஊட்டியில் கரடி, காட்டெருமைகளை தொடர்ந்து சிறுத்தை நடமாட்டமும் அதிகரித்து உள்ளது

    • கடந்த காலங்களில் இறைச்சி மற்றும் முக்கிய உறுப்புகளை கடத்துவதற்காக வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றது.
    • பல மாதங்களாக சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த காட்டெருமைகள், மான்களின் எலும்புகள் மற்றும் இறைச்சிகளை விறகுகள் மீது வன ஊழியர்கள் அடுக்கி வைத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதம் வனப்பகுதிகள் உள்ளன. இங்கு காட்டு யானை, காட்டெருமை, மான், புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதைத்தொடர்ந்து கடந்த காலங்களில் இறைச்சி மற்றும் முக்கிய உறுப்புகளை கடத்துவதற்காக வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றது. இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

    மேலும் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிறைவு பெறும் வரை, அதன் உடற்பாகங்களை பாதுகாத்து வருகின்றனர். இதேபோல் இயற்கையான முறையில் வனவிலங்குகள் உயிரிழக்கும் நிலையில், உடற்கூறு ஆய்வுக்கு பின் அதன் உறுப்புகளை வனத்துறையினர் சேகரித்து வைத்திருந்தனர்.

    இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கூடலூர் வன கோட்ட அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) சரவணன், வனச்சரகர்கள் முன்னிலையில் ஓவேலி வனச்சரக பகுதியில் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் எலும்புகள், இறைச்சிகள் உள்ளிட்ட பாகங்களை எரிக்கும் பணி கூடலூர் மாக்கமூலாவில் உள்ள வன அலுவலர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    அதில் பல மாதங்களாக சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த காட்டெருமைகள், மான்களின் எலும்புகள் மற்றும் இறைச்சிகளை விறகுகள் மீது வன ஊழியர்கள் அடுக்கி வைத்தனர். பின்னர் ஆவணங்களின் அடிப்படையில் உடற்பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன் கூறும்போது, வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதி பெற்று 500 கிராம் வனவிலங்கு இறைச்சி, 30 கிலோ காட்டெருமை எலும்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளது என்றார்.க

    • தொடர்ந்து விலை இல்லாததால் விவசாயிகளின் பார்வை சீன காய்கறிகளை பயிரிடுவதின் பக்கம் திரும்பியது.
    • இந்த பயிர்கள் விளைய 1 முதல் 50 நாட்கள் தேவைப்படுகிறது. பயிர்கள் விளைந்தவுடன், அவர்களே வந்து வெட்டி விடுவார்கள்.

    அரவேணு :

    கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை, மசகல், தீனட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

    இங்குள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முட்டை கோஸ் பீன்ஸ் அவரை போன்ற மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர்.

    ஆனால் கடந்த சில மாதங்களாகவே மலை காய்கறிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்தனர். தொடர்ந்து விலை இல்லாததால் விவசாயிகளின் பார்வை சீன காய்கறிகளை பயிரிடுவதின் பக்கம் திரும்பியது. கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலரும் சீனக்காய்கறிகள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் கோத்தகிரி, கூக்கல்தொரை, மசக்கல், தீனட்டி பகுதிகளில் புருக்கோலி, பாக்சாய், ரோமென், செல்ரி, லீக்ஸ், ஜூகினி பார்சலி போன்ற சீனக்காய்கறிகள் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சீன காய்கறிகளை விளைவிப்பதற்கும், அதற்கு தேவையான மருந்து உள்ளிட்ட இடு பொரு ட்களையும் சீனாவை சேர்ந்த விவசாய நிறுவம் கொடுத்து விடுகிறது. இந்த பயிர்கள் விளைய 1 முதல் 50 நாட்கள் தேவைப்படுகிறது. பயிர்கள் விளைந்தவுடன், அவர்களே வந்து வெட்டி விடுவார்கள். அதற்கான விலையையும் கொடுத்து விடுவார்கள் என்றனர்.

    ×