என் மலர்tooltip icon

    நீலகிரி

    • 800-க்கும் மேற்பட்ட பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்கள் உள்ளனர்.
    • 300 பேர் மட்டுமே பணி நிரந்த ரம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் 800-க்கும் மேற்பட்ட பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 300 பேர் மட்டுமே பணி நிரந்த ரம் செய்யப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள 500 பேர் தற்காலிக பணியாளர்க ளாகவே உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த போதிலும், இவர்கள் இதுவரை பணிநி ரந்தரம் செய்யப்படவில்லை. மேலும், நிரந்தர பணியா ளர்களுக்கும் இதுவரை யில் தோட்டக்கலைத்துறை சார்பில் காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை.மேலும், ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு போன்றவை வழங்கப்படாமல் உள்ளது. இதனால், தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

    இந்நிலையில், தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் பண்ணை பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய சந்தா தொகை பிடித்தம் செய்திட வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பத்தாண்டு பணிக்காலம் முடிந்தவர்க ளுக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் காலியாக உள்ள மஸ்தூர் மற்றும் அடிப்படை பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தோட்டக் கலைத்துறையில் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி தாவரவியல் பூங்கா பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கி ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4-வது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத், தோடர் சமுதாய முன்னேற்ற சங்க தலைவர் மந்தேஸ் குட்டன், படுக தேச பார்ட்டி தலைவர் மஞ்சை மோகன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

    பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகளோ அல்லது மாவட்ட நிர்வாகமோ பேச்சு வார்த்தை எதுவும் நடத்தவில்லை. என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • வருவாய்த்துறை அதிகாரிகள் கார்களை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
    • 5 ரூபாய் நாணயங்கள், 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் இருந்தது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பூங்கா அருகே குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார் மற்றும் தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை பார்வையிட்டு சோதனை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்படி ஏதாவது இருந்தால், அந்த வாகனங்களுக்கு அபராதமும் விதித்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தனர். காருக்குள் சாக்குமூட்டைகள் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரில் ஏறி சாக்குமூட்டையை பிரித்து சோதனை மேற்கொண்டனர்.

    அதில், ஏராளமான 5 ரூபாய் நாணயங்கள், 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் இருந்தது. இதன் மதிப்பு 2 லட்சத்து 59 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கார் டிரைவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த நபரையும், பணத்தையும் குன்னூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்தனர். விசாரணையில்,அந்த வாலிபர் திருப்பூரை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது.

    இவர் நீலகிரியில் உள்ள கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு கொடுப்பதற்காக இந்த நாணயங்களை பழனியில் இருந்து எடுத்து வந்ததும், அதற்கு அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் நேற்று ஒரே நாளில் பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக அந்த வழியாக வந்த 20 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நீலகிரியில் உள்ள கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு கொடுப்பதற்காக இந்த நாணயங்களை பழனியில் இருந்து எடுத்து வந்ததும், அதற்கு அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது
    • ஒரே நாளில் பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக அந்த வழியாக வந்த 20 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பூங்கா அருகே குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார் மற்றும் தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை பார்வையிட்டு சோதனை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்படி ஏதாவது இருந்தால், அந்த வாகனங்களுக்கு அபராதமும் விதித்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தனர். காருக்குள் சாக்குமூட்டைகள் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரில் ஏறி சாக்குமூட்டையை பிரித்து சோதனை மேற்கொண்டனர்.

    அதில், ஏராளமான 5 ரூபாய் நாணயங்கள், 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் இருந்தது. இதன் மதிப்பு 2 லட்சத்து 59 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கார் டிரைவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த நபரையும், பணத்தையும் குன்னூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்தனர். விசாரணையில்,அந்த வாலிபர் திருப்பூரை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது.

    இவர் நீலகிரியில் உள்ள கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு கொடுப்பதற்காக இந்த நாணயங்களை பழனியில் இருந்து எடுத்து வந்ததும், அதற்கு அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் நேற்று ஒரே நாளில் பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக அந்த வழியாக வந்த 20 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தொழிலாளர்கள் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
    • வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி காட்டு யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கூடலூர்

    லகிரி கூடலூர் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 3 டிவிசன் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.

