என் மலர்
நீலகிரி
- சுற்றுச்சூழல் பாதிப்பால் சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டிக் கிடக்கிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்திருப்ப தால் சுற்றுச்சூழல் பாதிக்க ப்படுவதாக சமூக ஆர்வ லர்கள் கவலை அடைந்து ள்ளனர். இதுகுறித்து எக்ஸ்னோரா அமைப்பின் நீலகிரி மாவட்டத் தலைவா் கண்ணன் மாவட்ட நிா்வா கம் மற்றும் உள்ளாட்சி நிா்வாக ங்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய பல போராட்டங்கள், பல விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நீலகிரி எக்ஸ்னோரா அமைப்பு இதற்காக களத்தில் இறங்கி பிளாஸ்டிக் ஒழிப்பில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டது.
ஆனால், அண்மை க்காலமாக மீண்டும் மாவட்டத்தில் பிளா ஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.ெரயில் தண்டவா ளங்கள், குப்பை கிடங்குகள், நீா் நிலைகள் போன்றவற்றில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டிக் கிடப்பதைப் பாா்க்கும்போது நீலகிரியின் சுற்றுச்சூழல் பெருமளவு பாதித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க பொது மக்கள் தாங்களாக முன் வரவேண்டும். கடை களில் பொருள்கள் வாங்கு ம்போது துணிப்பையை பயன்படுத்த வேண்டும்.அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளா்கள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் பிளா ஸ்டிக் சாா்ந்த பொருள்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும். இதனை அனைத்து அரசு துறை அலுவல கங்களும் கண்கா ணித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிா்வாகம், நகரா ட்சி, பேரூராட்சி நிா்வாக ங்கள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஏலத்தில் மொத்தம் 23 லட்சத்து 84 ஆயிரத்து 88 கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தன.
- தேயிலை தூள் ரூ.100க்கும் கீழ் விற்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற ஏலத்தில் 89.72 சதவீத தேயிலை தூள் விற்பனையானது. இது குறித்து தேயிலை வா்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ள தாவது:-
நீலகிரி மாவட்டம், குன்னூரில் 25-வது தேயிலை ஏலம் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன. இந்த ஏலத்தில் மொத்தம் 23 லட்சத்து 84 ஆயிரத்து 88 கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தன.
எகிப்து, ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதி யாளா்கள் பங்களிப்பு அதிகம் இருந்ததாலும், உள்நாட்டு தேவை அதிகரிப்பாலும் 21 லட்சத்து 39 ஆயிரத்து 71 கிலோ தேயிலை தூள் விற்பனையானது. இது மொத்த விற்பனையில் 89.72 சதவீதமாகும். சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ. 97.94 வரை விலை கிடைத்துள்ளது.
தற்போது நடைபெற்ற ஏலத்தில் கடந்த வாரத்தை விட ஒரு லட்சம் கிலோ வரை அதிகம் விற்பனைக்கு வந்திரு ந்தாலும், தரத்துக்கு முக்கியத்துவம் தராததால் தேயிலை தூள் ரூ.100க்கும் கீழ் விற்கப்பட்டதாகவும், தரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஏலத்தில் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தேயிலை வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா்.
- இயற்கை வளத்தை காப்பாற்ற வேண்டியும் உலக அமைதிக்கான பேரணி நடந்தது.
- ஊர்வலத்தில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உலக நன்மை வேண்டியும், அமைதியான சூழ்நிலை உருவாக வேண்டியும், இயற்கை வளத்தை காப்பாற்ற வேண்டியும் உலக அமைதிக்கான பேரணி நடந்தது. இதில் கிறிஸ்துவ பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் , பாதிரியார்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு பாதிரியார் அமிர்தராஜ் தலைமை தாங்கினார். புனித அந்தோணியார் பள்ளி தலைமை ஆசிரியர் மோட்சா மேரி, ஹோம் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர் மவுலிமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியானது காமராஜ் பகுதியில் தொடங்கி கோத்தகிரி முக்கிய சாலைகள் வழியாக மார்க்கெட், பஸ் நிலையம் வந்தடைந்தது. அதனை தொடர்ந்து ஒரு மணி நேரம் அமைதியாக நின்றனர். இந்த ஊர்வலத்தில் புனித அந்தோணியார் பள்ளி, ஹோம் மெட்ரிக் பள்ளி அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு முகாம்கள் ஜூன் 26-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது.
- குளிா்பதன கிடங்கு விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.
