search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி பேரூராட்சி பகுதியில் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை
    X

    பரமத்தி பேரூராட்சி பகுதியில் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை

    • குடிநீர் இணைப்பு பெற்று குடிநீர் பெரும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தெரிய வருகிறது.
    • குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பது சட்டப்படி அபராதத்திற்குரிய குற்றமாகும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சுப்ரமணியன் வெளியிடுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    பரமத்தி பேரூராட்சியில் பேரூராட்சி மூலம் குடிநீர் இணைப்பு பெற்று குடிநீர் பெரும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தெரிய வருகிறது. மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதால் அனைத்து இணைப்புகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பது சட்டப்படி அபராதத்திற்குரிய குற்றமாகும். எதிர்வரும் வறட்சிக்காலங்களில் இப் பேரூராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே குடிநீர் இணைப்பு பெற்றுள்ள உரிமையாளர்கள் மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பதை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    மீறி மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் பரமத்தி பேரூராட்சி குடிநீர் திட்ட துணை விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படுவதுடன் மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடிநீர் இணைப்புகள் முன்னறிவிப்பு இன்றி நிரந்தரமாக துண்டிப்பு செய்யப்படும் எனஅதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×