என் மலர்tooltip icon

    நீலகிரி

    • தூனேரி அகலாரில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த மருத்துவ முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    கலைஞர் கருணாநிதி நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு தூனேரிஅகலாரில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவமுகாமில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்து கொண்டார்.

    இந்த மருத்துவ முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ஏற்பாட்டில் மதிய உணவும் வழங்கபட்டது. கிராம ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்களால் படுக பாரம்பரிய அவரை குழம்பு நெய் மணக்க மணக்க அனைவருக்கும் உணவு பறிமாறப்பட்டது.

    மதிய உணவை தயாரித்த ஊர் பெரியவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் பொன்னாடை அணிவித்து நன்றி கூறினார். சிறப்பான பங்களிப்பை வழங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர் மற்றும் நந்தகுமார், தூனேரி ஊராட்சி தலைவர் செயலர் கார்த்தி ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.

    ஊர் பெரியவர்கள் மற்றும் பொது மக்கள் ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயனுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயனின் கார் டிரைவர் சிவா செய்திருந்தார்.

    • போதை பொருள் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தி கொண்டு மாணவ மாணவிகள் கோஷங்களை எழுப்பினர்.
    • மாணவ-மாணவிகள் போதை பொருளை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    கோத்தகிரி,

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் கோத்தகிரி போலீஸ் துறையினர் சார்பில் கோத்தகிரியில் பேரணி நடந்தது.

    இந்த பேரணியில் கோத்தகிரி சுற்று வட்டார பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போதை பொருள் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தி கொண்டு கோஷங்களை எழுப்பினர் . கோத்தகிரி காந்திமைதானத்தில் தொடங்கிய பேரணி பஸ் நிலையம், மார்க்கெட் வழியாக கோத்தகிரி நேரு பூங்காவில் முடிவடைந்தது.

    பின்னர் மாணவ-மாணவிகள் போதை பொருளை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுமான்கான், யாதவக்ரிஷ்ணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • இப்பயிற்சி வகுப்பில் 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • கலந்துக்கொள்ளும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் கீழ்-கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி அளிக்கப்பட்டது. தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கக்கூடிய மின் மற்றும் மின்னணுவியல் நிறுவனமானது 20 பேர் கொண்ட குழுவின் மூலம் 2 நாள் பயிற்சி பட்டறை நடந்தது.

    இப்பயிற்சி வகுப்பில் 40 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சிவகாமி எஸ்டேட் நிர்வாக இயக்குநர் சிவக்குமார் , கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார்.

    கெங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் , ஆசிரியர்கள் , பொதுமக்கள் திரளாக கலந்து் கொண்டனர். கண்ணன், சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி கீழ்கோத்தகிரி விவேக், முருகன் ,பாபு தினேஷ் உள்ளிட்டோர் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு குறித்து மாணவர்களிடம் உரையாடினர். கலந்துக்கொள்ளும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கணினி ஆசிரியர் கோபிநாத் நன்றி தெரிவித்தார் .

    • தொடக்க விழா நிகழ்ச்சி ஊட்டி ஏ.டி.சி.யில் நடந்தது.
    • ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்

    ஊட்டி,

    கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம், ஊட்டி நகர ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி ஊட்டி ஏ.டி.சி.யில் நடந்தது.

    தி.மு.க. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை தாங்கினார். தி.மு.க துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.இராசா கல்வெட்டினை திறந்து வைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தை தொடங்கி வைத்தார்,

    சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்தார். ்மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, இளங்கோவன், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, தொ.மு.ச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜெயராமன், ஆட்டோ தொ.மு.ச. தலைவர் ஸ்டான்லி, துணை தலைவர்கள் பாபு, நாகர்ஜூணன், துணை செயலாளர்கள் மைக்கல் ராஜ், பிரான்சிஸ்சேவியர், பொருளாளர் சிவானந்தன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் அந்தோனி மேத்யூஸ், தியாகு, முஜி, ஊட்டி நகர துணை செயலாளர்கள் இச்சுபாய், கிருஷ்ணன், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரகுபதி, விஷ்னு, கஜேந்திரன், பிரியா, மேரி பிளோரீனா, ஜெகதீஷ் மற்றும் கட்சி நிர்வாகி்கள் ஆட்டோ பாபு, குமார், சுரேஷ், ஹென்றி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் பாபி, பிரதாப், மேத்யூ,. ராகுல், உத்ரேஷ், உதயகுமார், மணிகண்டன், உமாசங்கர், அசோக், கிரன், வினோத், பிரவீன், தொ.மு.ச நிர்வாகிகள் ஆனந்தன், முத்துகுமார், சீனிவாசன், அமிர்தராஜ், சந்திரன், ரகுராம், சிவசண்முகம், கணேஷ், பாண்டியன், உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    முடிவில் ஊட்டி நகர ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் பிரபு சகாயநாதன் நன்றி கூறினார்.

