என் மலர்
நாமக்கல்
- நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
- இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கி ணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்ப னைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த 6-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.30-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு, ரூ. 4.35 ஆனது. பின்னர் 9-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.40 ஆனது. மீண்டும் 10-ந் தேதி 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டை விலை ரூ. 4.50 ஆனது. 11-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.55 ஆனது.இந்த நிலையில், மாலையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்த ப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.60 ஆக நிர்ணயி க்கப்பட்டது.
கோழிவிலை
பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 86 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
- தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
- ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் திடீர் ஆய்வு நடத்தினார்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரிக்கும் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதி யில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் திடீர் ஆய்வு நடத்தினார்.
ஆய்வில் சுகாதாரமற்ற முறையில் ஓட்டல்களில் உணவு தயாரித்து விற்பது தெரியவந்தது.
இது தொடர்பாக ஓட்டல் கடைக்கு நோட்டீஸ் வழங்கி சுகாதாரமற்ற உணவுகளை பறிமுதல் செய்து ரூ.2 ஆயி ரம் அபராதம் விதித்தார்.
மேலும் உணவு பாது காப்பு விதிமுறைப்படி உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என ஓட்டல் கடை மற்றும் பாஸ்ட் புட் உணவு தயாரிக்கும் கடை உரிமை யாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து பரமத்திவேலூர் பகுதி களில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரிக்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என உணவு பாது காப்பு துறை அலுவலர் செல்வக்குமார் தெரிவித்தார்.
- நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை 2-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது.
பரமத்திவேலூர்:
தமிழகத்தில் மணல் குவாரிகளில் சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை, திண்டுக்கல்லை சேர்ந்த தொழிலதிபர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் அமலாக்கத்துறையின் நேற்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
அதன்படி நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் அள்ளி அதனை சேமித்து வைக்கும் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான மணல் கிடங்கிலும் மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் அமலாக்கத்துறையை சேர்ந்த 10 அதிகாரிகள், 7 பேர் கொண்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையுடன் செவிட்டுரங்கன்பட்டிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மணல் கிடங்கு அலுவலகத்தில் திடீரென சோதனையை தொடங்கினர்.
இந்த சோதனையில் ஆற்றிலிருந்து எவ்வளவு மணல் அள்ளி வந்து சேமிக்கப்படுகிறது. அதில் எவ்வளவு மணல் விற்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் பதிவு மூலம் எவ்வளவு விற்பனை நடைபெற்று உள்ளது. அதற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது குறித்தும், அதற்கான ஆவணங்கள் முறையாக உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மோகனூர் மணல் கிடங்குக்கு மணல் அள்ளி கொண்டு வரும் ஒப்பந்தத்தை புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா என்பவரும், குவாரியில் உள்ள மணலை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரும் பெற்று உள்ளனர். இவர்கள் இருவரும் புதுக்கோட்டையை சேர்ந்த மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரனுக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று காலை அமலாக்கத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சோதனைக்கு வருவதை அறிந்த மணல் கிடங்கில் பணியாற்றி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், மணல் அள்ளும் பொக்லைன் எந்திர ஆபரேட்டர் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு வந்தபோது, அங்கு பணியில் இருந்தவர்களில் பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர் ஒருவர் மட்டுமே அலுவலகத்தில் இருந்தார். எனவே அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
பின்னர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சங்கீதா மணல் குவாரிக்கு வரவழைக்கப்பட்டு, அவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 2-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. சோதனையையொட்டி மணல் குவாரிக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
- குமாரபாளையம் கவுரி தியேட்டர் பகுதியில் நேற்று இரவு 7 வயது சிறுமி ஒருவர் சாலையில் அழுதபடி நடந்து வந்துள்ளார்.
- போட்டோ எடுத்து அனைத்து வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டார். பின்னர் ஒரு மணி நேரத்தில் இதனை கண்ட பெற்றோர் போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து நேரில் வந்தனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கவுரி தியேட்டர் பகுதியில் நேற்று இரவு 7 வயது சிறுமி ஒருவர் சாலையில் அழுதபடி நடந்து வந்துள்ளார். அதை கண்ட அப்பகுதி மக்கள் அந்த சிறுமியிடம் விபரம் கேட்க, அந்த சிறுமி எதுவும் பேசவில்லை.
