என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருட்டு வழக்கில் வாலிபர் கைது
- ராமாவரம்புதூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 2- ந் தேதி உண்டியல் உடைத்து பணம்கொள்ளை அடிக்கப்பட்டன.
- இந்த திருட்டு குறித்து நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை ஆகியோர் தீவிர வீசாரணைமேற்கொண்டு வந்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் அன்புநகரில் உள்ள பகவதி அம்மன் கோவில், ராமாவரம்புதூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 2- ந் தேதி உண்டியல் உடைத்து பணம்கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த திருட்டு குறித்து நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை ஆகியோர் தீவிர வீசாரணைமேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சிசிடிவி ஆதாரம், மற்றும் கோவில் அருகே பொதுமக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இன்று காலை நாமக்கல் கணேசபுரத்தில் பெருச்சாளி என்ற பிரவீன்பாண்டியனை (22) போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரவீன்பாண்டியன் பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவரிடம் போலீஸார் தீவிர வீசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






