என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பரமேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் நந்திபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதேபோல் பாண்ட மங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தரு ளியுள்ள பருவதீஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    • வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலுார் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளை வித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தேங்காய்

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 32.57 குவிண்டால் எடை கொண்ட 8 ஆயிரத்து 613 தேங்காய் விற்பனைக்கு வந்தது.இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.24.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.00-க்கும், சராசரி விலையாக ரூ.23.19-க்கும் என மொத்தம் ரூ. 74ஆயிரத்து 825-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல்511.34 குவிண்டால் எடை கொண்ட 1019-மூட்டை தேங்காய் பருப்பு விற்ப னைக்கு வந்தது.

    இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.72.89-க்கும், சராசரி விலையாக ரூ.77.29-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.77-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.59.19-க்கும், சராசரி விலையாக ரூ.71.99-க்கும் என மொத்தம் ரூ.37லட்சத்து52ஆயிரத்து 905-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 38 லட்சத்து27 ஆயிரத்து 730-க்கு விற்பனையானது.

    • தனியார் கல்லூரியில் டிரைவராக சங்ககிரி அருகே மரவம்பா ளையத்தான் காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 64) என்பவர் பணியாற்றி வருகிறார்.
    • நிலை தடுமாறி, முனியப்பன் கோவில் அருகே செல்லும் போது சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள டிவைடரில் மோதி பஸ் கவிழ்ந்தது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பல்லக்கா பாளையம் அருகே மங்கரங்கம்பாளையம் தனியார் கல்லூரியில் டிரைவராக சங்ககிரி அருகே மரவம்பா ளையத்தான் காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 64) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரி யில் பணி யாற்றும் 19 பணி யாளர்களுடன் பேருந்தில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நிலை தடுமாறி, முனியப்பன் கோவில் அருகே செல்லும் போது சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள டிவைடரில் மோதி பஸ் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 19 பேரும் காயமடைந்தனர்.

    இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடை பெற்றது.
    • முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடை பெற்றது. முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒவ்வொரு வரும் தாங்கள் படித்த தரு ணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறு வனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

    வசதி இல்லாத மாணவ, மாண வியர்களுக்கு உதவு தல், பள்ளிக்கு தேவையான அத்தியாவசியமான உபக ரணங்கள் வாங்கி தருவது, ஒவ்வொரு ஆண்டும் சங்க கூட்டம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு, புதிய மாணவ, மாண வியர்களுக்கு அரசு பள்ளியின் சிறப்பம்சம் குறித்து எடுத்துரைத்தல், அரசு தேர்வுக்கு தேவையான உதவிகளை புதிய மாணவ, மாணவியர்களுக்கு செய்தல் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிர்வாகி லெவி பங்கேற்று, முன்னாள் மாணவர்களால் நன்கொடையாக வழங்கப் பட்ட குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஆசிரியைகள் ஹெலன் பிரசெல்லா, ஜாய்ஸ் அருள்செல்வி, மெர்சிபா குளோரி, ஸ்டெல்லா, சித்ரா, ஜமுனா, ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
    • நேற்று காலை முதல் மாலை வரை வெயில் பொது மக்களை சுட்டெரித்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் பொது மக்களை சுட்டெரித்தது. மாலை 5 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்ததால், சாலைகளில் மழைநீர்பெருக்கெடுத்து ஓடியது. பஸ் பயணிகளும், பொதுமக்களும் குடைபிடித்த வாறு சென்ற னர்.இந்த மழை யின் காரணமாக இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • சேலத்தில் இருந்து கரூர் நோக்கி அதி வேகமாக சென்ற லாரி ஒன்று மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் மணி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலூகா உழவர் பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் மணி( 55). கூலித் தொழிலாளி.

    இவர் இன்று காலை வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு படமுடி பாளையத்தில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி அதி வேகமாக சென்ற லாரி ஒன்று மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மணி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை பரமத்திவேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே மணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
    • இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கி ணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்ப னைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த 6-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.30-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு, ரூ. 4.35 ஆனது. பின்னர் 9-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.40 ஆனது. மீண்டும் 10-ந் தேதி 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டை விலை ரூ. 4.50 ஆனது. 11-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.55 ஆனது.இந்த நிலையில், மாலையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்த ப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.60 ஆக நிர்ணயி க்கப்பட்டது.

    கோழிவிலை

    பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 86 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் திடீர் ஆய்வு நடத்தினார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரிக்கும் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதி யில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் திடீர் ஆய்வு நடத்தினார்.

    ஆய்வில் சுகாதாரமற்ற முறையில் ஓட்டல்களில் உணவு தயாரித்து விற்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக ஓட்டல் கடைக்கு நோட்டீஸ் வழங்கி சுகாதாரமற்ற உணவுகளை பறிமுதல் செய்து ரூ.2 ஆயி ரம் அபராதம் விதித்தார்.

    மேலும் உணவு பாது காப்பு விதிமுறைப்படி உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என ஓட்டல் கடை மற்றும் பாஸ்ட் புட் உணவு தயாரிக்கும் கடை உரிமை யாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து பரமத்திவேலூர் பகுதி களில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரிக்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என உணவு பாது காப்பு துறை அலுவலர் செல்வக்குமார் தெரிவித்தார்.

    • நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை 2-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
    • அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது.

    பரமத்திவேலூர்:

    தமிழகத்தில் மணல் குவாரிகளில் சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை, திண்டுக்கல்லை சேர்ந்த தொழிலதிபர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் அமலாக்கத்துறையின் நேற்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

    அதன்படி நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் அள்ளி அதனை சேமித்து வைக்கும் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான மணல் கிடங்கிலும் மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் அமலாக்கத்துறையை சேர்ந்த 10 அதிகாரிகள், 7 பேர் கொண்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையுடன் செவிட்டுரங்கன்பட்டிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மணல் கிடங்கு அலுவலகத்தில் திடீரென சோதனையை தொடங்கினர்.

    இந்த சோதனையில் ஆற்றிலிருந்து எவ்வளவு மணல் அள்ளி வந்து சேமிக்கப்படுகிறது. அதில் எவ்வளவு மணல் விற்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் பதிவு மூலம் எவ்வளவு விற்பனை நடைபெற்று உள்ளது. அதற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது குறித்தும், அதற்கான ஆவணங்கள் முறையாக உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே மோகனூர் மணல் கிடங்குக்கு மணல் அள்ளி கொண்டு வரும் ஒப்பந்தத்தை புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா என்பவரும், குவாரியில் உள்ள மணலை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரும் பெற்று உள்ளனர். இவர்கள் இருவரும் புதுக்கோட்டையை சேர்ந்த மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரனுக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே நேற்று காலை அமலாக்கத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சோதனைக்கு வருவதை அறிந்த மணல் கிடங்கில் பணியாற்றி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், மணல் அள்ளும் பொக்லைன் எந்திர ஆபரேட்டர் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு வந்தபோது, அங்கு பணியில் இருந்தவர்களில் பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர் ஒருவர் மட்டுமே அலுவலகத்தில் இருந்தார். எனவே அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

    பின்னர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சங்கீதா மணல் குவாரிக்கு வரவழைக்கப்பட்டு, அவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 2-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. சோதனையையொட்டி மணல் குவாரிக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    • குமாரபாளையம் கவுரி தியேட்டர் பகுதியில் நேற்று இரவு 7 வயது சிறுமி ஒருவர் சாலையில் அழுதபடி நடந்து வந்துள்ளார்.
    • போட்டோ எடுத்து அனைத்து வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டார். பின்னர் ஒரு மணி நேரத்தில் இதனை கண்ட பெற்றோர் போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து நேரில் வந்தனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கவுரி தியேட்டர் பகுதியில் நேற்று இரவு 7 வயது சிறுமி ஒருவர் சாலையில் அழுதபடி நடந்து வந்துள்ளார். அதை கண்ட அப்பகுதி மக்கள் அந்த சிறுமியிடம் விபரம் கேட்க, அந்த சிறுமி எதுவும் பேசவில்லை.

    போலீஸ் நிலையம்

    உடனே அந்த சிறுமியை போலீஸ் நிலையத்திற்க்கு கொண்டு வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி விசாரித்தும் பலனில்லை. அந்த சிறுமி எதுவும் பேசவில்லை. உடனே போட்டோ எடுத்து அனைத்து வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டார். பின்னர் ஒரு மணி நேரத்தில் இதனை கண்ட பெற்றோர் போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து நேரில் வந்தனர்.

    ஒப்படைப்பு

    இன்ஸ்பெக்டர் விசார ணையில், நாராயண நகரில் வசிக்கும் பெற்றோர் செந்தில்குமார், பிரித்தா என்பதும், 7 வயது சிறுமியின் பெயர் பிரித்திகா என்பது தெரியவந்தது. விளையாடப் போகும் விஷயம் சம்பந்தமாக தாயார் திட்டியதாக தெரி கிறது. இதனால் கோபித்துக் கொண்டு வெளியில் வந்து விட்டார். இன்ஸ்பெக்டர் தவமணி எச்சரித்து, குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தார்.

    • தமிழக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
    • இதில் பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

    நாமக்கல்:

    தமிழக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 11 வயது பிரிவின் கீழ் நடந்த போட்டியில், குமாரபாளையம் அருகே தர்மதோப்பு, வாசுகி நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் சையத் பாசித் பங்கேற்று விளையாடி, 2-ம் பரிசு பெற்று சாதனை படைத்தார். இவருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. இவர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார். இவரை பள்ளியின் தலைமை ஆசிரியை நாகரத்தினம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜீனத், பி.டி.ஏ.தலைவர் தம்பி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் உள்பட பலர் வாழ்த்தினர்.

    • குமாரபாளையத்தில் சின்னப்ப நாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    குமாரபாளையத்தில் சின்னப்ப நாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்றுமுன்தினம் கணபதி யாகத்துடன் தொடங்கிய விழா பின்னர் பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து பம்பை, மேள, தாளங்கள் முழங்க, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். மாலையில் யாக சாலை பூஜைகள் தொடங்கி நேற்று காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக் குழுவினர் மற்றும் கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்தனர்.

    ×