போலீஸ் நிலையம்
உடனே அந்த சிறுமியை போலீஸ் நிலையத்திற்க்கு கொண்டு வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி விசாரித்தும் பலனில்லை. அந்த சிறுமி எதுவும் பேசவில்லை. உடனே போட்டோ எடுத்து அனைத்து வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டார். பின்னர் ஒரு மணி நேரத்தில் இதனை கண்ட பெற்றோர் போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து நேரில் வந்தனர்.
ஒப்படைப்பு
இன்ஸ்பெக்டர் விசார ணையில், நாராயண நகரில் வசிக்கும் பெற்றோர் செந்தில்குமார், பிரித்தா என்பதும், 7 வயது சிறுமியின் பெயர் பிரித்திகா என்பது தெரியவந்தது. விளையாடப் போகும் விஷயம் சம்பந்தமாக தாயார் திட்டியதாக தெரி கிறது. இதனால் கோபித்துக் கொண்டு வெளியில் வந்து விட்டார். இன்ஸ்பெக்டர் தவமணி எச்சரித்து, குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தார்.
- தமிழக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
- இதில் பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
நாமக்கல்:
தமிழக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 11 வயது பிரிவின் கீழ் நடந்த போட்டியில், குமாரபாளையம் அருகே தர்மதோப்பு, வாசுகி நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் சையத் பாசித் பங்கேற்று விளையாடி, 2-ம் பரிசு பெற்று சாதனை படைத்தார். இவருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. இவர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார். இவரை பள்ளியின் தலைமை ஆசிரியை நாகரத்தினம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜீனத், பி.டி.ஏ.தலைவர் தம்பி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் உள்பட பலர் வாழ்த்தினர்.
- குமாரபாளையத்தில் சின்னப்ப நாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்:
குமாரபாளையத்தில் சின்னப்ப நாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்றுமுன்தினம் கணபதி யாகத்துடன் தொடங்கிய விழா பின்னர் பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து பம்பை, மேள, தாளங்கள் முழங்க, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். மாலையில் யாக சாலை பூஜைகள் தொடங்கி நேற்று காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக் குழுவினர் மற்றும் கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்தனர்.
- வடிவேல் (45). மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
- கிழக்கு பெருமாபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த முட்டை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி ஒன்று வடிவேல் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், சிங்கிலிப்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி அருக்காணி(62). இவரது மகன் வடிவேல் (45). மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பரமத்தி வேலூர் அருகே உள்ள கீழ்சாத்தம்பூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக தனது தாய் அருக்காணியை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமரவைத்துக் கொண்டு பரமத்தி நோக்கி நாமக்கலில் இருந்து கரூர் செல்லும் பை-பாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். கிழக்கு பெருமாபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த முட்டை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி ஒன்று வடிவேல் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வடிவேலுவின் தாயார் அருக்காணி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்து மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
- பொத்தனூர் பேரூராட்சிக்கு ட்பட்ட பகுதியில் பரமத்திவே லூர்- ஜேடர்பா ளையம் செல்லும் நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.
- பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் பொருட்டு சாலையில் நடுப்பகுதியில் சிமெண்ட் மைய தடுப்பான் அமைக்க பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி மன்ற தலைவர் கருணாநிதியின் முயற்சியின் காரணமாக பொத்தனூர் பேரூராட்சிக்கு ட்பட்ட பகுதியில் பரமத்திவே லூர்- ஜேடர்பா ளையம் செல்லும் நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது பொது மக்களின் நலன் கருதியும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் பொருட்டு சாலையில் நடுப்பகுதியில் சிமெண்ட் மைய தடுப்பான் அமைக்க பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக ந வடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை த்துறை உதவி கோட்டப் பொறியாளர் பொத்தனூர் பேரூராட்சி மன்றத்தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தார் சாலை யின் நடுவில் தடுப்புகள் அமைத்து விபத்து களை தடுக்க நட வடிக்கை எடுத்த பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நன்றியினை தெரிவித்தனர்.