    • மருத்துவ முகாமை சுற்றுலாதுறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
    • முகாமில் ரத்த அழுத்தம், கல்லீரல், கணையம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஊட்டி,

    கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, குன்னூர் நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. இலவச இருதயம் , கல்லீரல் , கணையம் மற்றும் பொதுமருத்துவ முகாம் சி.எஸ்.ஐ வெஸ்லி சர்ச் மண்டபத்தில் நடந்தது.

    நீலகிரி தி.மு.க. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை தாங்கினார். நகர இளைஞர் அணி அமைப்பாளர் பத்மநாபன் வரவேற்றார். மருத்துவ முகாமை சுற்றுலாதுறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா, மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பரமேஸ்குமார், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலாகேத்ரின், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதகத்துல்லா, செல்வம், உதயத்தேவன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் ரத்த அழுத்தம், கல்லீரல், கணையம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்.நிகழ்ச்சியில், தலைமை பேச்சாளர் ஜாகிர் உசேன், நகர அவைத்தலைவர் தாஸ், நகர துணை செயலாளர் முருகேசன், வினோத் மாவட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், சார்லி மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் விஜயராஜ், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சையது மன்சூர் சாதிக் பாட்சா, செல்லின், பிரவீன், மாணவரணி துணை அமைப்பாளர் ஹரி, கார்த்திக், தினேஷ், விவேக், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி கிளை செயலாளர்கள் நந்தகுமார், சந்திப் குமார், சண்முகம், ஆறுமுகம், ஜாகீர் ரகீம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எல்லை கிராமங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் சென்று டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • தொட்டிகளில் நீண்டநாட்களாக தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்ற வலியுறுத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    கேரளா மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பொதுமக்கள் உள்ளாகினர். டெங்குவால் இறப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், டெங்கு காய்ச்சலை தடுக்கவும், நோய் பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணியிலும் கேரளா மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், கர்நாடகா மாநிலத்திலிருந்து கூடலூர் வந்த ஒருவருக்கும், கேரளாவிலிருந்து வந்த ஒருவருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக எல்லையில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    எல்லை கிராமங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் சென்று டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் டெங்கு நோய்களை பரப்பும் கொசுக்கள் மற்றும் புழுக்களை அழிக்க, திறந்த வெளி தண்ணீர் தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொட்டிகளில் நீண்டநாட்களாக தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்ற வலியுறுத்தி வருகின்றனர்.

    இது குறித்து நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலுசாமி கூறும்போது:-நீலகிரி மாவட்டத்தில் யாருக்கும் இதுவரை டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லைகளில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. டெங்கு நோய் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. யாரேனும் டெங்கு அறிகுறிகளுடன் உள்ளனரா? என சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    டெங்கு நோய்களை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்கள் மற்றும் லார்வாக்களை அழிக்க மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊட்டி சிறப்பு மலை ரெயில் சேவை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஜூலை 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ெரயில்வே அறிவி த்துள்ளது.
    • ஆன்லைனில் முன்பதிவு செய்து பதிவு செய்து பயணம் செய்யலாம்.

    ஊட்டி,

    ஊட்டி சிறப்பு மலை ரெயில் சேவை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஜூலை 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ெரயில்வே அறிவி த்துள்ளது.

    இதுகுறித்து தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    உலக புகழ்பெற்ற ஊட்டி மலை ரெயில் தினந்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு ஊட்டி சென்ற டையும். ஊட்டி கோடை சீசனையொட்டி சுற்றுலா ப்பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் கடந்த ஒரு மாதமாக சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் சேவை ஜூன் 30-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில், கோடை சீசன் முடிவடைந்த நிலையிலும், சுற்றுலா ப்பயணிகள் தொடர்ந்து மலை ரெயிலில் பயணி ப்பதால் அவர்களின் வசதி க்காக சிறப்பு மலை ரெயில் சேவை ஜூலை 30-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கி ழமைகளில் இயக்கப்பட உள்ளது.