    அப்போது காட்டு யானைகள் கூட்டமாக நின்றிருந்தது. இதைக்கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து அங்கிருந்து தப்பி ஓடினர். தகவல் அறிந்த சக தொழிலாளர்கள் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் அப்பகுதியில் தொடர்ந்து யானைகள் முகாமிடுவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தோட்டத்தொழிலாளர்கள் கூறியதாவது:- கூடலூர் பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    இதுதவிர காட்டுத்தீ பல இடங்களில் பரவி வருவதால் காட்டு யானைகள் இடம்பெயர்ந்து ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. தேயிலை தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது காட்டு யானைகள் கூட்டமாக வந்து விடுகிறது. இதனால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதால் அங்கிருந்து தப்பி ஓட வேண்டிய நிலை உள்ளது. எனவே வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி காட்டு யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தெய்வ மலை மற்றும் தவள மலை வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ பரவியது.
    • சிறு வன உயிரினங்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

    கூடலூர்

    கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் பேரூராட்சி உள்ளது. இதை சுற்றிலும் அடர்ந்த வனங்கள் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மலைப்பாதையில் உள்ள தெய்வ மலை மற்றும் தவள மலை வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ பரவியது.

    இதைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஊட்டி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர், ஆனால் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் வராததால் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. இதனிடையே தெய்வமலை கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

    தொடர்ந்து வன ஊழியர்கள் அப்பகுதிக்கு வந்து காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், இருப்பினும் அரிய வகை மூலிகைகள், தாவரங்கள் மற்றும் சிறு வன உயிரினங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. காட்டுத் தீயால் சேதமடைந்த வனத்தின் பரப்பளவு குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை.

    • போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பு

    அரவேணு,

    கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் விதிகளை மீறி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

    இதனால் கோத்தகிரி போலீசார் விபத்துகளை தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஆனாலும் சிலர் மலைப்பாதைகளில் அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, குடிபோதையில் வாகனங்களை இயக்குவது என போக்குவரத்து விதிகளை மீறி வருகின்றனர். மேலும் கனரக வாகனங்கள் அதிகப்படியான பாரம் ஏற்றி வந்து விதி மீறலில் ஈடுபடுகின்றன.

    இவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் துணை ஆய்வாளர் ஜான், ராஜேந்திரன் மற்றும் போலீசார் அரவேனு, சக்கத்தா, டானிங்டன், கட்டபெட்டு, பாண்டியன் பார்க் பகுதியில் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அதன்படி கடந்த 22-ந் தேதி அதிகபாரம் ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் உள்பட மொத்தம் ரூ.66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 23-ந் தேதி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.45 ஆயிரமும், 24-ந் தேதி ரூ.41 ஆயிரத்து 500-ம் அபராதம் விதிக்கப்பட்டது

    நேற்று நடத்திய சோதனையில் போக்குவரத்து வீதிகளை மீறியதாக 53 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.51 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் மொத்தம் 181 வாகன ஓட்டிகள் மீது வழக்கு ப்பதிவு செய்ய ப்பட்டு, ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு 70 சவீதம் மானியத்தில் அமைத்து கொடுக்கப்படுகிறது.
    • இத்திட்டத்தின் கீழ் 84 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்.

    கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் நில மேம்பாட்டு திட்டங்கள், சிறுபாசன திட்டங்கள், பாசன பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை திட்டம், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், வேளாண் கருவிகளை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குதல், சூரிய மின் சக்தி பம்ப் செட் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    வேளாண் பொறியியல் துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்ப் செட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்களுக்கு, பாசன வசதிக்காக மின் கட்டமைப்புடன் சாராதா தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு 70 சவீதம் மானியத்தில் அமைத்து கொடுக்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்திற்கு 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டில் 84 எண்கள் ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 84 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்கு ரூ.94.47 லட்சம் மற்றும் மத்திய அரசின் பங்கு ரூ.70.85 லட்சம் ஆகும். இதில் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியத்ெதாகை ரூ.8.42 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்குதல் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 221 விவசாயிகளுக்கு தேயிலை அறுவடை எந்திரம் மானியத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

    முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் பயன் அடைந்த விவசாயி பேச்சி யம்மாள் கூறியதாவது:-