- மாசி பெரியண்ணசாமி, கன்னி மார் சுவாமிகளுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கும்பாபி ஷேகம் நடந்தது.
- அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடை பெற்றது.
நாமக்கல்:
பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு காவிரியின் வடகரையில் அரசமர விநாயகர், மாசி பெரியண்ணசாமி, கன்னி மார் சுவாமிகளுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கும்பாபி ஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடை பெற்றது.நேற்று மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு காலை நன் இடையாறு காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீராடி தீர்த்த குடம் எடுத்து வந்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து அரசமர விநாயகர், மாசி பெரியண்ணசாமி, கன்னிமார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது.மண்டல பூஜை 12 நாள் நிறைவு விழாவை முன்னிட்டு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- விதிமுறைகளை மீறி இந்த குடோன் செயல்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்தது.
- 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குடோனில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வளையப்பட்டி ரோடு கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கம் அருகே செவிட்டு ரங்கன்பட்டி பகுதியில் மணல் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.
இங்கு கூடுதல் விலைக்கு மணல் விற்கப்படுவதாகவும், நேரிடையாக மணல் விற்பனை செய்வதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தது. குறிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மணல் வழங்க வேண்டும். ஆனால் விதிமுறைகளை மீறி இந்த குடோன் செயல்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்தது.
இதையடுத்து இன்று காலை 9.30 மணி அளவில் 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குடோனில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையையொட்டி துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- பாஸ்ட் புட் கடைக்கு சென்று தான் வாங்கி சென்ற பிரியாணியில் வெட்டுக்கிளி இறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.
- டேவிட் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் 4 ரோடு அருகே கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பாஸ்ட்புட் உணவகம் நடத்தி வருகிறார்.
இங்கு பரமத்தியைச் சேர்ந்த டேவிட் (35) என்பவர் தனது வீட்டிற்கு சிக்கன் பிரியாணியை பார்சல் செய்து வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று பிரியாணியை பிரித்து சாப்பிட முயன்ற போது அதில் வெட்டுக்கிளி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உடனடியாக பரமத்திவேலூரில் உள்ள பாஸ்ட் புட் கடைக்கு சென்று தான் வாங்கி சென்ற பிரியாணியில் வெட்டுக்கிளி இறந்து கிடப்பதாக கூறியுள்ளார். ஆனால் பிரியாணி கடை உரிமையாளர் நீங்களாக வெட்டுக்கிளியை பிரியாணியில் போட்டு கொண்டு வந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து டேவிட் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடையே பேசி வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணி பார்சலை நீங்களே எடுத்துச் செல்லுங்கள் நீங்கள் உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் வழங்கி அதை சோதனை செய்யுங்கள் என அறிவுறுத்தினர்.
இதுகுறித்து பிரியாணி கடையில் இருந்த வாடிக்கையாளர் கூறியதாவது:-
பிரியாணியில் கிடந்த வெட்டுக்கிளி நன்றாக பிரியாணியில்தான் வெந்துள்ளது தெரிகிறது. சமைக்கும் அடுப்பிற்கு மேலே அதிக வெளிச்சம் கொண்ட எல்.இ.டி., பல்புகளை உபயோகிப்பதால் அதிக வெளிச்சத்தில் அங்கு வரும் பூச்சிகள், வெட்டுக்கிளிகள், மற்றும் பூச்சிகள் விழுந்தாலும் இவர்கள் அதை கவனத்தில் கொள்வதில்லை.
சாலைகளின் ஓரத்திலேயே அடுப்புகள் அமைத்து சமைப்பதால் ரோட்டில் செல்லும் வாகனங்களில் இருந்து வரும் மாசுக்கள் நிறைந்த புகை, தூசுகள், புழுதி, உணவுகளில் கலக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொள்ள வேண்டும் என கூறினர்.
- நாமக்கல் மண்டலத்தில் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
- இந்த நிலையில் நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த செப். 6ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.30-ல் இருந்து ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 9ந் தேதி முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டை விலை ரூ. 4.40 ஆனது. இந்த நிலையில் நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.இதை அனைத்து பண்ணையாளர்களுக்கு தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 88 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.






