என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • தமிழகம் முழுவதும், தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது.
    • இந்த தேர்விற்காக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,409 பேர் விண்ணப்பம் செய்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும், தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது.

    தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் இந்த போட்டித் தேர்வு நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் இந்த போட்டித் தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்விற்காக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,409 பேர் விண்ணப்பம் செய்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர். ஆசிரியர் தேர்வு வாரிய விதிமுறைப்படி தேர்வு நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தை, மாவட்ட கலெக்டர் டாக்டர். உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 4 மையங்களில் நடைபெற்ற தேர்வில், மொத்தம் 1,196 தேர்வர்கள் பங்கேற்றனர். 213 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

    • மேல்சாத்தம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படித்து கொண்டிருந்த இவர் கடந்த 1 மாதமாக கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
    • இந்நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ரீனாவை காணவில்லை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே சிங்கிலிபட்டி பகுதியை சேர்ந்தவர் வீரமணி (45). இவரது மனைவி நல்லம்மாள் (38). இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவரது மகள் ரீனா (19).

    மேல்சாத்தம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படித்து கொண்டிருந்த இவர் கடந்த 1 மாதமாக கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ரீனாவை காணவில்லை. இதையடுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் ரீனாவை தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து நல்லம்மாள் வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி ரீனாவை தேடி வருகின்றனர்.

    • போலீஸ் துறை சார்பில் மன மகிழ் மன்ற மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை சரக ஐ.ஜி.பவானீஸ்வரி, சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    ராசிபுரம்:

    போலீஸ் துறை சார்பில் மன மகிழ் மன்ற மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற சேலம், நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ராசிபுரம் அருகே உள்ள வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களில் நடைபெற்றது.

    பரிசளிப்பு

    இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை சரக ஐ.ஜி.பவானீஸ்வரி, சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    மேலும் சேலம் மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசாருக்கு பரிசு கோப்பை களையும், சான்றிதழ்களையும் வழங்கினர். இதில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார் (ராசிபுரம்), முத்துகிருஷ்ணன், நாமகிரி பேட்டை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் செயலாளர் முத்துவேல் ராமசாமி, தொழிலதிபர் பாலசுப்பிர மணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஐ.ஜி. பவானீஸ்வரி பேசுகையில் பள்ளி மாணவ, மாணவிகள் நல்ல ஒழுக்கத்துடன் இருந்தால்தான் குடும்பமும் நாடும் நன்றாக இருக்கும். நாடு நன்றாக வளர்ந்தால் அனைத்து துறையும் வளர்ச்சி அடையும்.

    காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் வழங்கப்பட்டு வருகிறது. படிப்பின் முக்கியத்துவத்தால் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர் என்றார்.

    டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி பேசும்போது, மாணவ, மாணவிகள் தீய பழக்கங்களில் இருந்து விடுபட மனமகிழ் மன்றம் சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. தாய், தந்தை இல்லாத குழந்தைகளை பாதுகாக்க போலீசார் தயாராக உள்ளனர் என்றார்.

    • ஜேடர்பாளையம் கரப்பாளை யத்தை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த கரும்பு ஆலையில் பணியாற்றிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் கரப்பாளை யத்தை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த கரும்பு ஆலையில் பணியாற்றிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

    இதனை தொடர்ந்து புதுப்பாளையத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். தொடர் வன்முறையால் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகளின் தோட்டத்தில் பாக்குமரங்கள், வாழை மரங்கள், மரவள்ளி பயிர்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.

    நிவாரண உதவி

    இந்த நிலையில் கொலை யுண்ட இளம்பெண் குடும்பத்தாருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிவாரண தொகையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் கலெக்டர் டாக்டர் உமா ஆகியோர் கபிலர்மலை யூனியன் அலுவலகத்தில் வழங்கினார்கள்.

