என் மலர்
நீலகிரி
- தினசரி 455 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.
- இரு மதகுகளில், தலா 200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
ஊட்டி
குந்தா அணை துார்வாரப்படாததால் இரு மாதங்களில் 8 முறை திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குந்தா, மின் வட்டத்துக்கு உட்பட்ட குந்தா அணை, 89 அடியை கொண்டது இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் மூலம், கெத்தை, பரளி, பில்லுார் ஆகிய மின் நிலையங்களில் தினசரி 455 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். முக்கிய அணையாக கருதப்படும் குந்தா அணைக்கு தண்ணீர் வரும் நீர் பிடிப்பு பகுதிகளில், தேயிலை, மலை காய்கறி தோட்டங்கள் பல ஏக்கரில் உள்ளது.பருவ மழை காலங்களில் நீரோடைகளில் அடித்து வரும் சேறும், சகதியும் அணையில் சேகரமாகிறது.
பல ஆண்டுகளாக முழுமையாக துார்வாரப்படாமல் உள்ளதால், சிறிய மழைக்கு அணை முழு கொள்ளளவை எட்டி விடும். தற்போது,தென் மேற்கு பருவமழை இயல்பைவிட, 50 சதவீதம் கூடுதலாக பெய்து வருகிறது
கடந்த ஒரு மாதமாக அணைக்கு வினாடிக்கு சராசரியாக 150 முதல், 200 கன அடி நீர் வரத்து உள்ளது. கடந்த ஒரு வாரம் தொடர்ந்து பெய்த மழையால், குந்தா அணைக்கு வினாடிக்கு சராசரியாக 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தண்ணீர் தேக்கி வைக்க முடியாத காரணத்தினால், நேற்று காலை 8 மணி நிலவரப்படி, இரு மதகுகளில், தலா 200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் 8 முறை அணை நிரம்பி திறக்கப்பட்டு உள்ளது.
- தர ஊதியம் ரூ.1,900 வழங்க வேண்டும்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஊட்டி,
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வலியுறுத்தி ஊட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்கள், தொழில்நுட்ப கல்வித் திறன் பெறாத ஊழியர்களுக்கு ஊதியம் ரூ.20,200, தர ஊதியம் ரூ.1,900 வழங்க வேண்டும். பணியின் போது சாலை பணியாளர்கள் உயிரிழந்தால், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நியமனம் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் பலர் கலந்துகொண்டனர்.
- முதல் மகள் அதே பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
- பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமைஆசிரியராகப் பணியாற்றுபவா் கிருஷ்ணகுமாா். அத்தி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுபவா் ரேவதி.
தம்பதியான இவா்கள் கூடலூா் வண்டிப்பேட்டையிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நாற்காலிகள் மற்றும் குடிநீா்த் தொட்டிகளை நன்கொடையாக வழங்கி தனது இரண்டாவது மகள் மகிழினியை முதல் வகுப்பில் சோ்த்தனா்.
அவா்களின் முதல் மகள் நிகரிலி அதே பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.அரசுப் பள்ளி ஆசிரியா்களான தம்பதி தங்களது குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சோ்த்ததை பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனா்.
- விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது
- 6 போ் அமா்ந்து பயணிக்கக் கூடிய பேட்டரி காா் ஒன்று வாங்கியுள்ளனா்.
ஊட்டி:
சா்வதேச புகழ்பெற்ற ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவில் கோடை சீசன் காலங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும், இரண்டாவது சீசன் காலமான செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகன் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.
அதேபோல, மற்ற மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கும். சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கொல்கத்தா, காஷ்மீா், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 60 ரகங்களிலான பல்வேறு வகையான லட்சக்கணக்கான மலா்கள் பூந்தொட்டிகளிலும், மலா் பாத்திகளிலும் தயாா்படுத்த ப்படுகின்றன.தற்போது, ஊட்டியில் இரண்டாவது சீசன் தொடங்கி உள்ள சூழலில் ஓணம் பண்டிகைக்கான தொடா் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பூங்காவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், வயதானவா்கள் பூங்காவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மலா்களை ரசிக்க சிரமப்பட்டு வந்தனா். இதனால் பூங்கா நிா்வாகம் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி 6 போ் அமா்ந்து பயணிக்கக் கூடிய பேட்டரி காா் ஒன்று வாங்கியுள்ளனா். இதன் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதைத்தொடா்ந்து இந்த பேட்டரி காா் விரைவில் சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டுக்கு வருமென பூங்கா நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.
- நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலை அல்லல்படுத்த வைக்கிறது.
- மரம் நடும் போரட்டத்தை பா.ஜ.க. கையில் எடுக்கும் என மாவட்ட தலைவர் கூறினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி எச்.எம்.டி. சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதில் தினந்தோறும் பல வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.
