நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை மேலும் 5 பைசா உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை மேலும் 5 பைசா உயர்வு
Published on

நாமக்கல்:

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தேசிய முட்டை ஒருங்கி ணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்ப னைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த 6-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.30-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு, ரூ. 4.35 ஆனது. பின்னர் 9-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.40 ஆனது. மீண்டும் 10-ந் தேதி 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டை விலை ரூ. 4.50 ஆனது. 11-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.55 ஆனது.இந்த நிலையில், மாலையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்த ப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.60 ஆக நிர்ணயி க்கப்பட்டது.

கோழிவிலை

பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 86 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com