    நான் ஊட்டி இத்தலார் கிராமத்தில் வசித்து வருகிறது. எங்களுக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 5 எச்.பி. திறன் கொண்ட சூரியசக்தி பம்பு செட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினை சே்ந்த எனக்கு 90 சதவீதம் மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட்டு அமைத்து கொடுத்தார்கள். இதன் விலை ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 548. எங்களது பங்களிப்பாக ரூ.33 ஆயிரத்து 254 மட்டுமே செலுத்தினோம். எங்களது நிலத்தில் தெளிப்பு நீர் பாசன அமைப்பு அமைக்கப்பெற்று சூரிய சக்தி பம்பு செட்டுடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதனால் எங்களுக்கு குறைந்த நீரில் பாசனம் செய்ய முடிந்தது. மேலும் டீசல் வாங்குவதற்கான பணமும், நேரமும் மிச்சமாகிறது. இதன் மூலம் லாபம் ஈட்ட முடிகிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஊடி இத்தலார் பகு தியைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி கூறியதாவது:-

    சூரிய சக்தி பம்பு செட்டுடன் தெளிப்பு நீர் பாசன அமைப்பினை இணைத்துள்ளதால் குறை வான தண்ணீரில் முழுமை யாக பாசனம் செய்ய முடிகிறது. உற்பத்தி செலவு குறைந்து லாபம் ஈட்ட முடிகிறது. எங்களை போன்ற விவசாயிகளின் நலனினை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாகி விட்டது.
    • வனப்பகுதியில் உலா வந்த யானைகளால் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    கோத்தகிரி,

    காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது அனைத்துப்பகுதிகளிலும் வறட்சி காணப்படுவதால் வனப்பகுதிகளில் உள்ள விலங்குகள் தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு அடிக்கடி வருவது வாடிக்கையாகி விட்டது.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோத்தகிரியை அடுத்த தட்டப்பள்ளம் பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதியில் முகாமிட்டதுடன் அங்கு வரும் வாகனங்களை சேதபடுத்தி வந்ததால் வாகன ஓட்டிகள் அந்த பகுதிக்கு வரும்போது மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    ஆனால் தற்போது குஞ்சப்பனை சோதனை சாவடியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வனப்பகுதியில் புதிதாக வரத் தொடங்கியுள்ள மற்றொரு இரண்டு காட்டு யானைகள் வாகன ஓட்டிகளை மேலும் அச்சப்படுத்தி வருகிறது.

    இதில் நேற்று இரவு அந்த சாலையில் உலா வந்த யானைகளால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    பின்பு அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றவுடன் போக்குவரத்து சீரானது.

    • கடந்த 23-ந் தேதி இரவு ஆகாஷ் டேவிட் போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டார்.
    • காயம் அடைந்த ஆகாஷ் டேவிட், கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    ஊட்டி,

    ஊட்டி அருகே உள்ள கேத்தி சாந்தூரைச் சேர்ந்தவர் ஆகாஷ் டேவிட் (வயது 26). இவர் ஊர்க்காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 23-ந் தேதி இரவு இவர் போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கேத்தி பாலாடா திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த செல்வகுமார் (31) என்பவர் வீட்டு முன்பு சிலர் கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து கலைந்து போகச் செய்தனர்.

    அதன்பின்னர் ஊர்க்காவல் படை காவலரான ஆகாஷ் டேவிட், தனது நண்பர் வீட்டுக்கு சென்றார். அப்போது செல்வகுமார் மற்றும் அவரது நண்பர்களான ஜிசாந்த் (26), ஆரோக்கியசாமி (36), சத்தியசீலன் ஆகியோர் தகராறு செய்தனர். மேலும் ஆகாஷ் டேவிட்டையும் அவர்கள் அடித்து உதைத்து தாக்கினர்.

