search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் போலீசார் விழிப்புணர்வு பேரணி
    X

    கோத்தகிரியில் போலீசார் விழிப்புணர்வு பேரணி

    • போதை பொருள் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தி கொண்டு மாணவ மாணவிகள் கோஷங்களை எழுப்பினர்.
    • மாணவ-மாணவிகள் போதை பொருளை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    கோத்தகிரி,

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் கோத்தகிரி போலீஸ் துறையினர் சார்பில் கோத்தகிரியில் பேரணி நடந்தது.

    இந்த பேரணியில் கோத்தகிரி சுற்று வட்டார பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போதை பொருள் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தி கொண்டு கோஷங்களை எழுப்பினர் . கோத்தகிரி காந்திமைதானத்தில் தொடங்கிய பேரணி பஸ் நிலையம், மார்க்கெட் வழியாக கோத்தகிரி நேரு பூங்காவில் முடிவடைந்தது.

    பின்னர் மாணவ-மாணவிகள் போதை பொருளை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுமான்கான், யாதவக்ரிஷ்ணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×