    இதன்படி, ஜூலை 1-ந் தேதி முதல் சனிக்கிழமை களில் மேட்டுப்பாளை யத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் மலை ரெயில் பகல் 2.45 மணிக்கு ஊட்டி சென்றடையும். இதேபோல் ஜூலை 2-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கி ழமைகளில் ஊட்டியில் இருந்து முற்பகல் 11.25 மணிக்குப் புறப்படும் மலை ரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

    தினசரி இயக்கப்படும் ஊட்டி மலை ரெயிலுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதுபோல, இந்த சிறப்பு ரெயிலுக்கும் (வண்டி எண். 06171, 06172) ஆன்லைனில் முன்பதிவு செய்து பதிவு செய்து பயணம் செய்யலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாவட்ட அளவி லான வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    • நீலகிரி மாவட்ட த்திற்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய சிறிய பஸ்களும், 62 பஸ்களை சீரமைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவல கத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாவட்ட அளவி லான வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்கா ணிப்பு குழு கூட்டம் ஆ.ராசா எம்.பி. தலைமை யில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகி யோர் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள காரண த்தினால் 6 வட்டங்களில் மழைக்கா லங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகளிலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கு ம்பட்சத்தில் சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண்சரிவை உடனடியாக சரி செய்யும் வகையில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் போதுமான ஜே.சி.பி. எந்திரம், பவர்ஷா ஆகியவ ற்றையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு த்துறை சார்பில் ஆம்பு லன்ஸ் வசதி, மருத்துவக்கு ழுவினர், மருந்து இருப்பு போன்ற வற்றையும் தயார்நி லையில் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் மின்சார வாரிய த்தின் மூலம் மின்கம்பங்கள், டிரா ன்ஸ்பார்மஸ் போன்ற மின்சாதனங்கள் ஏதேனும் பேரிடர் ஏற்படும் நேரத்தில் தங்குதடையின்றி மின்சாரம் வழங்க போதுமான பணி யாளர்களுடன் தயாராக இருக்க வேண்டும்.

    சம்பந்தப்பட்ட அலு வலர்கள் நிவாரண முகா ம்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான உணவு ப்பொருட்கள் கூடுதலாக இருப்பில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் மேலா ண்மைத்துறை சார்பில் முதல்நிலை மீட்பாளர்க ளுக்கு பயிற்சிகள் அளி க்கப்பட வேண்டும்.

    நோடல் அலுவலர்கள் முன்கூட்டியே மிக அபாய கரமான பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். நகராட்சி மற்றும் நெடுஞ்சா லை பகுதிகளில் உள்ள கல்வெட்டுகளை தூர்வார வேண்டும். மண்சரிவு ஏற்ப டும் பகுதிகளின் அருகில் முன்எச்சரிக்கை நட வடிக்கையாக மணல் மூட்டைகள் வைத்திருக்க வேண்டும். அபாயகரமான மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில் மலைவாழ் மக்கள் பெருமளவில் வாழுகின்ற பகுதியில் போதுமான போக்குவரத்து, சாலை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இயற்கை இட ர்பாடுகளால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட தயார் நிலையில் இருக்க வேண்டும். நீலகிரி மாவட்ட த்திற்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய சிறிய பஸ்களும், 62 பஸ்களை சீரமைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

    • சுற்றுலா பயணி களும் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
    • தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி,

    குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டி நகரின் நுழைவு வாயில் சேரிங்கிராஸ் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒரு மாத காலமாக கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் கழிவுநீர் வழிந்து ஓடுகின்றது. இதன் அருகில் கண் ஆஸ்பத்திரியும் செயல்பட்டு வருகிறது. வயதானவர்களும் சிகிச்சைக்காக வருபவ ர்களும் மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஸ்பத்திரி பின்புறம் கழிவு நீர் தேங்கி செடிகளுக்கு உரமாக நிற்கின்றது.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. மேலும் போக்குவரத்து போலீஸ் துறையினர் அதற்கான தடுப்பை வைத்து போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

    ஆனால் பாதசாரிகள் மீதும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் மீதும் வாகனங்கள் செல்லும் பொழுது கழிவுநீர் தெளித்து வருகிறது. இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது. இதன் கார ணமாக பொது மக்க ளும், சுற்றுலா பயணி களும் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு ள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் துரிதமாக செயல்பட்டு கழிவுநீர் கால்வாயில் அடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் கலந்து கொண்டார்

    ஊட்டி,

    நீலகிரிமாவட்டம் ஜெகதளா ஊர் மக்களின் அழைப்பை ஏற்று ஜெகதளா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாலிங்கேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் கலந்து கொண்டார்.

    அவருக்கு ஊர் தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி ஸ்ரீ மாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் கப்பச்சி வினோத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி செயலாளர் போலன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குருமூர்த்தி, குன்னூர் நகர் செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர் கேத்தி ராஜு, வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் ஜெய் என்ற ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு குடியி ருப்பு பகுதிகளிலும் கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு அறிக்கைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த ப்பட்டது.
    • மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து, பேச்சு திறன், வாசிப்பு திறன், கற்பனை திறன், ஓவியத் திறன் போன்ற பல்வேறு திறன்கள் அதிகரி த்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 12 ஆயிரத்து 665 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருவதாக கலெக்டர் அம்ரித் தெரிவி த்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    கொரோனா பெருந்தொ ற்றால் மாணவா்களின் கற்றலில் ஏற்பட்ட இடை வெளியை சரி செய்வத ற்காக தமிழக அரசு இல்லம் தேடி கல்வி என்ற திட்ட த்தை பள்ளி கல்வி துறை மூலம் 2021 அக்டோபா் 27-ந்தேதி தொடங்கியது. இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடியி ருப்பு பகுதிகளிலும் கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு அறிக்கைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த ப்பட்டது.