    மேலும் அவரது 2 குழந்தைகளுக்கு வருங்கால வைப்பு நிதியாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்கள். வாழை, பாக்கு மரம் மற்றும் டிராக்டர் எரித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நாமக்கல் எம்.பி. சின்ராஜ், தி.மு.க. நாமக்கல் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகந்தி, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராஜ், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரிஜா, புஷ்பராஜன், பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர்.சோமசேகர், துணைத்தலைவர் முருகவேல், பிலிக்கல் பாளையம் ஊராட்சி தலைவர் மணிமேகலை லோகநாதன், அ. குன்னத்தூர் ஊராட்சி தலைவர் எம்.ஜி.ஆர் என்கிற ரமேஷ், ஆனங்கூர் ஊராட்சி தலைவர் மோகன்ராஜ், வடகரையாத்தூர் ஊராட்சி தலைவர் மஞ்சுளா குணசேகரன் மற்றும் ஊராட்சி செயலர்கள் சசிகுமார், பொன்னுவேல், ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமாவரம்புதூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 2- ந் தேதி உண்டியல் உடைத்து பணம்கொள்ளை அடிக்கப்பட்டன.
    • இந்த திருட்டு குறித்து நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை ஆகியோர் தீவிர வீசாரணைமேற்கொண்டு வந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அன்புநகரில் உள்ள பகவதி அம்மன் கோவில், ராமாவரம்புதூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 2- ந் தேதி உண்டியல் உடைத்து பணம்கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த திருட்டு குறித்து நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை ஆகியோர் தீவிர வீசாரணைமேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சிசிடிவி ஆதாரம், மற்றும் கோவில் அருகே பொதுமக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இன்று காலை நாமக்கல் கணேசபுரத்தில் பெருச்சாளி என்ற பிரவீன்பாண்டியனை (22) போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரவீன்பாண்டியன் பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவரிடம் போலீஸார் தீவிர வீசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கரும்புகை எழும்பியது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து எருமப்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் உற்பத்தி செய்யும் ஆலை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யும் தேங்காய் நார்களை இருப்பு வைக்க குடோன் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குடோனில் இன்று காலை 9 மணி அளவில் தேங்காய் நார்கள் திடீரென தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் ஆலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கரும்புகை எழும்பியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக எருமப்பட்டி, நாமக்கல் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வாகனங்களில் கொண்டு வந்த தண்ணீரை குடோன் முழுவதும் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் சேதமானதாக கூறப்படுகிறது.

    இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து எருமப்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெங்கடேஷ் (வயது 54). இவர் ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
    • அண்ணாதுரையின் மனைவி வெண்ணிலா கண்டக்டர் வெங்கடேசை தாக்கியதாக கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    திருச்செங்கோடு அருகே உள்ள புள்ளாக் கவுண்டம்பட்டி சாணார்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 54). இவர் ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காளிப்பட்டிக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த பஸ்சில் ராசிபுரம் டவுன் வி.நகர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, அவரது மனைவி வெண்ணிலா(33) மகள் இசை ராணி(17) ஆகியோர் பயணம் செய்துள்ளனர்.

    அண்ணாதுரை பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்த தாக கூறப்படுகிறது. அதை பார்த்த கண்டக்டர் வெங்கடேஷ் அண்ணாதுரையை படிக்கட்டில் இருந்து உள்ளே வரும்படி அழைத்துள்ளார். உள்ளே வந்த அண்ணாதுரை கண்டக்டர் வெங்கடேஷ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதைப் பார்த்த அண்ணாதுரையின் மனைவி வெண்ணிலா கண்டக்டர் வெங்கடேசை தாக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி கண்டக்டர் வெங்கடேஷ் வெண்ணிலா மீது ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதேபோல் வெண்ணிலாவும் கண்டக்டர் வெங்கடேஷ் மீது புகார் அளித்தார்.

    இருதரப்பினரும் ராசிபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். இரு தரப்பினரும் அளித்த புகார்களின் பேரில் போலீசார் தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல்லை மையமாக கொண்டு லாரி உரிமையாளர்கள் சங்கமான நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
    • தேர்தல் வாக்குப்பதிவு காலை காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்கு பதிவு நடைபெற உள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல் தாலுக்கா லாரி உரி மையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறன.

    தேர்தல்

    நாமக்கல்லை மையமாக கொண்டு லாரி உரிமையாளர்கள் சங்கமான நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் மொத்தம் 4,445 உறுப்பினர்கள் உள்ளனர்.

    தேர்தல் வாக்குப்பதிவு காலை காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்கு பதிவு நடைபெற உள்ளன.

    பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தலைவர், செயலாளர், பொருளாளர், உதவி தலைவர், உதவி செயலாளர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மாலை எண்ணப்படும். தொடர்ந்து நாளை 11ந் தேதி காலை செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு கள் அறிவிக்கப்படஉள்ளன.