    இதில் காயம் அடைந்த ஆகாஷ் டேவிட், கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 77 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டது.
    • குன்னூர் நகருக்கு மாற்றுப்பாதை ரூ.46 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

    விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விவரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 77 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கூடலூரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் பாரம்பரிய பயிர் இரக்கங்களின் விவசாயத்தை மேம்படுத்த தோட்டக்கலைத்துறையின் அரசு தோட்டக்கலை பண்ணையில் பீன்ஸ் மற்றும் பாகற்காய் போன்ற பயிர்களின் பாரம்பரிய ரகங்களை உற்பத்தி செ்யது விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் வன விலங்கு களால் ஏற்படும் விவசாய பாதிப்பை தடுக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    மாநில நெடுஞ்சாலை துறையின் மூலம் லவ்டேல் சந்திப்பு முதல் காட்டேரி வரையிலான குன்னூர் நகருக்கு மாற்றுப்பாதை ரூ.46 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பணிகள் முடிவுற்ற பிறகு விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களை குன்னூர் நகருக்குள் வராமலேயே நேரடியாக மேட்டுப்பா ளையத்திற்கு சென்று தங்களது விளை பொருட்களை கொண்டு செல்லலாம். இதன் மூலம் கால நேரம் குறைபடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மானியத்தில் பேட்டரி தெளிப்பான்களை மாவட்ட கலெக்டர் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் விவசாயிகளின் பொது கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டு உரிய விவரம் தெரிவிக்கப்பட்டது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் தாயை பிரிந்த 4 மாத குட்டி யானை ஒன்று கிணற்றில் விழுந்து விட்டது.
    • யானை குட்டியை மீட்ட வனத்துறையினர் அதனை தாயுடன் சேர்க்க எவ்வளவோ முயற்சித்தும் தாய் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயை பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை ஜனரஞ்சகமாக சித்தரிக்கும் வகையில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது.

    இந்த படத்தினை கார்த்திகி கோன்சல்வாஸ் இயக்கி இருந்தார்.

    இந்த படம் ஆஸ்கர் விருது இறுதி போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்தது. கடந்த 13-ந்தேதி அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவண திரைப்படத்திற்கான விருதினை தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படம் பெற்றது. இந்த விருதினை பெற்றதன் மூலம் தமிழ் திரையுலகில் முதல் விருது பெற்ற ஆவண திரைப்படம் என்ற சாதனையும் இந்த படம் படைத்தது.

    ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பொம்மன், பெள்ளி ஆகியோரை சில தினங்களுக்கு முன்பு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து பாராட்டு கேடயமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார். அதனை தொடர்ந்து அவர்கள் கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு பாராட்டு விழா மும்பையில் நடைபெற்றது.

    இந்த விழாவில் பொம்மன், பெள்ளி ஆகியோரும் பங்கேற்றனர். இதற்காக அவர்கள் நேற்றுமுன்தினம் கோவையில் இருந்து மும்பை சென்றனர். நேற்று மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.

    விழா முடிந்ததும் அவர்கள் உடனடியாக நேற்று மாலையே மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மும்பையில் இருந்து அவர்கள் கோவைக்கு இண்டிகோ விமானத்தில் வந்தனர்.

    இந்த நிலையில் பொம்மன், பெள்ளி ஆகியோர் இந்த விமானத்தில் வருவது, விமானிக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் எழுந்து வந்து, உள்ளே இருந்த பயணிகளை பார்த்து, நாம் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என கூறினார். அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் என்ன சொல்கிறார் என தெரியாமல் குழம்பி போய் இருந்தனர்.

    தொடர்ந்து விமானி பேசுகையில், நம்முடன் ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தின் கலைஞர்கள் 2 பேர் பயணிக்கிறார்கள். அவர்களுடன் பயணிப்பது நமக்கு பெருமையான தருணம். அவர்களை நாம் கைதட்டி உற்சாகமாக வரவேற்க வேண்டும் என தெரிவித்தார்.

    அப்போது பொம்மனும், பெள்ளியும் விமானத்தின் முதல் இருக்கையில் இருந்து எழுந்தனர். உடனே இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி 2 பேரையும் உற்சாகமாக வரவேற்றனர்.

    இதை பார்த்த பொம்மன், பெள்ளி ஆகியோர் பதிலுக்கு அவர்களுக்கு கை கூப்பி வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.

    அப்போது விமானி, இவர்கள் நடிகர்கள் அல்ல. உண்மையான மனிதர்கள். நிஜ ஹீரோக்கள். இவர்களுடன் பயணிப்பதை பெருமையாக உணர்கிறோம் என தெரிவித்தார்.

