என் மலர்
நாமக்கல்
- வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி
- சிலைகள் ½ அடி முதல் 2 அடி வரை விற்ப னைக்கு உள்ளன. ½ அடி உள்ள விநாயகர் சிலைகளின் விலை ரூ.100-க்கும் விற்பனை
நாமக்கல்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனை நாமக்கல்லில் மும்முர மாக நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய வீடுகள் மற்றும் வேலை பார்க்கும் அலுவலகங்க ளில் விநாயகர் சிலைகளை வைத்து வழி படுவார்கள். அதன்படி வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டா டப்படுகிறது. இதனால் நாமக்கல்லில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்மு ரமாக நடந்து வருகிறது. கடைவீதி , சேலம் ரோடு, துறையூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பல வண்ணங்களில்...
இதுகுறித்து விநாயகர் சிலை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறும்போது:-
விநாயகர் சிலைகள் தரு மபுரி , கிருஷ்ணகிரரியில் இருந்து கொண்டுவரப்பட் டுள்ளன. சிலைகள் ½ அடி முதல் 2 அடி வரை விற்ப னைக்கு உள்ளன. ½ அடி உள்ள விநாயகர் சிலை களின் விலை ரூ.100-க்கும், 2 அடி உள்ள விநாயகர் சிலை ரூ.2 ஆயிரத்து 500-க்கும் விற்பனை செய்யப்ப டுகிறது. வண்ணம் தீட்டப்பட்ட ½ அடி உள்ள விநா யகர் சிலையின் விலை ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து சிலைகளுமே மண்ணால் செய்யப் பட்டவை ஆகும். மேலும் பல வண்ணங்களில் விநா யகர் சிலைகள் உள்ளன. இதனால் மக்கள் ஆர்வமாக வந்து வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விநாயகர் சிலை களின் விலை ரூ.10 மற்றும் ரூ.20 உயர்ந்து உள்ளது என்றார்.
குமாரபாளையம்
குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேசிய மகளிர் போலீஸ் தினம் விடியல் ஆரம்பம் சார்பில், அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியை பாரதி சால்வை அணிவித்து பாராட்டினார்.இதன் பின் பேசிய சந்தியா, காவல்துறை பணி கள் பற்றியும்,அந்த துறையில் தன்னுடைய பணியை பற்றியும், மாணவிகளுக்கு உடற் பயிற்சியால் ஏற்படும் நன்மைகளையும் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியம் பற்றியும் பேசினார். உதவி தலைமை ஆசிரியர் நவநீதன், ஆங்கில உச்சரிப்பு பயிற்சியாளர் சண்முகம், தீனா ஆகியோர் பங்கேற்றனர். போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாவிற்கு மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் சித்ரா, மல்லிகா, வினோதினி, மாவட்ட செயலாளர் காமராஜ் உள்பட பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதர பெண் போலீசாருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை மின் நிலையத்தில் நாளை (16-ந் தேதி) சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான பரமத்திவேலூர் பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், வி. சூரியாம்பாளை யம், வீராணம் பாளையம், கோப்பணம்பாளையம், குப்பிச்சி பாளையம், ஆகிய ஊர்களுக்கும் மேலும் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
- பொது மக்களிடம் இருந்து டெபா சிட் பெற்று நிதி மோசடி செய்துள்ளது
- இந்த வழக்கு விசாரணை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது
நாமக்கல்
நாமக்கல்லில் மோசடியில் ஈடுபட்ட ஈமு நிறுவ னத்தின் சொத்துக்கள் வரும் 20-ந் தேதி ஏலம் விடப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரி வித்துள்ளார்.இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவ லர் சுமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:-
நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் இயங்கி வந்த செல்லம் ஈமு பார்ம்ஸ் மற்றும் வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் பொது மக்களிடம் இருந்து டெபா சிட் பெற்று நிதி மோசடி செய்துள்ளது. இதன்பேரில் அந்த நிறு வனம் மீது நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கு விசா ரணை கோவையில் உள்ள, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்ற உத்திரவின்படி நிறுவனத்திற்கு சொந்தமான ப.வேலூர் தாலுக்கா பிள்ளைகளத்தூரில் உள்ள 2 வீட்டுமனைகள் மற்றும் ராசிபுரம் வட்டம், காட்டூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மனையும் ஏலம் விடப்பட உள்ளது.
இந்த ஏலம் இம்மாதம் 20-ந் தேதி மதியம் 2 மணிக்கு கலெக்டர் அலுவல கத்தில் ஏலம் விடப்பட உள்ளது. ஏல நிபந்தனைகள் நாமக்கல், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. மற்றும் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்க ளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளன.
ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அனைவரும், இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏல தேதிக்கு முன்பாக, நாமக்கல், பொருளாதார குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பா ளர் மூலமாக மேற்குறிப்பிட்ட சொத்துக்களை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிஷாந்தி திருமணத்திற்கு ஜவுளிகள் எடுக்க குடும்பத்தினர் அனைவரும் ஈரோட்டுக்கு சென்று இருந்தனர்.
- கந்தசாமியின் தாய் அருக்காணியிடம் பேச்சு கொடுத்து அவரை திசை திருப்பி வீட்டிற்குள் புகுந்தனர்.
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம் குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (54). இவர் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (45). இவர்களது மகள் நிஷாந்தி (23).
இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு ஜவுளிகள் எடுக்க குடும்பத்தினர் அனைவரும் ஈரோட்டுக்கு சென்று இருந்தனர்.
