என் மலர்
நீங்கள் தேடியது "Sri Malingeswarar Temple Kumbabhishekam"
ஊட்டி,
நீலகிரிமாவட்டம் ஜெகதளா ஊர் மக்களின் அழைப்பை ஏற்று ஜெகதளா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாலிங்கேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் கலந்து கொண்டார்.
அவருக்கு ஊர் தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி ஸ்ரீ மாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் கப்பச்சி வினோத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி செயலாளர் போலன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குருமூர்த்தி, குன்னூர் நகர் செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர் கேத்தி ராஜு, வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் ஜெய் என்ற ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






