என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் பாராட்டு விழா
- தூனேரி அகலாரில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
- இந்த மருத்துவ முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு தூனேரிஅகலாரில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவமுகாமில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்து கொண்டார்.
இந்த மருத்துவ முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ஏற்பாட்டில் மதிய உணவும் வழங்கபட்டது. கிராம ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்களால் படுக பாரம்பரிய அவரை குழம்பு நெய் மணக்க மணக்க அனைவருக்கும் உணவு பறிமாறப்பட்டது.
மதிய உணவை தயாரித்த ஊர் பெரியவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் பொன்னாடை அணிவித்து நன்றி கூறினார். சிறப்பான பங்களிப்பை வழங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர் மற்றும் நந்தகுமார், தூனேரி ஊராட்சி தலைவர் செயலர் கார்த்தி ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
ஊர் பெரியவர்கள் மற்றும் பொது மக்கள் ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயனுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயனின் கார் டிரைவர் சிவா செய்திருந்தார்.






