search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wild elephant camp"

    • தொழிலாளர்கள் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
    • வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி காட்டு யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கூடலூர்

    லகிரி கூடலூர் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 3 டிவிசன் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.

    அப்போது காட்டு யானைகள் கூட்டமாக நின்றிருந்தது. இதைக்கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து அங்கிருந்து தப்பி ஓடினர். தகவல் அறிந்த சக தொழிலாளர்கள் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் அப்பகுதியில் தொடர்ந்து யானைகள் முகாமிடுவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தோட்டத்தொழிலாளர்கள் கூறியதாவது:- கூடலூர் பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    இதுதவிர காட்டுத்தீ பல இடங்களில் பரவி வருவதால் காட்டு யானைகள் இடம்பெயர்ந்து ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. தேயிலை தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது காட்டு யானைகள் கூட்டமாக வந்து விடுகிறது. இதனால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதால் அங்கிருந்து தப்பி ஓட வேண்டிய நிலை உள்ளது. எனவே வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி காட்டு யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×