    மேலும் கோவை வரும் வரை பொம்மன், பெள்ளியிடம் பயணிகள் அனைவரும் பேசி கொண்டு வந்தனர். கோவையில் விமானம் தரையிறங்கியதும், அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி வரிசையாக நின்று கொண்டனர்.

    பொம்மன், பெள்ளி விமானத்தை விட்டு இறங்கி வரும் போது வாழ்த்துக்களை கூறி வரவேற்றனர். அத்துடன் அவர்களுடன் செல்பி புகைப்படமும் எடுத்து அதனை தங்கள் சமூக வலைதளங்களில் ஆஸ்கர் விருது பெற்றவர்களுடன் ஒரு சந்திப்பு என தலைப்பிட்டு பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பின்னர் பொம்மன், பெள்ளி ஆகியோர் கோவையில் இருந்து கார் மூலமாக நீலகிரி புறப்பட்டு சென்றனர். இந்த வீடியோவை சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகுவும் பகிர்ந்துள்ளார்.

    இதேபோல் இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் பொம்மன், பெள்ளி பயணித்த வீடியோவை பகிர்ந்து, அதில் எங்கள் விமானத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ஆவண படத்தில் நடித்த கலைஞர்கள் பயணித்தது எங்களுக்கு பெருமையான தருணமாகும் என தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பொம்மன், பெள்ளி கூறியதாவது:-

    நாங்கள் மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்று விட்டு நேற்று ஊர் திரும்புவதற்காக விமானத்தில் பயணித்தோம். அப்போது எங்களுடன் பயணித்தவர்கள் எங்களை வெகுவாக பாராட்டினர். இதனை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    காட்டுக்குள் இருந்த எங்களுக்கு அங்கிருந்து வெளியில் வந்து நகர பகுதியை பார்வையிட்டதும், அங்கு மக்கள் எங்களுக்கு கொடுத்த வரவேற்பும் மிகவும் அளப்பரியது.

    எங்களுக்கு கிடைத்த இந்த பெருமை எல்லாம் குட்டி யானைகளான ரகு, பொம்மியைவே சாரும். அவர்களால் தான் நாங்கள் இந்த அளவுக்கு பிரபலமாகி உள்ளோம். எங்களை எங்கு பார்த்தாலும் அனைவரும் அடையாளம் கண்டு பாராட்டு தெரிவிப்பதோடு எங்களுடன் புகைப்படமும் எடுத்து கொள்கின்றனர். இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படத்தில் நடித்தாலும் அவர்கள் 2 பேரும் எவ்வித கர்வமும் இல்லாமலும், அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் சர்வ சாதாரணமாக அதனை கடந்து செல்கின்றனர்.

    அத்துடன் மீண்டும் தங்கள் பணியை தொடங்கி விட்டனர். ஆம் அவர்கள் 2 பேருக்கும் தற்போது வனத்துறையினர் வேறு ஒரு குட்டி யானையை பராமரிக்கும் பணியை கொடுத்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் தாயை பிரிந்த 4 மாத குட்டி யானை ஒன்று கிணற்றில் விழுந்து விட்டது. அந்த யானை குட்டியை மீட்ட வனத்துறையினர் அதனை தாயுடன் சேர்க்க எவ்வளவோ முயற்சித்தும் தாய் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் குட்டி யானையை முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குட்டி யானையை பராமரிக்கும் பணி ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த தம்பதியான பொம்மன், பெள்ளி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் அந்த யானையை தங்கள் பிள்ளையை போல் பாவித்து பராமரித்து வளர்க்க தொடங்கி உள்ளனர். இந்த வீடியோவையும் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு பகிர்ந்து யானை குட்டி பாதுகாப்பான கரங்களில் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    • ரூ. 6 லட்சம் மதிப்பில் நடைபாதை அமைக்கப்பட்டது.
    • காலில் மிதிக்கும் போது, சிமெண்ட் அப்படியே வருகிறது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டப்பெட்டு அருகே உள்ளது பில்லிக்கம்பை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சக்தி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அண்மையில் ரூ. 6 லட்சம் மதிப்பில் நடை பாதை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த நடைபாதை மிகவும் மோசமாக உள்ளது. காலில் மிதிக்கும் போது, சிமெண்ட் அப்படியே வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பணி செய்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே தரமற்ற நடைபாதை அமைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×