இது குறித்து அவா் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-
நீலகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடையும் வகையில் வட்டார அளவில் சிறப்பு முகாம்கள் ஜூன் 26-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது. இயற்கை வேளாண்மைக்காக தோட்டக்கலைத் துறை மூலம் நடப்பு ஆண்டில் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வழி காட்டு நெறிமுறை களின்படி மாதந்தோறும் அங்கக வேளாண்மைக்கான கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோட்டக்கலைத் துறையி ன்கீழ் அரசு ரோஜா பூங்கா அருகில் அமைந்துள்ள குளிா்பதன கிடங்கு விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
தனியாா் விற்பனை நிலையங்களில் உரத்தின் விலை கடந்த ஓராண்டில் அதிக அளவில் உயா்ந்து ள்ளதாக தகவல் வந்த நிலையில், அங்கு ஆய்வு செய்யுமாறு சம்பந்த ப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை யையொட்டி அபாயக ரமான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளை களை வெட்டுவதற்காக வருவாய்த் துறை அலுவ லா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறையின் மூலம் 2023-24 ஆம் ஆண்டில் தேசிய தோட்ட க்கலை இயக்கம் திட்டத்தி ன்கீழ் நிழல்வலை குடில் 50 சதவீதம் மானியத்தில் அமைக்கவும், 2023-2024 ஆம் ஆண்டில் 20 யூனிட் தேனீ வளா்ப்பு க்கும் இலக்கு நிா்ணயிக்கப்ப ட்டுள்ளது.
எனவே, தேவைப்படும் விவசாயிகள் விண்ண ப்பித்து பயன்பெறலாம். கடந்த ஆண்டு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 274 தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிறப்புப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் ஆயிரம் தேயிலை அறுவடை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் உழவா் உற்பத்தியாளா் சந்தைக்கு சி.சி.டி.வி. காமிரா மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்த மையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- காய்கறிகளை கழுவும் தண்ணீரை சுத்தப்படுத்தி வெளியேற்ற எந்தவித வசதியும் செய்யப்படவில்லை.
அரவேணு,
தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வினியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி செலவில் கோத்தகிரி அருகே எஸ்கைகாட்டி, கஸ்தூரிபா நகர் பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய வேளாண் பல்நோக்கு மையம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
இந்த மையத்தில் மலை காய்கறிகளை கழுவும் நவீன எந்திரம், காய்கறிகளை உலர்த்தும் எந்திரம், காய்கறிகளை பாதுகாப்பாக வைக்கும் குளிர்பதனகிடங்கு, காய்கறி ஏல விற்பனை மையம், காய்கறிகளை தரம் பிரிக்கும் மையம், ஜென ரேட்டர் வசதி, வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்த ப்பட்டன. கோத்தகிரி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த காய்கறிகளை பல்நோக்கு மைய த்திற்கு கொண்டு சென்று கழுவி, இடைத்தரகர்கள் தலையீடு இன்றி விற்பனை செய்து வந்தனர்.
இந்த பல்நோக்கு மையத்தை சமவெளி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், 3 ஆண்டுக்கு செயல்படுத்த ரூ.6 லட்சத்தை வேளாண் வணிகத்துறைக்கு செலுத்த ஒப்பந்தம் போட்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பல்நோக்கு மையத்தில் காய்கறிகளை கழுவும் தண்ணீரை சுத்தப்படுத்தி வெளியேற்ற எந்தவித வசதியும் செய்யப்படவில்லை. இதனால் அழுக்கு தண்ணீர் தாழ்வான பகுதியில் செல்லும் ஆற்றில் நேரடியாக கலந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்கிறது. அந்த தண்ணீரை கிராம மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பல்நோக்கு மையத்தில் இருந்து வெளியேறும் அசுத்தமான தண்ணீரை ஆற்றில் கலக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இந்த மையத்தை குத்தகைக்கு எடுத்த விவசாயி கடந்த 3 மாதங்களாக வேளாண் வணிகத்துறைக்கு வாடகை செலுத்தாமல் பூட்டி வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த காய்கறி களை கழுவுவதற்கு பல கி.மீ. தொலைவில் உள்ள கூக்கல்தொரை கிராம த்திற்கு சரக்கு வாகனங்க ளில் கொண்டு சென்று தனியார் காய்கறி கழுவும் மையங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி கழுவி விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, வேளாண் பல்நோக்கு மையத்தை மீண்டும் திறக்கவும், காய்கறி கழுவும் தண்ணீர் பல கிராமங்க ளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆற்று நீரில் கலக்காமல் இருக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது
- யானைகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கவனமுடன் செல்ல வேண்டும்
கூடலூர்
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் உள்ள கெவிப்பாரா என்ற இடத்தில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. தொடர்ந்து சாலையை அடிக்கடி கடந்து செல்கிறது.