    இதனால் மாவட்டம் முழுவதும் 3,737 தன்னாா்வலா்கள் இணைய வழியில் பதிவு செய்திருந்த னா். இவா்களில் 2,108 தன்னாா்வலா்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பரிந்துரை செய்ய ப்பட்டு இவா்களுக்கு உளவியல், கணினி வழித் தோ்வு மற்றும் குழுக் கலந்தாய்வு பயிற்சி அளிக்கப்பட்டு 1,814 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் வடி வமைக்கப்பட்ட பாடத்தை கையாள பயிற்சி பெற்ற வல்லுநா் குழுவால் பயிற்சி வழங்கப்பட்டது. அந்தந்த மையங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் பணியமா்த்த ப்பட்டனா்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 1,214 தன்னாா்வலா்கள் கல்வி பணியாற்றி வருகின்றனா். மேலும், மாணவா்களின் வகுப்பு அடிப்படையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்க நிலை தன்னா ா்வலா்களும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உயா் தொடக்க தன்னாா்வ லா்களும் மாண வா்களின் இல்லங்களுக்கு அருகி லேயே தினசரி 1 முதல் 2 மணி நேரம் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வரு கின்றனா். இதன் அடிப்ப டையில், நீலகிரி மாவட்ட த்திலுள்ள 4 ஒன்றியங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொடக்க நிலையில் 7,652 மாணவா்க ளும், உயா்தொடக்க நிலையில் பயிலும் 5,013 மாணவா்க ளும் என மொத்தம் 12 ஆயிரத்து 665 மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகி ன்றனா்.

    இத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து, பேச்சு திறன், வாசிப்பு திறன், கற்பனை திறன், ஓவியத் திறன் போன்ற பல்வேறு திறன்கள் அதிகரி த்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வீடுகள் மற்றும் வாழ்வாதாரம் கிடைக்க கடந்த 27 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறது.
    • 50 கள ஒருங்கிணைப ்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் எய்ட் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழகத்தின் பின்தங்கிய மற்றும் பழங்குடி இன மக்களுக்கு கல்வி, சுகாதாரம், குறைந்த விலையில் வீடுகள் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவை கிடைக்க கடந்த 27 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறது.

    தமிழ், கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களில் குழந்தைகளின் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதில் தமிழகத்தி லுள்ள பெரும்பான்மை யான பள்ளிகளில் செய ல்பட்டு வருகிறது. மேலும் எய்ட் இந்தியாவின் ஹட்ஸ் டு ஹோம்ஸ் திட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட, மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடுகளை கட்டி கொடுத்து வருகிறது. ஏழ்மையான குடும்பங்க ளின் வாழ்க்கையை மேம்ப டுத்து வதற்கான தொலை நோக்கு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை விவாதி க்கவும், மாதிரி கிராம திட்டத்தினை நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கவும் ஜூன் மாதம் 25, 26 ஆகிய நாட்களில் கோத்தகிரியில் 50 கள ஒருங்கிணைப ்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    எய்ட் இந்தியாவின் தொண்டு நிறுவன இணை செயலாளர் தாமோதரன் கூறுகையில், இந்த பட்டறை யில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பழங்குடியின கிராமங்களில் உள்ள முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கமாக கொண்ட மாதிரி கிராம திட்டத்தை தொடங்குகின்றோம். தமிழ்நாட்டின் பல கிராமங்களில் ஏழ்மையான குடும்பங்களுக்கு 550 வீடுகளை கட்டி கொடுத்து ள்ளோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார திட்டங்கள், ஆரோகியத்திற்காக வீட்டு தோட்டம் அமைப்பது போன்ற நல்ல திட்டங்களை பல கிராமங்களுக்கு விரிவு ப்படுத்த திட்டமிட்டுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

    எய்ட் இந்தியா அமைப்பின் செயலாளர் பாலாஜி சம்பத் கூறுகையில், 26 ஆண்டுகளுக்கும் மேலாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தி ற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த மாதிரி கிராம திட்டத்தின் மூலம், மிகவும் பின்தங்கிய குடு ம்பங்களை மேம்படுத்தவும், இந்த கிராமங்களில் உள்ள ஏழை மக்கள் மற்றும் குழந்தை களின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என நம்புவதாக கூறினார்.

    ×