    இந்த நிலையில் நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தற்போதைய செயலாளர் அருள் தலைமையில் ஒரு அணியினரும், தற்போதைய உதவித் தலைவர் சுப்புரத்திணம் தலைமையில் ஒரு அணியினரும் புதிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

    காலை 11 மணி நிலவரப்படி 1800 வாக்குகள் பதிவாகின. சங்க தேர்தல் நாமக்கல் பகுதி லாரி உரிமையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காவேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (45). இவரது மனைவி குப்பம்மா (40). இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.
    • வளையபட்டி-தூசூர் சாலையில் உள்ள குருப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென ஓடி வந்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா பீமநாயக்கனூர் காவேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (45). இவரது மனைவி குப்பம்மா (40). இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் வெங்கடேஷ் வளையபட்டி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். வளையபட்டி-தூசூர் சாலையில் உள்ள குருப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென ஓடி வந்துள்ளது. இதை பார்த்த வெங்கடேஷ் பிரேக் போட்டதில் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வெங்கடேஷின் மனைவி குப்பம்மா மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வடமாநிலங்களில் இருந்து கூலித் தொழிலாளிகளை அழைத்து வந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணியமர்த்தும் புரோக்கர் வேலை செய்து வந்தார்.
    • இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையத்தில் உள்ள தோட்டத்தல் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    பரமத்திவேலூர்:

    அசாம் மாநிலத்தை சேர்ந்த வர் சிம்பு ஜாபர்(26). இவர் வடமாநிலங்களில் இருந்து கூலித் தொழிலாளிகளை அழைத்து வந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணியமர்த்தும் புரோக்கர் வேலை செய்து வந்தார்.

    கொலை

    இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையத்தில் உள்ள தோட்டத்தல் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுதொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் அளித்த

    புகாரின் பேரில், பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கமிஷன் பிரச்சினை

    இதில் கோழிப்பண்ணை களுக்கு கூலி ஆட்களை அனுப்பி வைப்பத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரஜ்மன் (21), சாம்லுராம் (21) ஆகியோருக்கும், சிம்பு ஜாபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்து. மேலும் கமிஷன் பிரச்சினையில் இருவரும் சிம்பு ஜாபரை படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அறிவழகன் வாதாடி வந்தார்.

    ஆயுள்தண்டனை

    இந்த நிலையில் அந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் ரஜ்மன், சாம்லுராம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இருவரும் ேநற்று இரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனிடையே வழக்கு விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டினார்.

    • பரமத்தி வேலுார் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் உணவு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வகுமார் தணிக்கை மேற்கொண்டார்.
    • தற்பொழுது பரவி வருவ தால் காய்ச்சிய குடிநீரை வாடிக்கையாளா்க ளுக்கு வழங்க அறிவுரை வழங்கினார்.

    பரமத்திவேலுார்:

    உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத் துறை ஆணையா் உத்தரவின் பேரில், நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா அறிவுரையின் பேரில் பரமத்தி வேலுார் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் உணவு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வகுமார் தணிக்கை மேற்கொண்டார்.

    பருவநிலை மாற்றத்தினால் வடிக்கையாளா்களுக்கு வைரஸ் காய்ச்சல், தற்பொழுது பரவி வருவ தால் காய்ச்சிய குடிநீரை வாடிக்கையாளா்க ளுக்கு வழங்க அறிவுரை வழங்கி னார்.

    தொடர்ந்து பழைய எண்ணையை மீண்டும் மீண்டும் பொறிப்ப தற்கு பயன்படுத்திய 2 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மழைக்காலம் முடியும் வரை தொடர் ஆய்வுகள் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

    • திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட 8 போலீஸ் நிலையங்களுக்கான ஆய்வு பணி திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
    • சேலம் சரக டி.ஐ.ஜி.ராஜேஸ்வரி ஆய்வு பணி மேற்கொண்டார், இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு இமய வரம்பன் மற்றும் அனைத்து இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட 8 போலீஸ் நிலையங்களுக்கான ஆய்வு பணி திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    ஆய்வு

    சேலம் சரக டி.ஐ.ஜி.ராஜேஸ்வரி ஆய்வு பணி மேற்கொண்டார், இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு இமய வரம்பன் மற்றும் அனைத்து இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு நகரம், ஊரகம், எலச்சிபாளையம், மல்ல சமுத்திரம், மொளசி, பள்ளிபாளையம் வெப்படை ஆகிய போலீஸ் நிலையங்களை தணிக்கை செய்யும் விதமாக சேலம் சரக டி.ஐ.ஜி.ராஜேஸ்வரி ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் மற்றும் 8 இன்ஸ்பெக்டர் களிடம் ம் போலீஸ் நிலைய பதிவேடுகளையும் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

    ×