மேலும் பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கோக்கால் மலையடிவாரம், கெவிப்பாரா, தருமகிரி, காமராஜ் நகர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இரவில் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது என வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஓவேலி வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கூடலூர்-ஓவேலி சாலையில் எந்த நேரமும் வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. இதேபோல் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக கூடலூருக்கு வந்து செல்கின்றனர். தற்போது காட்டு யானைகள் கூட்டமாக கெவிப்பாரா பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.
இதேபோல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கவனமுடன் செல்ல வேண்டும். மேலும் சுற்றுவட்டார கிராம மக்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. குடியிருப்பு பகுதிக்கு காட்டு யானைகள் வந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பல கட்டமாக முயற்சி செய்து மாலை 3.45 மணிக்கு எந்திரம் சீரமைக்கப்பட்டது.
- மாலை 4.30 மணிக்கு மின்வினியோகம் சீராக வழங்கப்பட்டது.
நீலகிரி
கூடலூர் கூடலூர் மின் நிலையத்தில் உள்ள எந்திரத்தில் திடீரென தீ பரவியது. இதனால் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
கூடலூர் பகுதியில் மின்சார வினியோகம் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. இதை சரி செய்யும் பணியில் மின்வாரிய துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக ஓவேலி பகுதியில் மின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மின்வாரிய துறையினர் பழுதை சரி செய்யும் பணியில் நேற்று காலை 10 மணிக்கு ஈடுபட்டனர். இந்த சமயத்தில் கூடலூர் மின் நிலையத்தில் உள்ள எந்திரத்தில் திடீரென தீ பரவியது. இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் தீயை அணைத்தனர். தொடர்ந்து மின்வினியோகமும் பாதிக்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் எந்திரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் உடனடியாக சீரமைக்க முடியவில்லை. இதனால் பல கட்டமாக முயற்சி செய்து மாலை 3.45 மணிக்கு எந்திரம் சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து மின்வினியோகமும் வழங்கப்பட்டது. இருப்பினும் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை பல மணி நேரம் மின்சாரம் இல்லாததால் கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இதேபோல் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஓட்டல்களில் உணவுகள் தயார் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தொடர் நடவடிக்கைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு மின்வினியோகம் சீராக வழங்கப்பட்டது. அதன் பின்னரே பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினர் நிம்மதி அடைந்தனர்.
- பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- தி.மு.க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட திட்டக்குழு தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ரவிகுமார், முஸ்தபா, ஜார்ஜ், ராமசாமி, ராஜேந்திரன், பாபு, விசாலாட்சி ஆகியோரும், ஏற்கனவே மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாக உள்ள பொன்தோஸ், உமாராஜன், வனஜா, மீனா, சசிகலா, அனீபா ஆகியோர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றதை தொடர்ந்து மாவட்ட தி.மு.க. அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலய முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக்கிடம் வாழ்த்து பெற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான பொன்தோஸ், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத் துல்லா, தொரை, பில்லன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், இஸ்மாயில், மணிகண்டன், ஊட்டி நகர் மன்ற உறுப்பினர்கள் ரவி, ரீட்டாமேரி, ரமேஷ், ரகுபதி, விஷ்னு, கஜேந்திரன், நாகமணி, கீதா, மேரி பிளோ ரினா, பிரியா வினோதினி, திவ்யா, அனிதா லட்சுமி, பிளோரினா, மீனா, ஜாகீர்உசேன், மன்சூர், கோபி, சாந்தாசந்திரன், வசந்தி, சுசிலா, சித்ரா, பாக்கியவதி, சமீனா மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- அடிப்படை மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
- மருத்துவ முகாமில் சுமார் 2000 ஏழை, எளிய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் தூனேரி ஊராட்சி அகலார் பகுதியில் உள்ள தூனேரி அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற பன்னோக்கு சிறப்பு மருத்துவமுகாமில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்
இந்த முகாமில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அடிப்படை மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உயர் சிகிச்சை தேவை பட்டவர்களுக்கு உயர்சிகிச்சை பரிந்துரைக்கபட்டது.