அவசர தேவைகளுக்கு செல்லும் பல வாகனங்கள் சேற்றில் சிக்கி போராடி தான் செல்ல வேண்டி உள்ளது. இத்தனைக்கும் இது ஒரு முக்கியமான சாலை ஆகும்.
ரோஜா பூங்கா வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் நகருக்குள் வராமல் பஸ் நிலைய பகுதிகளில் இருந்து குன்னூர் சாலை சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலை இப்படி அனைவரையும் அல்லல் படுத்த வைக்கிறது
இந்த சாலையை பாரதீய ஜனதா மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு சாலை பணி செய்யும் ஒப்பந்ததாரரிடம் பேசினர். அவர் இன்றே சாலை சீரமைப்பு பணியை தொடங்கி நாளைக்குள் முடித்து விடுவதாக கூறினார்
உடனடியாக இந்த சாலை சீரமைக்காவிட்டால் சாலையில் மரம் நடும் போரட்டத்தை பா.ஜ.க. கையில் எடுக்கும் என மாவட்ட தலைவர் மோகன்ராஜ் கூறினார்
மாவட்ட செயலாளர் அருண், நகர துணை தலைவர் சுதாகர், நகர செயலாளர்கள் சுரேஷ்குமார், ராஜேந்திரன், நகர துணை தலைவர் அரிகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் பிரேம்யோகன், இளைஞர் அணி விளையாட்டு துறை தலைவர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
- கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
- சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்
ஊட்டி:
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் நம்ம ஊரு சூப்பா் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் அம்ரித் தொடங்கி வைத்தார். இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:-
தமிழக அரசால் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொதுமக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு அவரவா் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு கள் பொதுமக்களிடையே திடக்கழிவு மேலாண்மை குறித்து அவரவா்களுக்கு உரிய பொறுப்புகளை எடுத்துரைக்க வேண்டும். குப்பைகளைத் தரம் வாரியாகப் பிரித்து வெளியேற்றுவதில் உரிய விழிப்புணா்வை ஏற்படுத்திட வேண்டும்.
பொதுமக்கள் அனை வரும் திடக்கழிவு மேலா ண்மையின் முக்கிய த்துவம் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொ ள்ளவும், சுற்றுச்சூழல் தூய்மையான கிராமங்களை அடையவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் 'சுகாதாரம், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை நடைமுறைகள் பற்றிய விழிப்புணா்வை கிராமப்புற மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், மகளிா் திட்ட இயக்குநா் ஜாகீா் உசேன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, உதகை ஊராட்சி ஒன்றியத்தலைவா் மாயன், ஊட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயா, சிவக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- ஓணம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருக்கிறது.
- வாகனத்தை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி:
முதுமலையில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தை, புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கோடை காலத்தில் கடும் வறட்சி நிலவியதால் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் பசுந்தீவனத்தை தேடி பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றது. இதன் காரணமாக இரை கிடைக்காமல் புலிகள் நடமாட்டம் சாலையோரம் அதிகமாக காணப்பட்டது
இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனத்தில் பசுந்தீவனம் போதிய அளவு வளர்ந்துள்ளது. இதனால் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
தற்போது ஓணம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருக்கிறது. முதுமலை சாலைகளில் வாகனங்கள் அதிகளவு இயக்கப்படுகின்றன.தொடர்ந்து வனவிலங்கு களுக்கு சுற்றுலா பயணிகள் இடையூறு செய்வதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். இந்தநிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் மற்றும் தொரப்பள்ளியில் இருந்து கார்குடி செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக துரத்தியது.
பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போ து, வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறையின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்தல் கூடாது. உணவு சமைத்தல் மற்றும் சாப்பிட கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றனர்.
- வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- திரைப்பட பாடலை பாடி பச்சை தேயிலையை பறித்தார்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கோயில் மேடு பகுதியை சேர்ந்தவர் ரெஜினா லூகாஸ். தோட்ட தொழிலாளி. இசையில் அதிக ஆர்வம் கொண்ட ரெஜினா லூகாஸ் தேயிலை பறிக்கும் போது, சோர்வடையாமல் இருப்பதற்காக தனது இனிமையான குரல் வளத்துடன் பாட்டு பாடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். அதனை மற்ற தொழிலாளர்களும் உற்சாகமாக கேட்பார்கள். தற்போது அவர் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து என்ற திரைப்பட பாடலை பாடி பச்சை தேயிலையை பறித்தார். இந்த சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது. கவலைகள் நிறைந்து இருந்தாலும், தேயிலை தோட்டங்களில் இலை பறித்து வாழும் தொழிலாளர்களின் கொண்டாட்டம் ஒரு பகுதியாக உள்ளது என பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
- யானைகள் வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்
- பந்தலூரில் யானைகள் அட்டகாசம் தொடர்கிறது
நீலகிரி
பந்தலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சேரம்பாடியில் இருந்து கூடலூர் சென்ற வாகனங்களை காட்டு யானைகள் வழிமறித்தன.
இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லி அருகே கோட்டப்பாடி வழியாக கருத்தாடு பகுதிக் குள்காட்டுயானை நுழைந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
தகவல் அறிந்த பிதிர்காடு வனகாப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.2 தேயிலை தோட்ட பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.
அங்கு குடியிருப்புகளை ஒட்டி உலா வருவதால், சேரம்பாடி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- காலை உணவு திட்டத்தால் 63 அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெறுவர்
- காலை உணவு வழங்க அதிகாரிகள் தீவிர ஏற்பாடு
ஊட்டி:
தி.மு.க. தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர் களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளி யிடப்பட்டது.
இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருகிற 15-ம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட வுள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 63 பள்ளிகளில் பயிலும் 3415 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை குழந்தை களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும் நோக்கத் திலும், ஊட்டச்சத்து நிலை உயர்த்தவும், ரத்தசோகை குறைபாட்டை நீக்கவும், பள்ளிகளில் குழந்தைகளின் வருகையை அதிகரிக்கவும், பணிக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கிலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க ப்படும்.அதனடிப்படையில், முதற்கட்டமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 63 பள்ளிகளில் பயிலும் 3415 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் இயல்பான நிறம், மணம் உடையதாகவும், வேறு வெளிப்பொருட்கள் கலக்காமலும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். உணவு சமைக்க பயன்படுத்தப்படும் சமையல் பொருட்கள் தரமானதாகவும் , சுத்தமா னதாகவும் இருக்க வேண்டும். காய்கறிகள் தரத்தை உறுதி செய்வதுடன் அவற்றை சமைப்பதற்கு முன் தண்ணீரில் நன்கு கழுவி பயன் படுத்த வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் சுகாதார மாகவும், தரமானதாகவும் அட்ட வணைப்படி உணவு தயாரித்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.தினசரி உணவு இருப்புகளின் பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் என சுய உதவிக்குழுஉறுப்பினர் களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு உணவு வழங்கும் முன்பு பள்ளி மேலாண்மை குழு ஒவ்வொரு நாளும் உணவின் தரத்தை உறுதி செய்யும் வகையில் உணவை பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- குன்னூரில் சுற்றுலாபயணிகள் வருகை அதிகம்
- வாகன நிறுத்த தளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது
ஊட்டி
நீலகிரி மாவட்டம் குன்னூர் சர்வதேச அளவில் ஊட்டிக்கு அடுத்து புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர்.
குறிப்பாக கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் அதிகமாக வருவார்கள்.இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். குன்னூர் நகரில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை.
இதனால் ஆண்டுதோறும் சீசனில் போக்குவரத்து பாதிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. வர்த்தக நகரமான குன்னூரில் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளன. இதனால், வாகனங்களை நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் பார்க்கிங் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது.
இதனால் குன்னூர் நகரசபை வாகன நிறுத்த பிரச்சினைக்கு தீர்வுகாண பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக 25-வது வார்டு கவுன்சிலர் ஜாகிர்கான் நடவடிக்கையின் பலனாக வண்டிபேட்டை வாகன நிறுத்த தளத்தை சீரமைத்து அதிக வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது. நகர மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா ஆலோசனை படி தரை முழுவதும் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டுவருகிறது
70 சதவித பணிகள் முடிவடைந்து ஒரு வார காலத்திற்குள் முழுவதும் பணி முடிவடையும். இதே போல் பல வாகன நிறுத்தங்கள் அமைக்க முன்முயற்சிகள் எடுக்க பட்டு வருகிறது.
- பல் நோக்கு மைய கட்டிடத்தை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
- முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி ஏற்பாடு
ஊட்டி
குன்னூா் ஊராட்சி இளித்தொரை கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு மைய கட்டிடத்தை வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் திறந்துவைத்தாா்.மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். இதில் வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் பேசியதாவது:-
தமிழகத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நகா்ப்புற ங்களின் வளா்ச்சிக்கு ஈடாக கிராமப்புறங்களிலும் வளா்ச்சிப் பணிகள் மேம்பட வேண்டும் என்ற தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தி உள்ளார்.
அதற்கேற்ப இளித்தொ ரை கிராம மக்களின் அனைத்துத் தேவைகளையும் பூா்த்தி செய்யும் விதமாக சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பல்நோக்கு மைய கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் குன்னூா் சப்- கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், குன்னூா் ஊராட்சி ஒன்றிய தலைவா் சுனிதா நேரு, எடப்பள்ளி ஊராட்சி தலைவா் முருகன், குன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.






