search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் வனவிலங்குகளால் ஏற்படும் விவசாய பாதிப்பை தடுக்க நடவடிக்கை
    X

    ஊட்டியில் வனவிலங்குகளால் ஏற்படும் விவசாய பாதிப்பை தடுக்க நடவடிக்கை

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 77 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டது.
    • குன்னூர் நகருக்கு மாற்றுப்பாதை ரூ.46 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

    விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விவரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 77 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கூடலூரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் பாரம்பரிய பயிர் இரக்கங்களின் விவசாயத்தை மேம்படுத்த தோட்டக்கலைத்துறையின் அரசு தோட்டக்கலை பண்ணையில் பீன்ஸ் மற்றும் பாகற்காய் போன்ற பயிர்களின் பாரம்பரிய ரகங்களை உற்பத்தி செ்யது விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் வன விலங்கு களால் ஏற்படும் விவசாய பாதிப்பை தடுக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    மாநில நெடுஞ்சாலை துறையின் மூலம் லவ்டேல் சந்திப்பு முதல் காட்டேரி வரையிலான குன்னூர் நகருக்கு மாற்றுப்பாதை ரூ.46 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பணிகள் முடிவுற்ற பிறகு விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களை குன்னூர் நகருக்குள் வராமலேயே நேரடியாக மேட்டுப்பா ளையத்திற்கு சென்று தங்களது விளை பொருட்களை கொண்டு செல்லலாம். இதன் மூலம் கால நேரம் குறைபடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மானியத்தில் பேட்டரி தெளிப்பான்களை மாவட்ட கலெக்டர் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் விவசாயிகளின் பொது கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டு உரிய விவரம் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×