பொது மருத்துவர், அறுவைசிகிச்சை மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர், குழந்தகள் நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர், இருதய நோய் மருத்துவர், சித்த மருத்துவர், மனநல மருத்துவர் என அனைத்து மருத்துவர்களும் கலந்து கொண்டு அனைத்து பிரச்சினைகளுக்கும் மருத்துவம் பார்த்தது மிக சிறப்பாகும்
இந்த மருத்துவ முகாமில் சுமார் 2000 ஏழை, எளிய பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான சிகிச்சையை தங்கள் பகுதிலேயே பெற்றது தனிசிறப்பாகும். அனைவருக்கும் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கபட்டது.
மாவட்ட ஊராட்சிதலைவர் பொன்தோஸ், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மருத்துவ கல்லூரி முதல்வர் மனோகரிரா மசந்திரன், இணை இயக்குநர் பழனிசாமி, துணை இயக்குநர் பாலுசாமி, வட்டார மருத்துவஅலுவலர் முருகேசன், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், நந்தகுமார் ஆகியோர் மருத்துவ முகாமை ஒருங்கிணைத்தனர்.
- கோட்டாட்சியர் புஷண் குமார் தமிழக அரசின் சார்பில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்
- 3 நாள் நடைபெற்ற ஜமாபந்தியில் 396 மனுக்கள் பெறப்பட்டது.
குன்னூர்,
குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி கோட்டாட்சியர் புஷண் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கேத்தி, அதிகரட்டி மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை அளித்தனர்.
முன்னதாக குன்னூர் கோட்டாட்சியர் புஷண் குமார் தமிழக அரசின் சார்பில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
3 நாள் நடைபெற்ற ஜமாபந்தியில் 396 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என குன்னூர் கோட்டாட்சியர் புஷண் குமார் தெரிவித்தார். அவருடன் குன்னூர் தாசில்தார் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- நிகழ்ச்சிக்கு வட்டார பொது சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
- விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நீலகிரி மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலுசாமி அறிவுறுத்தலின் பேரில் தேசிய புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நிகழ்ச்சிக்கு வட்டார பொது சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் பிரேம்குமார், அசோக்குமார், குமாரசாமி மற்றும் சுகாதாரத்துறை நர்சுகள், அரசு பள்ளி மாணவ மாணவிகள், தனியார் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.
இதனை கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாதவ் கிருஷ்ணா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் தொடங்கி காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல், மார்க்கெட், கடைவீதி வழியாக பஸ் நிலையத்தை அடைந்தது.
பஸ்நிலையத்தில் வைத்து புகையிலை மற்றும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இறுதியில் சுகாதாரத்துறை ஆய்வாளர் குமாரசாமி பேரணியில் கலந்து கொண்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நன்றி கூறினார்.
- முகாமில் 50 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பில் மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.
- பேரூராட்சி துணைத்தலைவர் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது.
இதில் கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு, கூடலூர் வண்டிப்பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி முகம்மது அலி என்பவருக்கு ரூ.7,900 மதிப்பிலான சக்கர நாற்காலி மற்றும் ரூ.1,250 மதிப்பில் இருபக்க கால் தாங்கிகளையும் வழங்கி னார்.
தொடர்ந்து முகாமில் 50 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பில் மின்னனு குடும்ப அட்டைகள், வருவாய்த்துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு திருமண உதவி தொகை மற்றும் இயற்கை மரண உதவித்தொ கை ரூ.2.30 லட்சம் மதிப்பிலும் முதல்-அமைச் சர் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு அட்டைகள் என மொத்தம் 67 பயனாளிகளுக்கு ரூ.29.90 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கி னார்.
மேலும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக் கைகள் அடங்கிய 205 மனுக்களையும் பெற்றுக் கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடி யாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவு றுத்தினார்.
அதனை தொடர்ந்து கூடலூர் தாசில்தார் அலுவலகத்தில், கூடலூர் குறுவட்டம், தேவாலா-1, தேவாலா-2, கூடலூர்-1, கூடலூர் 2, பாடந்தொரை-1 பாடந்தொரை-2, ஓவேலி-1, ஓவேலி-2 ஆகிய கிராமங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டார்.
கடந்த 21-ந் தேதி நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கூடலூர், குந்தா, கோத்தகிரி, ஊட்டி, குன்னூர், பந்தலூர் வட்டங்களில் 449 மனுக்கள் பெறப்பட்டது.
இதில் உதவி வன பாதுகாவலர் கருப்பையா, கூடலூர் நகர்மன்ற தலைவர் பரிமளா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, தோட்டகலை உதவி இயக்குனர் பாலா, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, கூடலூர் தாசில்தார் சித்தராஜ், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணா துரை, ஆறுமுகம், ஓவேலி பேரூராட்சி துணைத்தலைவர் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