நகை, பணம் கொள்ளை
இந்தநிலையில் கந்தசாமியின் வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள் அங்கு தனியாக இருந்த கந்தசாமியின் தாய் அருக்காணியிடம் பேச்சு கொடுத்து அவரை திசை திருப்பி வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து லாக்கரில் நிஷாந்தியின் திருமணத்திற்கு சீர்வரிசை கொடுப்பதற்காக வைத்திருந்த நகை மற்றும் பணத்தை அள்ளிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து அருக்காணி கந்தசாமிக்கு தகவல் அளித்தார். இதையடுத்து கந்தசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 60 பவுன் நகை, ரூ.9 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் போலீசாருக்கு கந்தசாமி தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
4 தனிப்படை விசாரணை
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
- எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
பரமத்தி வேலூர்
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 110.45குவிண்டால் எடை கொண்ட 370-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.70-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.53-க்கும், சராசரி விலையாக ரூ.82.16-க்கும் என ரூ 8 லட்சத்து 35ஆயிரத்து 317-க்கு விற்பனையானது.
- சாலையின் அகலம் சுமார் 15 அடி என்ற அளவில் உள்ளது.
- குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. அதிக போக்குவரத்து உள்ள இந்த சாலையில், சாலையின் அகலம் சுமார் 15 அடி என்ற அளவில் உள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி பஸ்கள் வரும் நேரம், மாலையில் இதே போல் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் நேரம் உள்ளிட்ட பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலை நெடுக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.
வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை நாளன்று காலை முதல், இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி செல்லும் பேருந்துகள், பவானி பஸ் நிலையம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் செல்ல வழியில்லாமல் பயணிகள் தவிக்கும் நிலைக்கு ஆளாகி வருகிறார்கள்.
- கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது
- திருவிழா விசேஷங்கள் போன்ற காரணங்களால் பூ தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.
பரமத்தி வேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நகப்பாளையம், செல்லப்பம்பாளையம், பாகம் பாளையம், பெரிய மருதூர், தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. மேலும் சுப முகூர்த்த நாட்கள், கோவில் மற்றும் திருவிழா விசேஷங்கள் போன்ற காரணங்களால் பூ தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.300-க்கு விற்பனையானது நேற்று 700 ரூபாய்க்கும்,கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி 180 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி நேற்று 170 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இதே போல் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பந்தி பூ 170 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனையானது.
- குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிர மிப்புகள் அதிகம் உள்ளது.
- வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை நாளன்று காலை முதல், இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிர மிப்புகள் அதிகம் உள்ளது. அதிக போக்குவரத்து உள்ள இந்த சாலையில், சாலையின் அகலம் சுமார் 15 அடி என்ற அளவில் உள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி பஸ்கள் வரும் நேரம், மாலையில் இதே போல் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் நேரம் உள்ளிட்ட பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலை நெடுக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.
வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை நாளன்று காலை முதல், இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி செல்லும் பேருந்துகள், பவானி பஸ் நிலையம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் செல்ல வழியில்லாமல் பயணிகள் தவிக்கும் நிலைக்கு ஆளாகி வருகிறார்கள்.
- கடந்த 16.8.2023-ந்தேதி கடிதம் அனுப்பி மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தினேன்.
- தமிழக அரசு தற்போது அதற்கான பரிசீலனை செய்வதாக தெரிவித்து இருக்கிறது.
திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு காலிங்கராயன் அத்திக்கடவு அவிநாசி என்று பெயர் வைத்தால்தான் உண்மை நிலையை மக்கள் அறிய உதவும் என்று நான் கடந்த 10.4.2023 அன்று சட்டசபையில் பேசினேன். அதற்கு அன்றே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்தார். அதன் பிறகு கடந்த 16.8.2023-ந்தேதி கடிதம் அனுப்பி மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தினேன். தமிழக அரசு தற்போது அதற்கான பரிசீலனை செய்வதாக தெரிவித்து இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முட்டை விலை படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரு முட்டையின்விலை ரூ. 4.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 8 நாட்களில், 40 பைசா உயர்ந்துள்ளது. ஒரு முட்டை விலை ரூ. 4.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த செப். 6-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.30-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.35 ஆனது. பின்னர் தொடர்ந்து முட்டை விலை படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரு முட்டையின்விலை ரூ. 4.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.70 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 8 நாட்களில் ஒரு முட்டையின் விலை 40 பைசா உயர்ந்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ. 86 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
- மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- சுய உதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்று அரங்கு அமைக்க விரும்பினால், வருகிற 20-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர்.உமா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 கண்காட்சிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்தப்படுகிறது.
தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டி கையை முன்னிட்டு வரு கின்ற வருகிற 7-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநில அளவிலான கண்காட்சி நடைபெற வுள்ளது.
இக்கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள், பாரம்ப ரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள் போன்ற பொருட்களும், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பயன்பாட்டிற்கு கொலு பொம்மைகள், மண் பொம்மைகள், காகித கூழ் பொம்மைகள், விருந்தின ருக்கு வழங்கக் கூடிய நினைவு பரிசு பொருட்க ளான சிறிய சணல் பைகள், பனையோலை பெட்டிகள், சிறிய அளவிலான வண்ண காகித பைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், காட்டன் வேட்டி கள் போன்ற துணி வகைகள், சிவகங்கை மாவட்ட காரைக்குடி பலகாரங்கள் போன்ற தீபாவளி பலகாரங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது
எனவே நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்று அரங்கு அமைக்க விரும்பினால், வருகிற 20-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.






