என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ காப்பீட்டு"

    • அடிப்படை மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • மருத்துவ முகாமில் சுமார் 2000 ஏழை, எளிய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் தூனேரி ஊராட்சி அகலார் பகுதியில் உள்ள தூனேரி அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடந்தது.

    மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற பன்னோக்கு சிறப்பு மருத்துவமுகாமில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்

    இந்த முகாமில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அடிப்படை மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உயர் சிகிச்சை தேவை பட்டவர்களுக்கு உயர்சிகிச்சை பரிந்துரைக்கபட்டது.

    பொது மருத்துவர், அறுவைசிகிச்சை மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர், குழந்தகள் நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர், இருதய நோய் மருத்துவர், சித்த மருத்துவர், மனநல மருத்துவர் என அனைத்து மருத்துவர்களும் கலந்து கொண்டு அனைத்து பிரச்சினைகளுக்கும் மருத்துவம் பார்த்தது மிக சிறப்பாகும்

    இந்த மருத்துவ முகாமில் சுமார் 2000 ஏழை, எளிய பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான சிகிச்சையை தங்கள் பகுதிலேயே பெற்றது தனிசிறப்பாகும். அனைவருக்கும் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கபட்டது.

    மாவட்ட ஊராட்சிதலைவர் பொன்தோஸ், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மருத்துவ கல்லூரி முதல்வர் மனோகரிரா மசந்திரன், இணை இயக்குநர் பழனிசாமி, துணை இயக்குநர் பாலுசாமி, வட்டார மருத்துவஅலுவலர் முருகேசன், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், நந்தகுமார் ஆகியோர் மருத்துவ முகாமை ஒருங்கிணைத்தனர்.

    • பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் இல்லை.
    • ஜி.எஸ்.டி. வரிவிகிதம் 5, 12, 18, 28 என 4 அடுக்குகளாக உள்ள நிலையில், 35 சதவீதம் என்ற புதிய அடுக்கு உருவாகிறது.

    மருத்துவ காப்பீட்டு தொகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிவிதிப்பை குறைக்க வேண்டும் அல்லது ரத்துசெய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கோரிக்கை பற்றி ஆராய பீகார் மாநில துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி தலைமையில் மந்திரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 148 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதத்தை மாற்றி அமைப்பது பற்றியும் இக்குழு ஆராய்கிறது.

    இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 55-வது கூட்டம் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மிரில் நடக்கிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குகிறார். உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி மந்திரிகள் கலந்துகொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில், சாம்ராட் சவுத்ரி தலைமையிலான மந்திரிகள் குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில், 148 பொருட்களுக்கு வரிவிகிதத்தை மாற்றி அமைப்பது பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.

    மருத்துவ, ஆயுள் காப்பீட்டு தொகைக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது பற்றியும் விவாதிக்கப்படும்.

    பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் இல்லை. அத்தகைய சூழ்நிலையில், விமான எரிபொருளை மட்டும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. விமான கட்டண உயர்வுக்கு விமான எரிபொருளின் விலையே முக்கிய காரணமாக இருப்பதால், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.

    அதற்கான காலக்கெடு பற்றியும், மாநிலங்களிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்துவது பற்றியும் முடிவு செய்யப்படுகிறது.

    காப்பீட்டை பொறுத்தவரை, கால அடிப்படையிலான ஆயுள் காப்பீட்டு தொகைக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க கடந்த மாதம் நடந்த மந்திரிகள் குழு கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

    அத்துடன், மூத்த குடிமக்கள் செலுத்தும் மருத்துவ காப்பீட்டு தொகைக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டது. மூத்த குடிமக்கள் அல்லாத தனிநபர்கள் ரூ.5 லட்சம்வரை 'கவரேஜ்' கொண்ட மருத்துவ காப்பீட்டுக்கு செலுத்தும் பிரீமியம் தொகைக்கு விலக்கு அளிக்கலாம் என்றும், ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்ட 'கவரேஜ்' கொண்ட மருத்துவ காப்பீட்டுக்கான தொகைக்கு தற்போதைய 18 சதவீத ஜி.எஸ்.டி. நீடிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.

    இந்த பரிந்துரைகள் மீது ஜி.எஸ்.டி. கவுன்சில் இன்று முடிவு எடுக்கிறது.

    மேலும், கார்பனேற்றப்பட்ட பானங்கள், சிகரெட், புகையிலை மற்றும் அதுதொடர்பான பொருட்கள் ஆகியவை மீது தற்போது 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு வருகிறது. அதை 35 சதவீதமாக உயர்த்தலாம் என்று மந்திரிகள் குழு பரிந்துரைத்துள்ளது. இதுபற்றியும் இன்று விவாதிக்கப்படுகிறது.

    ஜி.எஸ்.டி. வரிவிகிதம் 5, 12, 18, 28 என 4 அடுக்குகளாக உள்ள நிலையில், 35 சதவீதம் என்ற புதிய அடுக்கு உருவாகிறது.

    வரிவிகிதம் மாற்றி அமைக்கப்படும் 148 பொருட்களில் ஆயத்த ஆடைகளும் அடங்கும். தற்போது, ரூ.1,000 வரை மதிப்புடைய ஆயத்த ஆடைகள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இனிமேல், ரூ.1,500 வரை மதிப்புடைய 5 சதவீத ஜி.எஸ்.டி.யும், ரூ.1,500 முதல் ரூ.10 ஆயிரம்வரை மதிப்புடைய ஆயத்த ஆடைகளுக்கு ரூ.18 சதவீத ஜி.எஸ்.டி.யும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மதிப்புடைய ஆடைகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி.யும் விதிக்க மந்திரிகள் குழு பரிந்துரைத்துள்ளது.

    ரூ.15 ஆயிரத்துக்கு மேல் மதிப்புடைய ஷூக்களுக்கான வரியை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்த பரிந்துரைத்துள்ளது. ரூ.25 ஆயிரத்துக்கு மேல் மதிப்புடைய கைக்கெடிகாரங்கள் மீதான வரிவிகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்த பரிந்துரைத்துள்ளது.

    கேனில் அடைக்கப்பட்ட 20 லிட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட குடிநீர் மீதான வரிவிகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கவும், ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான சைக்கிள் மீதான வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கவும், பயிற்சி நோட்டு புத்தகங்கள் மீதான வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கவும் மந்திரிகள் குழு பரிந்துரைத்துள்ளது.

    உணவு வினியோக நிறுவனங்களான ஸ்விக்கி, சொமட்டோ ஆகியவை மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    பயன்படுத்தப்பட்ட மின்சார கார்கள் மற்றும் சிறியரக பெட்ரோல், டீசல் கார்கள் விற்பனை மீதான வரியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்துவது பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

    ×